ஓமக்குச்சி வாழ்க்கை வரலாறு சிறு குறிப்பு

ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த 73 வயதான நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், சென்னையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்தார்.



எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.
குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், சூரியன், ஜென்டில்மேன், இந்தியன் உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்து இருந்தார்.

இரண்டு வருடமாக தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் சிவராமன் தெருவில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றார். அவருடைய உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் தனது 73வது அகவையில் மரணம் அடைந்தார்.

ஓமக்குச்சி நரசிம்மனின் உடல் சென்னை திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அவருடைய உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழில் 'அவ்வையார்' (1953) படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். 'திருக்கல்யாணம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, "திருக்கல்யாணம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' போன்ற ஹிட் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.


"இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், "தலைநகரம்' படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இருக்கிறார். 'இந்தியன் சமர்' என்ற ஆங்கில படம் உட்பட மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் ஓமக்குச்சி நடித்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன் போன்ற பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார். நாடக இயக்குனர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கரெக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.

ஓமக்குச்சி நரசிம்மன் மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் காமேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இரண்டாவது மகளான நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவரும் தந்தையின் இறுதிக்கிரியைக்காக சென்னை திரும்பினார்.

மரணம் அடைந்த ஓமக்குச்சி நரசிம்மன் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்.ஐ.சி.யில் பணியாற்றிய இவர் பழைய நடிகர் சுருளிராஜனுக்கு நெருக்கமானவர்.

150-க்கும் மேல் நாடகங்களில் நடித்துள்ளார். "நாரதரும் 4 திருடர்களும்" என்ற நாடகத்தில் ஓமக்குச்சி என்ற பெயரில் நடித்தார். அதுவே பின்னாளில் அவர் பெயரோடு இணைந்தது.

"சூரியன்" படத்தில் ஓமக்குச்சி நரசிம்மன் மேல் எரிச்சலாகும் கவுண்டமணி "நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா" என்று பேசும் வசனம் பிரபலம். அதேபோல், "இந்தியன்" படத்தில் கவுண்டமணியிடம் கைகள் நடுங்கி டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது... "முதல்வன்" படத்தில் வடிவேலுவின் இடுப்பில் குத்தி ""போடா பண்ணி"" என திட்டவைத்து மேலதிகாரியிடம் மாட்டி விடுவது... போன்றவையும் வயிறுநோக சிரிக்க வைக்கும் காமெடிகள். காதலன் படத்தில் வடிவேலுவுக்கு இவருக்குமான நகைச்சுவை காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது.

'நாரதரும் 4 திருடர்களும்' நாடகத்தில், ஓமக்குச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலிருந்து ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைக்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல தனது ஒ‌‌‌‌ல்‌லியான தேக‌த்தா‌ல் ஓம‌க்கு‌ச்‌சி எ‌ன்ற அடைமொ‌ழியை பெ‌ற்றதுட‌ன் ர‌சிக‌ர்க‌ள் ம‌ன‌திலு‌ம் ‌நீ‌ங்காத இட‌ம் ‌பிடி‌த்தவ‌ர் இவ‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Comments

'நாரதரும் 4 திருடர்களும்' நாடகத்தில், ஓமக்குச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலிருந்து ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைக்கப்பட்டார்.//

மீண்டும் மீண்டும் வரும் இந்த வரிகளில் இரண்டை நீக்கலாம் ..
தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு
Anonymous said…
சுபாசு உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி