காந்தியின் பொருட்கள் ஏலத்தில்



சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களான க‌ண்ணாடி, பொ‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு சோடி கால‌ணிக‌ள்,
த‌ட்டு, குவளை ஆகியன நியூயோர்க்கிலுள்ள பழம்பொருள் காட்சியகத்தில் பொருட்களின் உரிமையாளரான ஜே‌ம்‌ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில் விட்டார். 18 இலட்ச அமெரிக்க டொலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் வாங்கியுள்ளார்.


இந்த ஏலத்தில், பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி டோனி பேடி, 1.8 மில்லியன் ( 18 இலட்சம்) அமெரிக்க டொலர்கள் கொடுத்து காந்தியின் பொருட்களை வாங்கியுள்ளார்.
இதையெல்லாம் ஏலத்தில் வாங்குகிறார்களே மகாத்மா காந்தி பயன்படுத்திய வேட்டியும் கோமணத்துண்டும் ஏன் ஏலத்தில் வரவில்லை என்று கேட்பது புரிகிறது, இதுகூடவா தெரியல 60 வருஷமாக கோவணத்துண்டு இருக்குமா என்ன?

Comments