26 February 2009

ஒஸ்கார் விருது
முதலிரவான சிவராத்திரி


சிவன் ராத்திரிக்கு எங்கே, எந்த கோவிலுக்கு குட்டிகள் வரும் என்று நமது நண்பர்கள் குழு ரூம் போட்டு உட்கார்ந்திருந்து யோசிச்சு கொண்டிருந்தபோது தோன்றியதுதான் பொன்னம்பலவானேஸ்வரர் கோவில்.
சரி என்று கோவிலுக்கு சுமார் 9.00 மணிபோல வெளிக்கிட்டு போனால் தான் தெரிந்தது. நாங்கள் சைட் அடிக்க போகல, பெட்டச்சியள் தான் வயசுப் பெடியங்கள சைட் அடிக்க வந்துட்டாளவ எண்டு.


பெடியங்கள தங்கட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்த பெட்டச்சியள் என்ன வேகமாக இருக்கிறாளவ சொல்லவே முடியல.
சிரிப்பில சில்லறை கொட்டும் படி முத்துப் பற்களை காட்டும் காட்டுமிராண்டி சிரிப்புகளும், வெருளல்களும் அப்பப்பா......


ஏழுகழுதை வயசாச்சு இது வரை நான் எநதக் கோவிலுக்குப் போயும் நித்திரை முழிச்சது கிடையாது, இம்முறை நண்பர்களுடன் சைட் அடிக்கிறதுக்காக முதன்முறையாக நித்திரை முழிச்சு சிவராத்திரியை முதலிரவாக நண்பர்களுடன் கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் கொண்டாடினேன்.

பின் குறிப்பு: முதலிரவு என்று குறிப்பிட்டது சிவராத்திரிக்கு முதன்முறையாக நித்திரை முழுச்சதை தான் இங்கு முதலிரவு என்று குறிப்பிடடுள்ளேன். தலைப்பைப் பார்த்து ஏதோ திகில் இருக்கும் என்டு நினைச்சிருப்பீர்கள் என்பது மட்டும் புரியுது.

19 February 2009

தமிழினத்தை அழிக்கின்றோமா? சீ.சீ.....

இலங்கை அரசாங்கத்தின் கொடுங்கோள் ஆட்சியின் காரணமாக இந்த வருடம் (2009 முதல் 2மாதங்களுக்குள்) மட்டும் சுமார் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை இலங்கை இராணுவம் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்று குவிக்கின்றது. இதைத் தட்டிக் கேட்கும் எந்தவொரு நாடாக இருந்தாலும் அது பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களாகவே இலங்கை அரசு கருதுகின்றது.

ஏன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கிளாரி கிளின்டன் இலங்கை அரசுக்கு யுத்தத்தை நிறுத்துங்கள், அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக பலியாகின்றனர் என்று சொன்னதுக்கே கொழும்பில் கிளாரியின் படத்துக்கு விடுதலைப்புலிகளின் உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


வன்னியில் நடத்தப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல் பற்றி இலங்கை அரசு மூடிமறைப்பதுடன் நாங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. பயங்கரவாதிகளுடன் மட்டுமே யுத்தம் செய்கின்றோம் என்று சொல்லி மழுப்பி விடுவார்கள்.

ஆகமிஞ்சி மிஞ்சிப்போனால் நாங்கள் ஒரு தாய்ப் பிள்ளைகள், தமிழினம் மீது அதிக அக்கறைகொண்டுள்ளோம். அவர்கள் எமது சகோதரர்கள் என்று கூறிக் கொண்டே தமிழினம் மீது விமானம் மூலமும் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்திவிட்டு நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறிகிறார்களே..... இது ரொம்ப ஓவராக தெரியவில்லையா இலங்கை அரசிற்கு!

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, தமிழினம் ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கையில் காண முடியாமல் போய் விடும் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

14 February 2009

பிஞ்சில பழுத்த பாலகன்

பிரிட்டனைச்சேர்ந்த 13 வயதுச் சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். எப்படியென்று கேட்கின்றீர்களா?

சசெக்ஸ் பகுதியில் வசிக்கும் அல்ஃபீக்கு 13 வயது தான், அதுவும் வெறும் 4 அடி உயரம் மட்டும் கொண்ட இந்தக் குழந்தை என்ன செய்தது என்று கேட்டால் தனது 12 வயதில 15 வயது கொண்ட தனது காதலியுடன் ஓரிரவு மட்டும் பாதுகாப்பற்ற உறவு கொண்டதன் விளைவாக காதலியான சென்டெல்லா கர்ப்பமடைந்து இன்று ஒரு அழகான ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளாள். குழந்தையுடன் இந்த இளம் தம்பதியினர் அழகாக படத்துக்கு போஸ் கொடுக்கிறார்கள். பார்த்தீர்களா
நீங்களும் இருக்கின்றீர்களே..... இப்ப யோசிச்சு ஒரு பிரயோசனமும் இல்லை. அது அப்ப யோசிச்சிருக்கணும். ஏழுகழுதை வயசாகிவிட்டதே என்று பெரு மூச்சு விடுவது சைற்றால தெரிகிறது. இனியாவது முயற்சி செய்யுங்கள்.

பதிவுசெய்யப்பட்ட தகவல்களின்படி 1998 ஆம் ஆண்டு சீன் ஸ்டுவர்ட் எனும் 12 வயதான சிறுவனும் அவனின் காதலியான 15 வயது எம்மா வெப்ஸடரும் குழந்தையொன்றைப் பெற்றனர். அதன்பின் 6 மாதங்களில் மேற்படி "தம்பதியினர்' பிரிந்தனர் என்றும், அல்பீயின் சகோதரியொருவர் தனது 13 ஆவது வயதிலேயே குழந்தையொன்றைப் பெற்றதாக பிரிட்டிஷ் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதாக இணையத்தளங்களில் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த இளம் தம்பதிகளைப் பற்றி.
உங்களாலும் முடியும்........

அறுந்த காதலர் தின வாழ்த்துக்கள்

காதலிப்பவர்களுக்கு அன்பான இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலில் தோற்றவர்களுக்கு அறுந்த காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலில் விழாதவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்.உலகளாவிய ரீதியில் இன்று அறுந்த காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
எத்தனை காதலர்கள் தான் உண்மையான காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள் என்று கேட்டால் நூற்றுக்கு ஐந்து பேர் கூட வராது போலும்.
இன்றைய காலப்பொழுதில் காதலர்கள் பணத்தையும், அந்தஸதையும் தான் பார்க்கின்றனர். இது தேவைதான் இது இல்லாமல் வாழ முடியாது அதை ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் காதலே பணம் என்று கொள்ளக்கூடாது.
பாடசாலையில் லவ் பண்ணின பொண்ணு இப்ப வெளிநாட்டுப் பையனை காதலிக்கின்றான் ஏனென்று கேட்டால் பாடசாலையில் பார்த்தது கிணற்றுத் தவளை இப்ப பார்த்தது வெளிநாட்டுப் பறவை so இந்த வெளிநாட்டுப் பறவை நிறைய பணத்தை பறக்கவிடுது. அந்த கிணற்றுத்தவளை பஞ்சமி என்று முணகிக் கொள்ளும் பெண்களும் இந்த சமூகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர்.

பொதுவாக இந்த பாழடைந்த பெண்கள் ஆண்களை காதலித்து விட்டு பணம், அந்தஸ்து உள்ள ஆணை ஏறெடுத்து பார்ப்பது என்பது சகஜமாகி விட்டது இது வழமையும் கூட.
அதேபோல் ஆண்களிலும் இப்படிபட்ட வர்க்கம் உள்ளது ஆனாலும் அது பெரியளவில் இல்லை என்பதை மறுக்கமுடியாது.

05 February 2009

குட்டக்குட்ட குனியும் தமிழனா?

இலங்கையின் 61ஆவது சுதந்திர தின விழா நேற்றுக் காலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றபோது இலங்கை ஜனாதிபதியின் முகத்தில் புன்னகையை கூட காண முடியவில்லை. ஏதோ பய உணர்வுடன் காணப்படுவது போன்று போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
இவரின் பார்வை சொல்லும் அர்த்தங்கள் தான் என்னென்னவோ புரியவில்லை.அடுத்த ஆண்டு சுதந்திர தின உரையில் தமிழ் இனத்தை கூண்டோடு அழித்து விட்டேன் வெற்றி வெற்றி! என்று கூறுமளவிற்கு மஹிந்தவின் படை நடவடிக்கை மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது மட்டுமல்ல, வட மாகாணத்தில் இடம்பெறும் பொதுமக்கள் மீதான தாக்குதலினால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.மஹிந்த சுதந்திர தின செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது, வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் இருக்கும் உறவுகள் நிம்மதியாக தமிழன் என்று சொல்லும் அளவிற்கு வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கும் எம் சொந்தங்களை ஏன் தான் அழைக்கின்றாரோ தெரியவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிராக கைது செய்ய தானோ என எண்ணத்தோன்றுகிறது.

எது எப்படியோ இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் கைவிட்டு எண்ணக்கூடியதாக இருக்கலாம். அதேநேரம் தமிழர்களுக்கு விடிவு என்பது எப்போது, எப்படி எட்டப்படும் என்று சொல்லமுடியாது போலவே தோன்றுகிறது.அதுமட்டுமல்ல தமிழ் மக்கள் குட்டக்குட்ட குனிஞ்சு கொண்டே போய் விடுவார்கள் என்று தான் மஹிந்த உட்கார்ந்திருந்து யோசிக்கிறார் போல இருக்கு.

02 February 2009

டயலொக் அறிமுகப்படுத்தியிருக்கும் மொபைல் மியூசிக்

ஐபோர்ட், எம்.பி3 பிளேயர் எல்லவற்றையும் தாண்டி டயலொக மொபைல் மியூசிக் வந்து கலக்கிக்கொண்டிருக்கிறது. அதாவது உங்கள் போன் எந்த டப்பா செல்போனாக இருந்தாலும் பாட்டுக்கேட்டுக் கொண்டே இருக்கலாம். இதற்கு சொப்ட்வெயார்களோ, கலர்போனோ தேவையில்லை.

சாதாரண கி.மு கால நொக்கியா 3310 போதும்.


என்ன ஒரு சின்ன நிபந்தனை உங்கள் மொபைல் டயலொக்காக இருக்க வேண்டும். அது தான் மற்றபடி பாடல் கேட்பதற்கு 390 ஐ டயல் செய்துகொண்டால் போதும், நிமிடம் ஒன்றுக்கு 1 ரூபா அறவிடுகிறார்கள்.
மற்றபடி மாதாந்தம் 30 ரூபாவை வாடகையாக அறவிடுவார்களாம். ஆனால் இந்தச் சேவையை தற்போது இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

01 February 2009

இதுவா மனிதாபிமானம்....?


விஸ்வமடு, கல்மடுவிலுள்ள குள அணைக்கட்டை விடுதலைப்புலிகள் தகர்த்து பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை பயங்கரவாதிகள் உருவாக்குகிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்ததளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செயல் எல்லாம் மனிதாபிமானமற்ற செயல் என்றால் இலங்கைப் விமானப் படையினரால் நாள்தோறும் வன்னியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு பொழிவதை எப்படி சொல்வது? இது தானா மனிதாபிமானம்?
அரசாங்கத்தால் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயம்" என பிரகடனப்படுத்தியுள்ள சுதந்திரப் பிரதேசமான உடையார்கட்டில் இன்று காலை (26-01-09) அகோர எறிகணைத் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல்களை எப்படி சொல்வது?
இதை கண்டிக்க ஏன் சர்வதேசம் பின்னடிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எது எப்படியோ தமிழர் பிரச்சினைக்கு தீர்வென்பது மஹிந்தவின் காலத்தில் கிடைக்கும் என்பது சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.