ஏ. ஆர். ரஹ்மான் சொட்கள்

ஏ.சே.திலீப்குமார் இயற்பெயர் கொண்ட ரஹ்மான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி பிறந்தார். அ. இர. இரகுமான்(அல்லா இரக்கா இரகுமான்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
1992 ஆம் ஆண்டு இசையுலகத்தில் காலடி எடுத்துவைத்த ரஹ்மான் இன்று ஒஸ்கார் வரை சென்றிருக்கிறார். இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவராக ஆகிய தொழில்வகையை நன்குகற்றறிந்தவர் தான் ரஹ்மான். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பல ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது, பப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹொலிவூட் திரைப்படமான ஸ்லம்டோக் மில்லியனர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. அதுமட்டுமல்ல ஒஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.



81 ஆவது, 2009 ஆம் ஆண்டின் பிரமாண்டமான ஒஸ்கார் விருது விழர்வின்போது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Comments