17 January 2016

Hello Blogger

Hi Bloggerhttp://tombirkenmeyer.com/cream.php?west=d1ta17sd0nrprq4


kt_sarangan@yahoo.com

19 September 2014

பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த சிங்கள வைத்தியருக்கு ஆப்பு

லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.


மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை இலாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதன்போது தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிரேஷ்ட வைத்தியரான இதமல்கொட முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் எனவும், தற்போது இருதயம் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2005ம் ஆண்டு அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றுள்ளார்.


இவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார்.
பிரித்தானிய மருத்துவ கழகம் இவ்வழக்கு தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் பதவியை துறந்தார்

ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஷ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கையை முன்வைத்த பிரசாரத்துக்கு அலெக்ஷ் சால்மண்ட் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்தாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் பிரிவினைக்கான கோஷம் ஒன்று தொடர்பில் இலங்கையில் கருத்துக் கோரப்பட்டால் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள் என்றே தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.
ஸ்கொட்லாந்தில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அது போன்ற ஒரு ஏற்பாடு இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு கூறினார்.


ஸ்கொட்லாந்தில் காலம்காலமாக அங்குள்ள மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதன் இறுதியிலேயே இப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர்,
ஆனால் இலங்கையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய இலங்கை - இந்திய ஒப்பந்தம் போன்ற வாய்ப்புக்களை இலங்கை தமிழ் தலைவர்கள் தவறவிட்டு விட்டதாகவும் கூறினார்.

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதான வாக்கெடுப்பு 55க்கு 45 வீதத்தினால் தோல்வி
ஸ்கொட்லாந்து வாக்காளர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து பிரிவதா? இல்லையா? என்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று ஸ்கொட்லாந்தில் நடைபெற்றது.

15 August 2014

'அஞ்சான்' திரைப் பட விமர்சனம்

 அஞ்சான் படம் நோஞ்சான்
நான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப் படமும் ஓடியதில்லை (கண்ணுக்குள் நிலவு, ஷாக், பீமா, அருள் இன்னும் சில). அதை விட முக்கியம் எனக்கு பிடித்ததேயில்லை. (நிறைய ஓடாத படங்கள்தான் நமக்குப் பிடிக்குமே, அன்பே சிவம் போல)  ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால்(?) இன்று முதல் நாள் முதல் ஷோ அஞ்சான் பார்த்து விட்டேன்.
இந்தப் படம் ஓடினால் "எப்படி ஓடியது?" என்றெல்லாம் கேள்வி தேவையில்லை. ஏழாம் அறிவு, வேலாயுதம், ஆரம்பம், ஜில்லா, வீரம் எல்லாம் எப்படி ஓடியதோ, அதே போல இதுவும் ஓடியிருக்கும் என்று நினைக்க வேண்டியதுதான். அஞ்சானும் அந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டது. இப்படியொரு படத்திற்கு என்னுடைய மாதமொரு பதிவு என்ற சபதத்தை உடைத்து, 75ஆவது பதிவையும் (விளம்பரம்) போடுவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மக்களின் நலன் கருதி வெளியிடுகிறேன். 

கதை என்று பார்த்தால், தன் சகோதரன் ராஜுவைத் தேடி மும்பை வருகிறார் கிருஷ்ணா எனும் சூர்யா. இங்கு வந்தால்தான் தெரிகிறது ராஜூ ஒரு பெரிய ரவுடி, அவனையும் அவனது உயிர் நண்பனையும் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று. இவனையும் கொல்ல வேண்டும் என்று அந்த கும்பல் துரத்த, சில பல திருப்பங்களுடன் இனிதே படம் முடிகிறது.

இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைதான். ஆனால், 'டிவிஸ்ட்' என்று லிங்குசாமி எதெல்லாம் நினைக்கிறாரோ, அது எல்லாம் குழந்தை கூட சொல்லும். படம் பார்க்கும்போது, எனக்கு கேபிள் சங்கர் எழுதியஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது.

லிங்கு சார், கே(G)ட்ட அடைக்கிறது எல்லாம் ஒரு படத்துல சரி. இன்னும் பத்து படத்துக்கு அதே சீன வக்கினும்னு நெனச்சா எப்படி. இப்பல்லாம் ரெண்டு வயசு கொழந்தையே, ஒரு தடவ பார்த்த பாட்ட, அடுத்த வாட்டி போட்டா மாத்த சொல்லுது (அனுபவம்). இது சூர்யாவுக்காக பண்ணுன மூணாவது கதையாம். மீதி இருந்த ரெண்டு கதைல ஒன்னத்தான் கார்த்தி அடுத்து நடிக்கப் போற படமாம். மூணாவது கதையே கேவலமா இருக்குன்னா, மீதி ரெண்டு இன்னும் எவ்ளோ கேவலமா இருக்கும்? ப்பா, முடியல.
படத்துல, கிருஷ்ணாகிட்ட ஒருத்தர் கதை சொல்லுவார் "இந்த எடத்துக்கு வர ராஜுவும், சந்துருவும் என்ன வெல கொடுத்தாங்க தெரியுமா?" என்பார். உடனே, பிளாஷ்பேக் வரும். சரி ஏதோ அழுத்தமான காட்சிகள் வரும் என்றால், ஐட்டம் சாங் வருகிறது. அது முடிந்தவுடன் மீண்டும் அதே காட்சி வருகிறது. என்ன எழவோ? இந்த கண்றாவி போதாதென்று காதல் வேறு.

"நிதானமா நின்னு யோசி, உனக்கானவன் உன் கண்ணுல படுவான்" என்று நாயகிக்கு நாயகனே சொல்லுவார் (பிச்சக்காரனுக்கு செக்யுரிட்டி பிச்சக்காரனே, இதுதான் எனக்கும் தோணியது). அப்படி நாயகி யோசிக்கும்போது, நாயகன் அந்தப் பக்கம் போய், துப்பாகியால் ஒருவனை சுடுவார். உடனே நாயகிக்கு காதல் வருகிறது. (இந்த வகையில் எனக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் பரவாயில்லை. பில்லா படத்திலும் சரி, ஆரம்பம் படத்திலும் சரி, தேவையில்லாத காதல் காட்சிகள் நாயகன் அஜித்துக்கு இல்லை. அவரக்கு அஜித்தின் மேல் என்ன எரிச்சலோ) 

படத்தில் நகைச்சுவைக்கு குறையே இல்லை. சூரி இருப்பதால் சொல்லவில்லை. அது மொக்கை. நாயகன் ஒரு பெரிய தாதா. நாயகியைக் கடத்தி விட்டதாக போலிஸ் அவரை இரண்டு முறை துரத்துகிறது. நாயகி காதலில் விழுந்து, நாயகனுடன் சுற்றுபோது மீண்டும் நாயகியைக் காணாமல் காவல்துறை தேடுகிறது. அப்போது நாயகனுக்கு போன் பண்ணி "இந்த முறையும் அந்தப் பெண்ணைக் காணவில்லை, ஆனால் நாங்கள் உங்களை சந்தேகப்படவில்லை. இது பார் யுவர் இன்பார்மேசன்" என்பார்கள். உடனே நாயகன் "இல்ல அவ என்னோடத்தான் இருக்கா, நாங்க லவ் பண்றோம். திஸ் இஸ் பார் யுவர் இன்பார்மேசன்" என்பார். இந்த லட்சணத்தில் பெண்ணின் அப்பா, காவல் துறை உயர் அதிகாரி வேறு. இனிமே நான் ஆபிஸ்ல மெயில் அனுப்பும்போது எப்படி FYI போடுவேன்? கன்றாவிடா.

அதே போல உயிருக்கு பயந்து ஓடி ஒளிபவன், ஜாலியாக குதிரைப் பந்தயம் பார்த்துகொண்டிருப்பான். திருடும் ஏழை சிறுவன், ஆப்பிள் லாப்டாப்பை திறந்து உள்ளே உள்ள போட்டோவை பார்க்கிறான். ராஜு பாயை, ஊரில் உள்ள அனைவரும் பார்க்கும் இடங்களில்தான் சுற்றுகிறார், ஆனால் பாருங்கள் வில்லன்களுக்கு மட்டும் எங்கே என்று தெரிய மாட்டேன்கிறது.
படத்தில் பரட்டை தாடி மீசை எல்லாம் வைத்து பக்கி மாதிரி ஒரு பாத்திரம் உள்ளது. "ராஜூ பாய்" என்று கத்துமே, அதேதான். அது எதற்கு இந்தப் படத்தில் என்றே தெரியவில்லை. அதே போல போலிஸ். நீங்கள் இந்த ட்ரைலரில் பார்க்கும் அனைத்துக் காட்சிகளுமே, படத்தின் கதையோட்டத்தில் மொக்கையாகவே இருக்கும்.

படத்தில் நாயகியைக் கடத்துவார்கள். சரி ரொம்ப சீரியசான சீன் என்று பார்த்தால், "நீங்க என்ன கடத்தல, நானாத்தான் வந்தேன், அதனால, இது உங்க கணக்குல வராது" என்பார். அப்போதே உஷாராகி கிளம்பியிருக்க வேண்டும். படத்தில் சூர்யா வேறு அடிக்கடி "நீ சாவுரதையும் நாந்தான் முடிவு பண்ணனும்" என்பார். அது படம் பார்ப்பவர்களைக் குறிக்கும் போல.

இந்தப் படம் பார்க்கும்போது, உங்களுக்கு கண்டிப்பாக லிங்குசாமியின் எல்லா படங்களும் நினைவுக்கு வரும். காட்சிகள் அது போல உள்ளது. பீமா படத்தில், திடீரென ரகுவனைக் கடத்தி வைத்திருப்பார்கள் எப்படி என்றெல்லாம் தெரியாது. அதே போல இதிலும் வரும். ஆனால், கொஞ்சம் உஷாராக, எப்படி என்று இரு காட்சிகள் வைத்து விட்டார்கள். கடைசி சண்டையில் ஒரு மிகப்பெரிய டிவிஸ்ட் உள்ளது. ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம். அது ஏற்கனவே ஜனா என்ற மொக்கைப் படத்தில் வந்து விட்டது.

படத்தில் நல்லதே இல்லையா? இரண்டு பாடல்களும், சில இடங்களில் பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவும் பரவாயில்லை. மற்றபடி சமந்தா வரும் பாடல்களில் ஏன் ஒரு பட்டனை மட்டும் போட்டிருந்தாரோ? ஒரு வேளை அதையும் கழட்டி விட்டிருந்தால் இன்னும், ம்ம்.

படத்தில் என்னைக் கவர்ந்த காட்சி, நாணயம் சுண்டி விட்டு விழுவதற்குள் அனைவரையும் வீழ்த்துவது. இது இரண்டு இடங்களில் இரு வேறு பாத்திரங்களுக்கு வரும். அது அவர்களின் நட்பின் புரிதலையும் காட்டும்.படம் பார்க்கவே முடியாதா என்றால், என்னால் முடியவில்லை. 
உங்களுக்கு சூர்யா பிடிக்கும் என்றால் சரி (சமந்தாவென்றாலும் சரி). மற்றபடி, கொஞ்சம் கஷ்டம்தான்.
மாற்றான் - தோற்றான். அஞ்சான் - நோஞ்சான். சூர்யா, நீ வேற வேலை இருந்தா போய் பார்யா.
எனக்கென்னவோ சிவகுமார் குடும்பத்திற்கே யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டனர் என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு பரிகாரம் செய்வது நல்லது. லிங்குசாமி சார், நீங்கள் படங்களை வெளியிடுவதோடு மற்றும் நிறுத்திக்கொள்ளலாம். முடியாது இப்படித்தான் என்று படம் எடுத்து எங்களைக் கொல்லலாம் என்று என்ன வேண்டாம். முடியல சார், சத்தியமா.

கடைசியாக ஒன்று. படத்தில், எல்லோரும் ராஜூ பாய், ராஜூ பாய் என்று கத்துவார்கள், பக்கத்தில் இருந்தவர் மெதுவாக சொன்னார் "ராஜூ பாய்தாங்க, ராஜி, ராஜாதில்லாம் தாங்க கேர்ள்".

அஞ்சான் பார்க்க தேவை, கொஞ்சம் அம்ருதாஞ்சன். அம்புட்டுதேன்.

"நீ என்ன பெரிய இவனா? முடிஞ்சா நீ ஒரு நல்ல படமா எடேன்" என்பவர்களின் கவனத்திற்கு மட்டும். நீங்கள் சரவணபவன் போய் சாப்பிடுகிறீர்கள். சாப்பாட்டில் ஏதோ ஒரு குறை. உடனே நீங்கள் உங்கள் முகப்புத்தகத்திலோ, கீச்சுகளிலோ இட்டு விடுகிறீர்கள். உடனே அந்த மேலாளர், "சார், சும்மா கொற சொல்லாதீங்க. நீங்க வேணும்னா வந்து இந்த ஹோட்டல நடத்திப் பாருங்க" என்றால் என்ன சொல்வீர்களோ அதே பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா? (2)

உங்களையே விரும்புகிறீர்களா? 
நீங்கள் உங்கள் மீதே அதிக காதல் கொண்டவராக உள்ளீர்களா? அதை தவிர வேறு எதுவும் உங்களை கவரவில்லையா? அப்படியானால் அதிக கவர்ச்சியுடன் அழகான பெண்ணை கண்ட போதிலும் கூட, உங்கள் மனதில் “அவளை விட நான் தான் அழகு” என்ற எண்ணம் தான் இருக்கும். மற்றவர்களின் மேல் குற்றம் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் கடினமானது, நம்மீது உள்ள குறைகளை நாம் உணர்வது. நீங்கள் இந்த வகை ஆணாக இருந்தால், ஏன் இன்னும் திருமண பந்தத்தில் ஈடுபடவில்லை என்று இப்போது புரிந்திருப்பீர்கள்.


பெண்களை விட விளையாட்டின் மீது மோகம் 
இந்த தலைமுறையை சேர்ந்த விளையாட்டு விரும்பிகள், கணிப்பொறி முன் அமர்ந்து விளையாடுவதில் அலாதி காதல் கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்த வரை ,விளையாட்டில் எதிரிகளை வீழ்த்தி, முதல் இடத்தை அடைந்து, உலக பதிவை உடைத்தெறிந்தால் தான் இடைவேளையே விடுவார்கள். ஆகவே இவ்வகையை சேர்ந்தவராக இருந்தால், ஏன் உங்களுக்கு இன்னும் காதலி இல்லை என்பது தெளிவாக புரிந்திருக்கும். அப்படியே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தாலும், ஒன்று நீங்கள் மாற வேண்டும் அல்லது அவள் உங்களுக்காக மாற வேண்டும்.

உறவில் ஈடுபட விருப்பமின்மை 
சுதந்திரமாக இருப்பதை தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் வாழ்க்கையில் ஏன் பெண் ஒரு அங்கமாக இல்லை என்பது உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. பொதுவாக பெண்களுக்கு ஒரு உறவில் ஈடுபடுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அவர்களை விட்டுவிட்டு வேறு பெண்ணை நீங்கள் நாடலாம் என்ற பயம் உங்கள் மீது இருக்கலாம். ஆனால் இந்த புதிய உறவு என்பது ஒவ்வொரு உறவுமுறையிலும் முக்கியமான ஒன்று. இந்த உறவின் மீது மதிப்பு வைத்துள்ள ஒரு ஆணை தான் பெண்கள் விரும்புவார்கள். இதை தவிர மற்றவை மீது விருப்பம் காட்டும் ஆணை, எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.வேலை இல்லையா? அனைத்து பெண்களுக்கும் அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்களின் மேல் நாட்டம் இருப்பதில்லை. ஆனால் சிலசமயங்களில் வெளியே செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக ஆசைப்படுவார்கள். வெளியே செல்வதென்றால், சாப்பிட ஏதாவது வாங்கி தருவது, பயணச் செலவை ஏற்பது, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவழிப்பது போன்றவைகளாகும். ஆனால் வேலை போய்விட்டதென்றால், இந்த செலவை எல்லாம் உங்களால் செய்ய முடியாது. அதனால் கையில் பணம் இல்லாத போது, காதல் போன்றவற்றில் விழமாட்டீர்கள்.

அமைதியானவரா? 
அமைதியாக இருந்து, மற்றவர்களுக்கு உதவி புரிந்து அனுசரணையாக நடந்து கொள்பவரை தான் ஒரு பெண் விரும்புவாள் என்று நீங்கள் நினைத்தால், முதலில் உண்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகை நல்ல குணங்கள் உள்ள ஆண்கள், பெண்களிடம் சகஜமாக பழகுவதற்கு அதிக காலம் எடுப்பார்கள். சில நேரம் மிகவும் அதிக நேரம் எடுப்பதால், அந்த பெண் அவன் வாழ்க்கையை விட்டே சென்றிருப்பாள். மேலும் பெண்ணின் கண்களுக்கு மிகவும் நல்லவனாக, அமைதியானவனாக காட்சி அளித்தால், உங்களை இளக்காரமாக நினைத்து விடுவாள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் ஒரு கால்மிதியை போல் பயன்படுத்தப்படுவீர்கள். ஆகவே மற்ற ஆண்களிடம் பழகும் போது, நீங்கள் காட்டும் உங்கள் கடுமையான பக்கத்தை பெண்கள் காணச் செய்ய வேண்டும். உங்களை இணங்கச் செய்வது கடினமாக இருந்தாலும், அதில் ஒரு இனிமையை அவர்கள் காண வேண்டும். மேலும் மற்றவர்களை தாக்கி, அவளை காப்பாற்றும் நிலை வரும் போது, நீங்கள் அப்படி செய்யவே அவள் விரும்புவாள்.


அதிக வினைத்திறமிக்கவரா? 
அடக்கம் என்ற குணத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அதற்காக எப்போது பார்த்தாலும், அதிக அடக்கத்துடன் இருந்தால், அது கொஞ்சம் ஜாஸ்தி தான். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் பேசும் போது, குறிக்கிட்டு கொண்டே இருப்பார்கள். சில கடுமையான கருத்துக்கள் மற்றும் நாகரீகமற்ற நகைச்சுவையை சொன்னாலும் கூட, யாருக்கும் சிரிக்க தோன்றாது. நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், ஒரு பெண்ணை பொறுத்தவரை அவள் நகத்தை துளையிடும் துன்பமாக நீங்கள் விளங்குவீர்கள். ஆகவே நீங்கள் ஒரு நல்ல நபராக மாறும் வரை, எந்த பெண்ணையும் தொந்தரவு செய்ய வேண்டாம்.


நண்பர்கள் என்ற பெயரில் ஒரு குரங்கு கூட்டத்துடன் இருக்கிறீர்களா? 
ஆண்களை, அவர்களின் சேர்க்கையை வைத்தே எடை போடலாம் என்று சொல்வார்கள். அதே போல் பெண்களும் கூட, அவர்களின் சேர்க்கையை வைத்து தான் அவர்களை எடை போடுகிறார்கள். இவ்வாறு உங்களை சுற்றி நண்பர்கள் என்ற பெயரில் குரங்கு கூட்டம் ஒன்று எப்போதும் உங்களை விட்டு பிரியாமல் இருக்கிறதா? அப்படியானால் கண்டிப்பாக ஒரு பெண்ணும் கிடைக்கப்போவதில்லை. மேலும் பழகும் பெண்ணுட் சிடுசிடுப்பாகவே நடந்து கொள்வார்கள். எனவே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், இதுவா, அதுவா என்று.சோம்பேறியா? 
ஷேவ்விங் செய்யவோ அல்லது குளிக்கவோ பிடிப்பதில்லையா? நினைவு தெரிந்த நாள் முதல் தலைமுடியை வெட்டவில்லையா? துணிமணிகளை சரிவர துவைக்காமல், அவைகளை அழுக்குடன் அணிகிறீர்களா? மிச்சமான உணவு அறையெங்கும் சிந்தி கிடக்கிறதா? அறையில் உள்ள பர்னிச்சர்கள் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறதா? அப்படியானால் நிச்சயம் காதல் உங்களை தேடி வராது.

ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா?

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். 


திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒருவேளை கண்டிப்பாக வரும். அந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னும், இன்னமும் கூட உங்களுக்கு தகுந்த பெண்ணை கண்டுபிடிக்க திணறினால், உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை என்னெவென்று ஆராய வேண்டும். சரி, நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதற்கான முக்கியமான 10 காரணங்களை இப்போது பார்க்கலாமா…

சுதந்திரத்தை இழக்க விரும்பமாட்டீர்கள் திருமணமாகாத ஆடவராக இருப்பதிலும் சில நன்மைகள் அடங்கியுள்ளன. நினைத்த நேரத்தில் காலை எழுந்திருக்க முடியும், பிடித்த உணவை சாப்பிட முடியும், நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியும். இவை அனைத்தையும் குறை சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் வீட்டில், உங்களுக்கு பிடித்த கிரிகெட் அல்லது கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பதற்கு பதிலாக, காதலிக்காக மணிக்கணக்கில் காத்திருக்கவோ அல்லது அவளை காண வெளியில் செல்வதற்கு கண்ணாடி முன் பல மணிநேரம் செலவிடவோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் பெண்கள் வேண்டுமென்றால், கண்டிப்பாக சிலவற்றை தியாகம் செய்யத் தான் வேண்டும். அதற்கு தயாராக இல்லாதவர்கள் தான், திருமணம் புரியாமல் இருப்பார்கள்.


அலுப்புத் தட்டும் வகையில் உள்ளவரா? 
உங்களுக்கென்று ஒரு உலகம் என்று எப்போதும் ஒரு கோட்டிற்குள்ளேயே வாழ்கிறீர்களா? அந்த உலகத்தை விட்டு வெளிவரவும், உங்கள் மனம் இடம் தரவில்லையா? அப்படியானால் உங்களை சுற்றி உள்ளவர்களை, நீங்கள் அலுப்புத் தட்டி தூங்க வைத்து விடுவீர்கள். அவர்களிடம் பேச சில நினைவுகள் மட்டுமே உங்களிடம் இருக்கும். சிறிது காலம் கழித்து சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கும். இதில் பெரிய கொடுமை என்னெவென்றால், அலுப்புத் தட்ட வைக்கும் குணாதிசயம் உடையவர் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும், அதனை இரகசியமாக வைத்திருக்க மாட்டீர்கள். ஒரு பெண்ணை உங்களால் சிரிக்க வைக்க முடிந்தால், அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

21 February 2014

யுவதியிடம் பேயோட்டம், வாழ்வை இழந்த இளம் பெண்

யுவதியிடம் பேயோட்டிய சோதிடர், வாழ்வை இழக்க வைத்த சாதனை

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலைவலி என கூறிச்சென்ற இளம் யுவதிக்கு ஜோதிடம் பார்த்த நபர் உடம்பில் பேய் இருப்பதாக கூறி உள்ளங் காலை சுட்ட பரிதாபமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட யுவதி ரஞ்சனி குமாரி (16) 77ம் கட்டை, சுவ உதான கம்மாணய, மொறகேவ-ஹொரவ்பொத்தான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த யுவதிக்கு தலைவலி காணப்பட்டதால் ஜோதிடம் பார்ப்பவரிடம் நூலை போட்டு விட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற வேளை யுவதிக்கு உடம்பில் பேய் காணப்படுவதாக தெரிவித்தார்.

பின்னர் இரும்பை நெருப்பில் போட்டு இரண்டு உள்ளங் கால்களையும் சுட்டு காயப்படுத்தியதாகவும் யுவதியின் சகோதரி வசந்தா ஸ்ரீமதி கவலையுடன் அழுத வண்ணம் தெரிவித்தார்.
இரண்டு கால்களையும் சுட்ட பின்னர் உடம்பில் பேய் விலத்திச் சென்றதால் யுவதியின் கால் பத்தியதாக ஜோதிடம் பார்த்த நபர் உறவினர்களிடம் குறிப்பிட்டதாகவும் தெரியவருகின்றது.உண்மையாகவே பாதிக்கப்பட்ட யுவதியின் கஷ்ட நிலையை வீட்டுக்கு சென்று பார்த்தால் அவதானிக்க முடியும். பொலிஸார் ஏழைக் குடும்பத்தில் பிறந்த யுவதிக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இப்படியாக ஏமாற்றிப் பிழைக்கும் ஜோதிடர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அத்துடன் இப்படியானவர்கள் தொடர்பில் ஜோதிடருக்கு அதி உச்ச தண்டனையினை வழங்குவதன் மூலமே இப்படியான போலி ஜோதிடர்களை உருவாவதைத் தடுக்க முடியும்.

ஆசிரியையின் உயிரை பலியெடுத்த சாரி

 பஸ்ஸை பிடிக்கச் சென்ற ஆசிரியையின் உயிரை பலியெடுத்த சாரி

தான் கட்டியிருந்த சாரியே ஆசிரியையொருவருக்கு எமனான சம்பவமொன்று யக்கலை இப்பாகமுவையில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸை பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளின் பின்னால் ஆசிரியையொருவர் அமர்ந்து சென்றுள்ளார். அவரது சாரி, மோட்டார் சைக்கிளின் பின்னாலுள்ள சில்லில் சிக்கியதால் சைக்கிளிலிருந்து ஆசிரியை கீழே விழுந்துவிட்டார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் மிகவேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் ஆசிரியையின் மீதேறியதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

இராணுவ ஆட்சேர்ப்புக்கு மட்டக்களப்பில் குறைவானோர் பங்கேற்பு

இலங்கையின் இராணுவ சேவையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் யுவதிகளை சேர்த்துக் கொள்வதற்கு நடைபெற்று முடிந்த நேர்முகத் தேர்வில் 15க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட யுவதிகளை இராணுவ சேவையில் சிப்பாய் மற்றும் எழுதுநர் பதவிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நேர்முகப் பரீட்சைக்கு 13 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தாகவும் அவர்களில் கொஞ்சம் பேர்தான் உரிய தகுதியுடையவர்களாக காணப்பட்டதாகவும் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
போர் முடிவடைந்த பின்பு மட்டக்களப்பு மாவட்டத்திருந்து ஆட்களை திரட்டுவது தொடர்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை என கூறப்படுகின்றது.

 
ஏற்கனவே வடக்கில் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் சர்ச்சைகளும் தோன்றியிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுவதிகளை இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு இராணுவத்தின் அறிவிப்பு தமிழ் மொழியிலேயே முழுமையாக வெளியிடப்பட்டிருந்த போதிலும், தமிழ் யுவதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதாகத் தெரிகிறது.

அம்பாரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை நடக்கவுள்ளதாக தெரிகிறது.

கிளிநொச்சியில் பெண்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்க்க முயற்சி'

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் பெண்களை இராணுவத்தினர் வற்புறுத்தி படையில் இணைத்துக் கொள்வதற்கு முயற்சித்திருப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் தன்னிடம் முறையிட்டிருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வட்டக்கச்சி பிரதேசத்தில் உள்ள புழுதியாற்றுக்குளத்தில் ஏற்று நீர்ப்பாசனம் மேற்கொள்வதுபற்றி நேரடியாகக் கண்டறிவதற்காகச் சென்றிருந்தபோது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தன்னிடம் இந்த முறைப்பாட்டைத் தெரிவித்ததாக அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.இளம் பெண்களை இராணுவத்திற்குக் கட்டாயமாக சேர்ப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அவர், இராணுவம் நிலைகொண்டு நிர்வகித்து வருகின்ற வட்டக்கச்சி அரசினர் பண்ணையில் வேலை செய்ய வருமாறு இராணுவத்தினர் இளம்பெண்களை வற்புறுத்துவதாகவும் தன்னிடம் முறையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

வட்டக்கச்சி பண்ணையின் ஒரு மூலையில் வடமாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெருமளவான பகுதியில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், இங்கு பணியாற்றுவதற்காகவே அவர்கள் இளம் பெண்களை வற்புறுத்தி அழைப்பதாகத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

அங்கு சென்று, இராணுவத்தின் கீழ் வேலை செய்வதற்கு பெண்கள் அஞ்சுவதாகவும் அதேநேரத்தில் தன்னிடம் முறைப்பாடு செய்தவர்களைத் தேடிச்சென்று அச்சுறுத்தும் வகையில் புலனாய்வு பிரிவினர் நடந்து கொண்டதாகத் தனக்குத் தகவல் எட்டியிருப்பதாகவும், இந்த விடயங்கள் குறித்து மாகாணசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
கட்டாயமாக இராணுவத்திற்கு இளம் பெண்களைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேட்டபோது, அதனை அவர் மறுத்துரைத்தார்.


 'சிலர் கூறுவதுபோல பலாத்காரமாக எவரையும் படையில் சேர்க்கவில்லை. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை' என்றார் இராணுவப் பேச்சாளர்.

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் சேர்ந்து கொள்வதற்கு வன்னிப்பிரதேசம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
'பெண்கள் படையணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 100 பேரையும், கிழக்கு மாகாணத்தில் இருந்து 50 பேரையும் படையில் சேர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சேர்க்கப்படுபவர்கள் அவர்கள் விரும்புகின்ற நேரத்தில் படையில் இருந்து விலகிக் கொள்வதற்கும் வசதிகள் இருக்கின்றன' என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

18 October 2013

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்த சிவாஜிலிங்கம்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சமாதான நீதவான் டொக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம்  தெரிவித்தார்
- See more at: http://www.tamilnews.cc/news.php?id=45300#sthash.fvdRdyOa.dpuf

புலிகள் புதைத்த பெரும் பணத்தை தோண்டும் இராணுவம் !

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானம் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை தோண்டப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே இந்த மயானம் தோண்டப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

தமது காவலில் இருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள். இதில் இருந்து ஒரு விடையம் நன்றாகப் புலனாகிறது. இலங்கை இராணுவமானது தாம் இரகசியமாக தடுத்துவைத்துள்ள புலிகள் உறுப்பினர்களை இன்றும் கூட கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்பது தான். ஒரு காலத்தில் தமிழின விடிவுக்காகப் போராடி இவர்கள் தற்போது கேட்ப்பார் அற்று இலங்கை உள்ள இரகசிய முகாம்களில் வாடுகிறார்கள். இவர்கள் தொடர்பாக சர்வதேச தமிழர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை என்று பலர் குற்றஞ்சொல்லும் அளவுக்கு நிலமை மோசமடைந்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட இந்த புலிகள் உறுப்பினர் இப் பிரதேசத்தில் ஆயுதங்களும் பெருமளவான பணமும் இருப்பதாக கூறியுள்ளார். இதனை தோண்டு எடுக்கவே தற்போது விசேட அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இப்போர்வையில் மயானம் முழுவதையும் கிண்டி, கிளறுவார்கள் போல இருக்கே ?

தனிக்கட்சி தொடங்கிய நடிகர் விஜய்?

நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பின், அவருக்கும், ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட, அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் இறங்கினார்.

இதற்கிடையில், "தலைவா படம் ரிலீசாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜயும், அவருடைய அப்பாவும், அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை, படம் ரிலீசாவதற்கு, சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது. இதனால் நொந்து போன நடிகர் விஜய், படம் ரிலீசாவதற்குள்ளாகவே, வெறுத்துப்போய், ஊட்டிக்குச் சென்று தங்கிவிட்டார். மிக நீண்ட போராட்டத்துக்குப் பின், படம் ஒருவழியாக ரிலீஸ் ஆனது. இருந்தாலும், "தலைவா படம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது.

தற்போது, அவர் நடித்துக் கொண்டிருக்கும், "ஜில்லா படம்  முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவர் மீண்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறார். தன், "விஜய் ரசிகர் மக்கள் நல நற்பணி மன்றத்தை மீண்டும் வேகப்படுத்தி, அரசியல் களத்தில், பரபரப்பாக செயல்பட வைப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியிருக்கிறார்,
"ஜில்லா பட ஷூட்டிங், சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது. அப்போது தனக்கு மிகவும் நம்பகமான சில மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னுடைய எண்ணஙகளையும், கருத்துக்களையும், அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து, விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, "தலைவா படம், கேரளாவில் ஓரளவுக்கு வெற்றியடைந்தது. ஆனால், தமிழகத்தில் படம், படு தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று நடிகர் விஜய் கேட்டார். அதற்கு மாவட்டச் செயலர்கள் பலரும், பல விதமான கருத்துக்களைக் கூறினர். ஒரு சிலர், உருப்படியாகவும் நல்லவிதமாகவும் சில கருத்துக்களைக் கூறினர். அவர்கள் கூறியதாவது:


உங்களுக்கு, மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது. உங்கள் பலத்தை நீங்களே உணருவதில்லை. அப்படித்தான், "தலைவா படம் ரிலீசுக்கு, அரசு தரப்பில் மறைமுகமாக தடை ஏற்பட்டதும், நீங்கள் அரசுக்கு சரண்டர் ஆகி விட்டீர்கள். முதல்வரை கெஞ்சி, வாழ்த்தி அறிக்கை கொடுத்தீர்கள். இதை உங்களுடைய ரசிகர்களும், மக்களும்
ரசிக்கவில்லை. படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, உங்கள் இமேஜை குறைத்துக் கொண்டது தவறு.  நீங்கள் தைரியமாக அரசியல் செய்ய முன்வர வேண்டும்.‌

20 March 2013

எகிப்த்திய புரட்சிக்கு நிகராக ஆரம்பித்துள்ள இணையத்தளம் ! : பதிவர்கள் செய்யவேண்டியது

2011ம் ஆண்டு எகிப்த்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், Facebook ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் Facebook ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடயம்.

அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். Tamilrising( தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும்.

எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும். TAMIL RISING . COM

இந்த விடயத்தில் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்யலாம்?

 01) கீழ்க்காணும் நிரலைப் பிரதி செய்து உங்கள் வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளங்களிலோ இணைத்துவிடுங்கள். அவ்வாறு இணைப்பதனூடாக உங்கள் வலைப்பதிவுக்கு வரும் பதிவர்களுக்கு Tamil Rising.com என்ற தளம் இருப்பதைத் தெரியப்படுத்தலாம்.

நிரல் : -


வலைப்பதிவில் இணைக்கும் முறை

1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)

2. “Manage Layouts” பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).

3. “Edit HTML” என்கிற பகுதிக்குச் செல்க

4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க

6. “EditBox” இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற தேர்வு செய்க.

7. < / h e a d >என்ற நிரலுக்கு மேல் இடுக..
8. சேமிக்கவும்.

9. இனி உங்கள் தளத்துக்கு பார்வையாளர்கள் முதல்முறை வரும்போது கறுப்புத் திரையில்  போராட்டம் தொடர்பான செய்திகளும் தளத்துக்கான இணைப்பும் தெரியும்.

22 January 2012

Apple launches e-textbook tools with new iBooks

Apple aims to drive the use of electronic textbooks in the classroom by making it easier for publishers to create interactive titles.

The company has announced a range of new tools and services which it claims will "reinvent the textbook".
Leading names in educational resources are involved, including the world's biggest, UK-based Pearson Publishing.

Apple will compete with existing offerings from Amazon's Kindle and Barnes and Noble's Nook device.
Roger Rosner, Apple's vice president of productivity applications, demonstrated the books, some of which are now available to download, at an event in New York.

Also on display was iBooks Author, a free program that will allow educators and authors to make their own interactive books for the iPad.

Apple has also said it has enhanced iTunes U - the educational section of its iTunes store - to allow a wider breadth of university level resources.
'Huge challenge'
The company's senior vice-president, Philip Schiller, said books aimed at high school students would be priced at $14.99 (£10) or below.

Louise Robinson, president of the Girls' Schools Association, said e-textbooks could bring education to life "in a way we've not had before".

"Having movies and videos embedded; being able to search; look up a glossary; write your own notes and then going to exam questions... just tying it all together on one device is a magical experience I think for the the children."

However, she warned that UK schools were still some way from being able to fully utilise such technologies.
Sent from my BlackBerry® smartphone