இதுவா மனிதாபிமானம்....?


விஸ்வமடு, கல்மடுவிலுள்ள குள அணைக்கட்டை விடுதலைப்புலிகள் தகர்த்து பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை பயங்கரவாதிகள் உருவாக்குகிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்ததளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செயல் எல்லாம் மனிதாபிமானமற்ற செயல் என்றால் இலங்கைப் விமானப் படையினரால் நாள்தோறும் வன்னியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு பொழிவதை எப்படி சொல்வது? இது தானா மனிதாபிமானம்?
அரசாங்கத்தால் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயம்" என பிரகடனப்படுத்தியுள்ள சுதந்திரப் பிரதேசமான உடையார்கட்டில் இன்று காலை (26-01-09) அகோர எறிகணைத் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல்களை எப்படி சொல்வது?
இதை கண்டிக்க ஏன் சர்வதேசம் பின்னடிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எது எப்படியோ தமிழர் பிரச்சினைக்கு தீர்வென்பது மஹிந்தவின் காலத்தில் கிடைக்கும் என்பது சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

இலங்கைப் விமானப் படையினரால் நாள்தோறும் வன்னியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு பொழிவதை எப்படி சொல்வது? இது தானா மனிதாபிமானம்?///

மனிதாபிமானம்
செத்துவிட்டது..