31 March 2009

ஏ. ஆர். ரஹ்மான் சொட்கள்

ஏ.சே.திலீப்குமார் இயற்பெயர் கொண்ட ரஹ்மான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி பிறந்தார். அ. இர. இரகுமான்(அல்லா இரக்கா இரகுமான்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
1992 ஆம் ஆண்டு இசையுலகத்தில் காலடி எடுத்துவைத்த ரஹ்மான் இன்று ஒஸ்கார் வரை சென்றிருக்கிறார். இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவராக ஆகிய தொழில்வகையை நன்குகற்றறிந்தவர் தான் ரஹ்மான். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பல ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது, பப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹொலிவூட் திரைப்படமான ஸ்லம்டோக் மில்லியனர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. அதுமட்டுமல்ல ஒஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.81 ஆவது, 2009 ஆம் ஆண்டின் பிரமாண்டமான ஒஸ்கார் விருது விழர்வின்போது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

22 March 2009

கருணாநிதியின் வாழ்க்கைக் குறிப்புகள் சில..

கலைஞர் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் திருக்குவளை எனும் இடத்தில் 1924ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் திகதி பிறந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் மிக நீண்டகாலத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமாவார். திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி தமிழுலகுக்கு அறிமுகமான கருணாநிதி, 1969இல் தமிழகத்தின் முதல்வரானார்.


தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு.முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதிக்கு பத்மாவதி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் ஆகிய மூன்று மனைவிமார்களுடன் 6 பிள்ளைகள் முத்து, அழகிரி, ஸ்டான்லின், தமிழரசு ஆகிய 4 மகன்களுடன் கனிமொழி, செல்வி ஆகிய 2 மகள்கள் கொண்ட சிறிய குடும்பம் தான் கலைஞர் குடும்பம்.


தனது மாணவர் பருவத்தில் கருணாநிதி கல்வியில் நாட்டம் காட்டவில்லை. இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தனது விடலைப் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைக் கருணாநிதி உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருப்பெற்றது.
அரசியல் ஈடுபாடு முழு நேர அரசியல் ஈடுபாட்டுடன் தன் பதினான்காவது வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டவர். ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற திராவிட இயக்கத்தின் முதலாவது மாணவர் பிரிவைத் தோற்றுவித்தவர். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்த உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தி.மு.க.வின் பொருளாளராக 1961ஆம் ஆண்டு பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி, 1957ஆம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் இவர் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
1969-1971 — அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 — இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 — நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 — நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை — ஐந்தாம் முறையாக ஆட்சி

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அக்கட்சி வலுவடைந்தபின் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு இவரை உள்ளாக்கியது. திராவிடக் கழக கொள்கைக்கு முற்றிலும் முரணான இச்செயலை அரசியல் சானக்கியத்தனம் எனக் கருணாநிதியின் ஆதரவாளர்கள் சொல்லிச் சமாளித்தனர். தமிழே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி வந்த கருணாநிதி, 2009இல் ஆயிரமாயிரம் தமிழர்களை இலங்கை பேரின அரசு இனப்படுகொலை செய்யும்போது, மருத்துவமனையில் காலங்கழித்தது, அவரது நாடகத் தன்மையைப் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

கருணாநிதியை ஆதரித்து வந்த தமிழ் தேசியவாதிகளிடத்திலும் அவருக்கிருந்த ஆதரவு சரிந்தது. உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் காலத்தைக் கழிக்கும் வயோதிபர் தமிழகத்தின் முதல்வராக இருப்பது முறைதானா என்ற கேள்வியும் எழும்பத் தொடங்கியது. 1984-1986நாற்பதாண்டுகளுக்கும் மேலவை சட்டமன்றப் பேரவை, மேலவை உறுப்பினராக இருந்தார். 1957 -முதல் 2006 வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களிலும் வென்றுள்ளார்.எதிர்க் கட்சித் துணைத் தலைவர்-1962-1967.சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக 1977 முதல் 1983 வரை பணியாற்றியுள்ளார்.
1967-69 இல் தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1969 முதல் 1971 வரை 1971 முதல் 1976 வரை 1989 முதல் 1991 வரை 1996 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர். பல அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், ரயில்வே நிலையப் பெயர் மாற்றப் போராட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றுள்ளார்.

1983இல் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகப் போராடும் வகையில் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார். ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, சங்கத் தமிழ், குறளோவியம், பொன்னர் சங்கர், திருக்குறள் உரை மற்றும் உரைநடையிலும் கவிதையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப் பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் மற்றும் பல மேடை நாடகங்களை எழுதியது மட்டுமல்ல, ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமகன். தேவகி, பராசக்தி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா, அம்மையப்பன், மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, ராஜா ராணி, புதையல், புதுமைப்பித்தன், எல்லோரும் இந்நாட்டு மன்னர். குறவஞ்சி, தாயில்லாப் பிள்ளை, காஞ்சித் தலைவன், பூம்புகார், பூமாலை, மணிமகுடம், மறக்கமுடியுமா?, அவன் பித்தனா?, பூக்காரி, நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், நியாயத் தராசு போன்ற எழுபதுக்கும் மேற்பட்ட திரைக்காவியங்களையும் எழுதியது மட்டுமல்ல கண்ணம்மா, மண்ணின் மைந்தன், பராசக்தி, புதிய பராசக்தி, மந்திரகுமாரி, பாலைவனப்பூக்கள், மனோகரா, உளியின் ஓசை என பல திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார் நம்ம கருணாநிதி.
மே 13, 2006இல் தனது 82ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் அதிக வயதுகொண்ட முதலமைச்சர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்ட கருணாநிதி, இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

1971இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் ‘முனைவர் ‘ பட்டம்; தி கவுன்சில் ஒப் டாக்டர் ஒப் பிலாஸபியால் வழங்கப்பட்ட ‘தமிழவேள்’ பட்டம் வழங்கப்பட்டது மட்டுடல்ல “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ‘இராஜராஜன் ‘ விருதும் வழங்கப்பட்டது. ‘குடியரசு’ பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ‘முத்தாரம்’ சஞ்சிகைக்கு உயிரூட்டினார்.
தனது சிறுவயதிலேயே ‘முரசொலி ‘ என்ற பத்திரிகையை முதலில் மாத இதழாக, பின்னர் வார இதழாக, பின் நாளிதழாகத் தொடக்கி நடத்தியவர். இப்பத்திரிகையே தற்போது இவருடைய எண்ணங்களை, எழுத்தை, சிந்தனையை, குரலை வெளிப்படுத்தும் இதழாக வந்து கொண்டிருக்கிறது.
மாநில அரசின் செய்தி வெளியீடாக வரும் படச்செய்தி சுருளை தோற்றுவித்தவரும் இவரே. அரசு இதழான ‘தமிழரசு ‘ இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் தோற்றுவித்தவர் கருணாநிதி தான். எல்லோராலும் அன்பாக ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுபவர். தில்லையாடி வள்ளியம்மை நகர், கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகிய பயனுள்ள கட்டிடக் கலையையும் உருவாக்கி நற்பணிகளையும் செய்துள்ளார்.


மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர், நிர்வாகி, நாடகாசிரியர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், எழுத்தாளர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த கவிஞர் மற்றும் ஜனநாயகவாதி போன்ற பல துறைகளில் கலைஞரை அசைக்கமுடியாது என்பது குறிப்பிட்டாகவேண்டும்.


19 March 2009

இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கைகள் சில.....

உலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை பிரகாரம் கடந்த வருடத்தின் இறுதியில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது என ஊரோடி (oorodi.com) இணையத்தளத்தை மேய்ந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடுவாரியாக இணையப்பயனாளர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)

1. சீனா - 179.7

2. ஐக்கிய அமெரிக்கா - 163.3

3. ஜப்பான் - 60.0

4. ஜேர்மனி - 37.0

5. ஐக்கிய இராச்சியம் - 36.7

6. பிரான்ஸ் - 34.0

7. இந்தியா - 32.1

8. ரஷ்யா - 29.0

9. பிரேசில் - 27.7

10.தென்கொரியா 27.3

11.கனடா - 21.8

12. இத்தாலி - 20.8

13. ஸ்பெயின் - 17.9

14. மெக்சிகோ - 12.5

15. நெதர்லாந்து - 11.8

15 March 2009

ஓமக்குச்சி வாழ்க்கை வரலாறு சிறு குறிப்பு

ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த 73 வயதான நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், சென்னையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்தார்.எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.
குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், சூரியன், ஜென்டில்மேன், இந்தியன் உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்து இருந்தார்.

இரண்டு வருடமாக தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் சிவராமன் தெருவில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றார். அவருடைய உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் தனது 73வது அகவையில் மரணம் அடைந்தார்.

ஓமக்குச்சி நரசிம்மனின் உடல் சென்னை திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அவருடைய உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழில் 'அவ்வையார்' (1953) படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். 'திருக்கல்யாணம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, "திருக்கல்யாணம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' போன்ற ஹிட் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.


"இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், "தலைநகரம்' படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இருக்கிறார். 'இந்தியன் சமர்' என்ற ஆங்கில படம் உட்பட மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் ஓமக்குச்சி நடித்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன் போன்ற பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார். நாடக இயக்குனர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கரெக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.

ஓமக்குச்சி நரசிம்மன் மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் காமேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இரண்டாவது மகளான நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவரும் தந்தையின் இறுதிக்கிரியைக்காக சென்னை திரும்பினார்.

மரணம் அடைந்த ஓமக்குச்சி நரசிம்மன் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்.ஐ.சி.யில் பணியாற்றிய இவர் பழைய நடிகர் சுருளிராஜனுக்கு நெருக்கமானவர்.

150-க்கும் மேல் நாடகங்களில் நடித்துள்ளார். "நாரதரும் 4 திருடர்களும்" என்ற நாடகத்தில் ஓமக்குச்சி என்ற பெயரில் நடித்தார். அதுவே பின்னாளில் அவர் பெயரோடு இணைந்தது.

"சூரியன்" படத்தில் ஓமக்குச்சி நரசிம்மன் மேல் எரிச்சலாகும் கவுண்டமணி "நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா" என்று பேசும் வசனம் பிரபலம். அதேபோல், "இந்தியன்" படத்தில் கவுண்டமணியிடம் கைகள் நடுங்கி டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது... "முதல்வன்" படத்தில் வடிவேலுவின் இடுப்பில் குத்தி ""போடா பண்ணி"" என திட்டவைத்து மேலதிகாரியிடம் மாட்டி விடுவது... போன்றவையும் வயிறுநோக சிரிக்க வைக்கும் காமெடிகள். காதலன் படத்தில் வடிவேலுவுக்கு இவருக்குமான நகைச்சுவை காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது.

'நாரதரும் 4 திருடர்களும்' நாடகத்தில், ஓமக்குச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலிருந்து ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைக்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல தனது ஒ‌‌‌‌ல்‌லியான தேக‌த்தா‌ல் ஓம‌க்கு‌ச்‌சி எ‌ன்ற அடைமொ‌ழியை பெ‌ற்றதுட‌ன் ர‌சிக‌ர்க‌ள் ம‌ன‌திலு‌ம் ‌நீ‌ங்காத இட‌ம் ‌பிடி‌த்தவ‌ர் இவ‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

14 March 2009

கி.மு காலத்தில் இருந்த இணையத்தளம் எப்படி இப்ப எப்படி இருக்கிறது என அறிய

உங்கள் இணையத்தளம் கி.மு காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்ற மாற்றங்களை தெரிந்து கொள்ள உதவும் தளம் தான் http://www.archive.org/


இத்தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் அந்த இணையத்தளமானது நீங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.


நீங்கள் படத்தில் பார்ப்பது 1996 ஆம் ஆண்டு yahoo முதல் முதலாக வெளியிட்ட இணையப் பக்கமாகும். நீங்கள் விரும்பிய முகவரியைக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்ற மாற்றத்தையும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் இடையில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றத்தையும் ஆல்பம் போல படம் பிடித்துக்காட்டுகிறது இந்த அற்புதமான இணையத்தளம்.


ஒருமுறை சென்று உங்கள் இணையத்தள முகவரியைக் கொடுத்துப் பாருங்கள் எப்படி இருந்த இணையத்தளம் இப்படியாகி விட்டது என்று சொல்லுவீங்கள்.

11 March 2009

மிஸ்கோலை மிஸ்ஸாக்குவது எப்படி?

மொபைலில் மிஸ்கோல் விடும் பெண்களை மிஸ்ஸாக்குவது எப்படி என்று கேட்கின்றீர்களா? வெரி சிம்பிள் உங்கள மொபைலை எடுத்து மிஸ்கோல் விடும் போனுக்கு கோல் எடுத்து மிஸ் நீங்க மிஸ்ஸாக விரும்புகின்றீர்களா என்று கேட்டால் போதும் ஓகே சொன்னால் பிறகென்ன புக் பண்ணவேண்டியது தானே.
என்டு சொல்லப்போறன் எண்டா நினைச்சீங்க பொடிப் பயலுகளா. அது தான் இல்லை.

நான் சொல்ல வந்த மிஸ் தவறப்பட்ட அழைப்பை தவறாக்குவது எப்படி என்பதே.

உங்களுக்கு வரும் அநாவசிய அழைப்புக்களை தவிர்க்க பயனற்ற டிப்ஸ் ஒன்று

மிஸ்கோல் அடிக்கும் நம்பரை பொலிஸிற்கு கொடுக்கப்போறன் என்டு மிரட்டுவதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலம் என்டால் மிஸ்கோலாக வரும் அழைப்புக்களை நிறுத்தி வைத்தல் (Block செய்தல்) அல்லது மிஸ்கோல் பார்ட்டி கோல் எடுத்தா ஓகே செய்து விட்டு வானொலி பெட்டிக்கு அருகில் வைத்தல் அல்லது பழைய பாட்டுப்போட்டு விடலாம். அல்லது ஓகே செய்து விட்டு பேசாமல் பொக்கட்டுக்குள் போட்டுவிடுங்கள். எடுத்த மிஸ்பார்ட்டி ஹலோ ஹலோ என்று லோலோ என்று பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் அதைக்கணக்கெடுக்காமல் விட்டால் சரி.

10 March 2009

வைரஸ் தொல்லையா? பரிசோதிக்கலாம் வாங்க!


நீங்கள் பயன்படுத்தும் அன்டிவைரஸ் சொப்ட்வெயார் பாதுகாப்பானதா என்று அறிய சின்ன ஒரு டெஸ்ட்டிங்.
நோட்பாட் கோப்பொன்றைத் திறந்து கீழே உள்ளதை கொப்பி செய்து அதில் ஒட்டுங்கள். அதாவது paste செய்யுங்கள். X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* பின்னர் அந்த கோப்பினை fakevirus.exe என்று பெயர் கொடுத்து உங்கள் கணினியில் டெஸ்ரொப்பிலே அல்லது வேறு எங்கயாவது சேமியுங்கள்.

நீங்கள் சேமித்த பைல் உடனேயே அழிக்கப்பட்டால் உங்கள் அன்டிவைரஸ் மென்பொருள் சிறந்தது என்பதையும் அப்டேட் செய்யப்பட்டதுதான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

உடனே அக்கோப்பு அழிக்கப்படாவிட்டால் மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். அல்லது சிறந்த வேறொரு மென்பொருளுக்கு மாறுங்கள்.

09 March 2009

காந்தியின் பொருட்கள் ஏலத்தில்சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களான க‌ண்ணாடி, பொ‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு சோடி கால‌ணிக‌ள்,
த‌ட்டு, குவளை ஆகியன நியூயோர்க்கிலுள்ள பழம்பொருள் காட்சியகத்தில் பொருட்களின் உரிமையாளரான ஜே‌ம்‌ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில் விட்டார். 18 இலட்ச அமெரிக்க டொலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் வாங்கியுள்ளார்.


இந்த ஏலத்தில், பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி டோனி பேடி, 1.8 மில்லியன் ( 18 இலட்சம்) அமெரிக்க டொலர்கள் கொடுத்து காந்தியின் பொருட்களை வாங்கியுள்ளார்.
இதையெல்லாம் ஏலத்தில் வாங்குகிறார்களே மகாத்மா காந்தி பயன்படுத்திய வேட்டியும் கோமணத்துண்டும் ஏன் ஏலத்தில் வரவில்லை என்று கேட்பது புரிகிறது, இதுகூடவா தெரியல 60 வருஷமாக கோவணத்துண்டு இருக்குமா என்ன?

05 March 2009

அடிவாங்கி பழகிய இலங்கை அணி

துடுப்பாட்டத்திலும் சரி அடிவாங்குறதிலும் சரி இலங்கை அணி நன்கு பழக்கப்பட்டு விட்டது.03 March 2009

இயமனின் இணையத்தளமுகவரி

இயமனின் இணையத்தளமுகவரிக்கு சென்று இறப்பை தீர்மானியுங்கள்! நீங்கள் எப்போது இறக்கப் போகின்றீர்கள் என்று இப்பவே இந்த நிமிடமே ஊகித்துக் கொள்ளலாம். எப்படி என்று கேட்கின்றீர்களா?
இதோ இயமனின் இணையத்தள முகவரி http://www.deathclock.com/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று உங்களின் பிறந்த திகதி மற்றும் உங்களின் தங்கமான மேனியின் நிறை மற்றும் மாஸ் பொடி அளவை கொடுத்ததுமே கணக்கிட்டு நீங்கள் இத்தனையாம் ஆண்டு இத்தனையாம் திகதி பாடை கட்டப்போறாங்கள். எண்டு கூட்டிக் கழிச்சு சொல்லும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எனது விபரங்களை இட்டுப் பார்த்ததில் 70 வயசில சாகப்போகின்றாய் என்று எச்சரிக்கிறது. இந்த இணையத்தளம்.