தமிழினத்தை அழிக்கின்றோமா? சீ.சீ.....

இலங்கை அரசாங்கத்தின் கொடுங்கோள் ஆட்சியின் காரணமாக இந்த வருடம் (2009 முதல் 2மாதங்களுக்குள்) மட்டும் சுமார் 1300க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை இலங்கை இராணுவம் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்று குவிக்கின்றது. இதைத் தட்டிக் கேட்கும் எந்தவொரு நாடாக இருந்தாலும் அது பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களாகவே இலங்கை அரசு கருதுகின்றது.

ஏன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கிளாரி கிளின்டன் இலங்கை அரசுக்கு யுத்தத்தை நிறுத்துங்கள், அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக பலியாகின்றனர் என்று சொன்னதுக்கே கொழும்பில் கிளாரியின் படத்துக்கு விடுதலைப்புலிகளின் உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


வன்னியில் நடத்தப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல் பற்றி இலங்கை அரசு மூடிமறைப்பதுடன் நாங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. பயங்கரவாதிகளுடன் மட்டுமே யுத்தம் செய்கின்றோம் என்று சொல்லி மழுப்பி விடுவார்கள்.

ஆகமிஞ்சி மிஞ்சிப்போனால் நாங்கள் ஒரு தாய்ப் பிள்ளைகள், தமிழினம் மீது அதிக அக்கறைகொண்டுள்ளோம். அவர்கள் எமது சகோதரர்கள் என்று கூறிக் கொண்டே தமிழினம் மீது விமானம் மூலமும் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்திவிட்டு நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறிகிறார்களே..... இது ரொம்ப ஓவராக தெரியவில்லையா இலங்கை அரசிற்கு!

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, தமிழினம் ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கையில் காண முடியாமல் போய் விடும் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

Comments