24 January 2009

சூரியன் எப்.எம் இணையத்தளத்தில்

முதல்வன் சூரியன் எப்.எம் ஐ இப்பொழுது இணையத்தளத்தில் கேட்கலாம்.இத்தளமானது கண்ணைக் கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றார்கள்.www.sooriyanfmlive.com

இது தான் இணையத்தள முகவரி, எந்த மூலையில் இருந்தும் முதல்வன் சூரியன் எப்.எம்மை கேட்கலாம்.

22 January 2009

பராக் ஒபாமா 44ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார்


அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்கும் நிகழ்வு தொடர்பான படங்கள்.
வரலாறு காணாதளவு பாதுகாப்புக்கு மத்தியில் இதுவரை எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதிக்கும் வழங்கப்படாத வரவேற்பு கறுப்பின பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருந்தன.
உடைகளுக்கு மட்டுமே பல இலட்ச ரூபா செலவுசெய்யப்பட்டது மட்டுமல்ல ஒபாமாவின் சொகுசுக் காரின் பெறுமதியே 2.8 கோடியாம்.
சபா வாழ்ந்தால் இப்படியல்லவா வாழவேண்டும் என்று தோன்றுகிறதா?
கவலையை விடுங்கள். உங்களாலும் ஒபாமாவாக முடியும், ஆனால் இலங்கையில் உருவாக சாத்தியமில்லை.
உன்னால் முடியும் தம்பி தம்பி என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமே பாடியிருக்கிறார் உங்களால முடியாதது என்றும் எதுவுமே இல்லை முயற்சி செய்யுங்கள். பலன் ஒரு நாள் கிடைக்கும்.

அமெரிக்காவின் 67ஆவது வெளியுறவுச் செயலாளராக கிளாரி கிளின்டன் நியமிக்கப்பட்டமையடுத்து நேற்று (21-01-2009) பதவியேற்கும் வைபவத்தில் கணவர் கிளின்டனும் பங்குபற்றியிருந்தார்.

21 January 2009

முத்தம் என்றால் இப்படி தான் இருக்குமோ?


முத்தம் பற்றி பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறன். முத்தம் எப்படி, என்ன வடிவில் இருக்கும் என்று தெரியாம இருந்தேன். ஒபாமா கொஞ்சம் தெளிய வைச்சிட்டாரு....ஆனாலும் ஒன்டும் புரியல.. அவரு ஏதோ மனிசியோட செய்யுறார் அதை தான் முத்தம் என்டு சொல்லுறாங்க. என்ன கொடுமையப்பா?
இப்படியா இருக்கும் முத்தம்? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோவன்.

19 January 2009

இது தான் ஊடக சுதந்திரமா?

இது தான் ஊடக சுதந்திரமா?
MTV/MBC attack on the 06th January 2009

17 January 2009

கணக்கெடுக்காததும், கண்டுகொள்ளாததுமான பொலிஸ்பதிவு..

இலங்கைத் தமிழர் அதுவும் வடக்கு - கிழக்கு தமிழர்களை பதிவு என்ற போர்வையில் அலைய விடும் பாதுகாப்பு படையினர் ஒரு புறமிருக்க பொலிஸ் பதிவு செய்யும் போது துட்டுக்காக அலையும் காக்கிச் சட்டைக்காரர்கள் ஒருபுறம். இதையெல்லாம் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.வடக்கிலிருந்து அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு வரும் போது கிளியரன்ஸ் என்று 3,4 மாதங்கள் அலையவிடும் ஆமிமாமாக்கள் ஒருபுறம்.

சரி என்று கிளியரன்ஸ் தான் எடுத்தாச்சு என்று தென்பகுதிக்கு வந்தவுடன் பொலிஸ் பதிவு இன்னொரு புறம்.கடந்த வருடம் வடக்கு மாகாண தமிழர்களை பதிவு செய்தது போதாது என்று மீண்டும் பதிவு செய்து கணக்கெடுப்பு நடத்தினமாம். அது ஒருபுறமிருக்க ஒன்லைன்ல பதிவு வேற.தமிழ் மக்கள் பொலிஸ் பதிவுகளுக்கு முன்னர் சற்று மதிப்புக் கொடுத்தனர். ஆனால் இப்போது பதிவுகள் எல்லாம் வாழ்க்கையில் பழகியும் பாழாகியும் போனதொன்றாகிவிட்டது. அதை கண்டுகொள்ளாமலும் கணக்கெடுக்காததுமானதாகிவிட்டது என்றே கூறவேண்டும்.

தென்பகுதி பொலிஸ் நிலையங்களில் பதிவை மேற்கொள்ளும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று பதிவை மேற்கொள்ளாமல் வீடுகளுக்கு செல்லும் நிலை கொழும்பு வடக்கிலுள்ள நிலையங்களில் இன்றும் காணக்கூடியதாகவுள்ளது என்பதை மறுக்க முடியாது. வரிசையில் நில்லுங்கோ துரை வந்துடுவார் என்று கத்தும் தாராக்கள் ஒருபுறம். இப்படி தமிழர்கள் பதிவுக்காக பிறந்தவர்கள் போல பதிவு செய்ய அலைந்து திரிபவர்கள் பற்றி யாருமே அலட்டிக் கொள்வதில்லை.ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள்.

சில பொலிஸ் அதிகாரிகள் நேர்மையாகவும் திறமையாகவும் கடமையை செய்வதனால் எதுவித சிரமமின்றி பொலிஸ் பதிவை மேற்கொள்ளமுடியும் என்பதையும் சொல்லியாக வேண்டும்.பாதுகாப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒன்லைன் பதிவு முறையானது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை கூறமுடியாது.

ஏனெனில் இலங்கைப்பிரஜைகள் அனைவருக்கும் இன்ரநெற் அறிவு இருக்கும் என்று சொல்லமுடியாது, இன்ரநெற் என்றால் என்ன அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறவர்களும் இருக்கத்ததான் செய்கிறார்கள்.வடிவேலு சிறையில் இருக்கும் போது வடிவேலுவின் சிஷ்யன் சுறாமீன் இருக்கு, விலங்குமீன் இருக்கு ஏன் வாலை மீன் கூட இருக்கு. இந்த பொலிஸ்காரர் கேட்கிற ஜாமீன் எங்க அண்ண காட்டவே இல்லையே! என்ட மாதிரி தான் இன்டர்நெட்டை எங்க தம்பி பிடிக்கிறது என்று கேட்கிற ஆச்சி மார் எங்க என்ன ஒன்லைன்ல பதிவு செய்யுறது?

16 January 2009

வில்லு வில்லத்தனமானது!

விஜய் நடித்து வரும் படங்கள் அனைத்தும் ஒரே பாணியில் இருப்பதாகவும் புதுப்புது கெட்டப்புக்கள், கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என அண்மைக் காலங்களாக விஜய்யின் ரசிகர்கள் உணர்ந்தாலும் விஜய்யின் குறும்புத்தனம், காமெடி, ஸ்டைல் என அனைவரையும் கவர்ந்துள்ளதால் விஜய்யின் படங்கள் தோல்விப்படங்களாக வராவிட்டாலும் போட்ட முதலை அள்ளிக் கொடுத்துவிடுவதால் ஒரேபாணியை விஜய் தொடந்த வண்ணமே இருக்கின்றார் என்பதை மறுக்கமுடியாது. தைப்பொங்கலுக்கு வெளிவந்த 'வில்லு' வடிவேலுவின் காமெடிக்காகவும், நயன்தராவின் கவர்ச்சிக்காவும் பார்க்கலாம். மற்றபடி நயன்தரா தனது கவர்ச்சியை கொடைவள்ளல் போல குறைவில்லாமல் வாரி வழங்கியுள்ளார்.
வில்லு வி்ல்லாக இல்லையென்று கூறலாம். பில்லா ஸ்டைலில் வடிவமைத்திருக்கிறார் பிரபுதேவா. மற்றபடி போக்கிரி ஸ்டைலும் கலந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் பழைய கெட்டப்புக்களிலிருந்து கொப்பியாகவே உள்ளது.
என்றாலும் வில்லு பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வெளிவந்திருக்கின்றது.

ஏ-32 பாதை ஓரிரு தினங்களில் திறக்கப்படும்


ஏ-32 பாதை ஓரிரு தினங்களில் திறக்கப்படும் எனவும் இப்பாதையை தற்போது செப்பனிடும் பணியில் பொறியியளாளர்கள் கடுமையாக பாடுபடுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்து 2 மாதங்களாகி விட்டது. இன்னமும் பாதை திறக்கப்படவில்லை. இதுவரை என்ன பனங்கொட்டையா பொறுக்குறீங்கள் என்று கேட்கவே தோன்றுகிறது. இப்பாதை நெடுஞ்சாலையல்ல. குறைந்தளவு தூரத்தைக் கொண்ட ஏ-32 பாதை செப்பனிடும் பணியே இரண்டு மாதங்கள் என்றால் ஏ-9 நெடுஞ்சாலை எப்போது திருத்தியமைக்கப்படும், எப்போது மக்கள் போக்குவரத்து செய்வது? ஏ-9 ஊடாக சித்திரை புதுவருடத்திற்கு சென்று வரும் எனது கனவு நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் பாதை திறக்கப்படும் வரை.

எதிர்பார்ப்பை கவிழ்த்த எயார்டெல்லின் கட்டணச் சலுகை

இலங்கைக்குள் நான்காவது கையடக்கதொலைபேசி வழங்குனராக எயார்டெல் கடந்த வாரம் (12-01-2009) காலடி எடுத்துவைத்துள்ளது. எயார்டெல்லானது பல வசதிகளை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
எயார்டெல்லை விட டயலொக்கின் பிளாஸ்டர் பக்கேஜ் சிறந்தது எனக்கூறலாம். பெரும் வரவேற்புக்கு மத்தியில் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கும் எயார்டெல்லின் எதிர்காலம் சற்று ஒளிமயமாக அமையும் என்றாலும் டயலொக்கை உடைக்கமுடியாது போலவே தோன்றுகிறது.
எயர்டெல் வருகையை முன்னிட்டு, டயலொக் இந்தியாவை வரவேற்கின்றோம், இந்தியாவிற்கு வெளிச்செல்லும் அழைப்புக் கட்டணங்கள் ரூபா 10 மட்டுமே! என பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை காணமுடிந்தது. (எயர்டெல்லை வரவேற்கும் முகமாகவே அல்லது போட்டி தொடங்கிவிட்டது கவனம் என்பதே தெரியல)
சரி எயர்டெல் அழைப்புக் கட்டணங்களை பார்த்தோம் என்றால், முற்கொடுப்பனவு இணைப்புகளுக்கு எந்த நெட்வேர்க்கிற்கும் ரூபா 2 தான், அத்துடன் எஸ்.எம்.எஸ் ஒன்றிற்கு ரூபா 1 என்றும் அறிவித்திருந்தது. இதே கட்டணங்கள் தான் பிற்கொடுப்பனவு இணைப்புகளி்ற்கும் எனினும் பிற்கொடுப்பனவு இணைப்புகளில் குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு வெளிச்செல்லும் அழைப்பு இலவசம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக ரூபா 300 மாதாந்தம் செலுத்தும் இணைப்புக்கு 300ரூபா பெறுமதியாக அழைப்புக்கள் இலவசம் (150நிமிடம்)
அதேபோலவே ரூபா.600 மாதாந்த கொடுப்பனவு இணைப்பிற்கு ரூபா.1200 பெறுமதியான வெளிச்செல்லும் அழைப்புக்கள் இலவசம். (600நிமிடம்)
எயார்டெல்லின் முற்கொடுப்பனவு சிம்மை ரூபா 100 க்கு (100ரூபா றிலொட்டுடன்) சந்தையில் பெறக்கூடியதாக இருந்தது. எனினும் இந்த முற்கொடுப்பனவு இணைப்பு நஷ்டம் இதைவிட டயலொக்கே பரவாயில்லை. வெளிநாடுகளிற்கு நிமிடத்தி்ற்கு 50ரூபாக்கு மேலாக அறவிடப்படுகிறது. உள்ளூர் வெளிச்செல்லும் அழைப்புக்கள் சராசரியாக நிமிடமொன்றுக்கு 3 ரூபா செலவாகின்றது என்ற சோகக் குரல்கள் எயார்டெல் பயன்படுத்தும் நண்பர்களிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றது.
என்னதான் இந்தியாவின் முதன்மை கொம்பனியாக எயார்டெல் இருந்தாலும் இலங்கைக்குள் தாக்குபிடிக்க முடியாது என்று பலமாகக் கூறிக்கொள்ளலாம்.

11 January 2009

புத்துயிர் பெறுமா ஏ-9?


2002, 2003-4 காலப் பகுதியிலிருந்த சந்தோஷம் மீண்டும் ஏற்படுமா?
கொழும்பு செல்வதென்றால் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம்-முகமாலை பஸ்ஸில ஏறினால் 10 மணியளவில் முகமாலை சென்றடைந்து பின்னர் 11 மணியளவில் குறிப்பிட்ட பஸ் (விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி) ஒன்றில் 3 மணித்தியால பயணம் இடைவேளைக்காக முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் 15 நிமிடம். பின்னர் மதியம் 1 மணிக்கு ஓமந்தைக்கு வந்தடைந்த பின்னர் கொழும்பு பஸ் எடுத்தோம் என்றால் மாலை 5 அல்லது 6மணிக்கெல்லாம் தலைநகருக்கு வந்து விடலாம் வெறும் 350 ரூபாவுடன். அல்லது ஹயஸ் வானில் தான் போகனும் இப்படியெல்லாம் 2, 3 பஸ்ஸில ஏறமுடியாது என்று அடம்பிடிப்பவர்களுக்கு (வீட்டு வாசலில ஏற்றி கொழும்பு உறவினர்களின் வீட்டு வாசலிலேயே கொண்டு சென்று drop பண்ணணும் என்றால்) 1000 ரூபாவை கொடுத்தால் ஏறின வானிலயே கொழும்பு வந்து சேரலாம்.


அன்றைய காலப்பகுதி (சமாதான காலம்) வேறு, இன்றைய காலப்பகுதி (யுத்தவெறி பிடித்த காலம்) வேறு. சரி 2009 தமிழ் புதுவருடத்துக்காவது ஏ-9 திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. வீதியை திறந்தால் அதனூடாக மேற்கொள்ளப்படும் பிரயாணம் சற்று சிரமமாக அமையலாம். சோதனைகள் அதிகமாக இருக்கலாம். எனினும் தற்போது விமானம், கப்பல் மூலம் மேற்கொள்ளும் பிரயாணத்தை விட ஏ-9 செலவு குறைந்ததாக அமையலாம்.


தற்போதைய நிலைவரப்படி ஏ-9 வீதி சேதமடைந்திருப்பதால் அதனை மறு சீரமைப்பு செய்த பின்னரே பாதை திறக்கப்படும் என்றும் முதலில் இராணுவ போக்குவரத்துக்கு மட்டும் தான் என்றும் பின்னரே பொதுமக்களின் பாவனைக்காக பாதை திறக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் முகமாலை முதல் கிளிநொச்சி வரையிலான பாதை மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஏ-32 பாதை தற்பொழுது மும்முரமாக செப்னிடும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் ஏ-9 வீதி திருத்தியமைக்கப்படும் என்றும் அண்மையில் பத்திரிகையொன்றில் பார்த்தேன்.


எது எப்படியோ ஏ-9 வீதி திறந்த பின்னர் சமாதான காலத்திலிருந்த யாழ்ப்பாணத்தை காணமுடியாது தான் என்றாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாலே போதும். 2004 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சிங்கள மக்களின் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் 2009இல் ஏ-9 பாதை திறந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சிங்கள மக்கள் கைவிட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கும். அதுவும் வர்த்தக நோக்கத்திற்கு மட்டும் தான் என்பதில் சந்தேகமில்லை.

10 January 2009

பிரபலங்களின் புளொக் முகவரி

நடிகர் விஷாலின் புளொக் தள முகவரி: www.vishalblog.com

அமிர்தாப்பச்சான் www.bigb.bigadda.com

கலைப்புலி சீமான் www.seemaan.wordpress.com

அமீர்கான் www.www.aamirkhan.com

08 January 2009

ஏயார்டெல்லின் வதந்தியை நம்பாதீ்கள்!

காலைப் பொழுதில் அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக மெயில் செக்கப் தான்! வழமை போல இன்று காலையும் கணினி முன் உட்கார்ந்து லொகின் செய்தவுடன் வந்த முதல் மெயிலே ஏயர்டெல் சலுகைகளை பற்றியதாகவே இருந்தது.
அதில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது 1000 இலவச எஸ்.எம்.எஸ், 500 நிமிட இலவச வெளிச்செல்லும் அழைப்புக்கள் என நீண்டதொரு மெயிலாக இருந்தது. எதிர்பார்ப்புடன் அனைத்தையும் படித்தேன். இறுதியில் எயர்டெல் சிம்மை பெற (குறிப்பிட்ட இ.மெயில் முகவரி தந்திருந்தார்கள்) இந்த முகவரிக்கு உங்கள் தகவல்களை அனுப்புங்கள் எனவும், நாங்கள் வெகு விரைவில் தொடர்பு கொள்வோம். என்று குறிப்பிட்டிருந்தார்கள். நான் இந்த சலுகைகளையோ மெயிலையோ நம்பவில்லை.
ஏனென்றால் இதுபோல பல தடவைகள் ஏமாற்றத்தை சந்தித்ததால் முதலே Alert ஆகிட்டன்.
ஆசை விட்டுவைக்கவில்லை தான் எனினும் மொட்டைக்கடிதம் போல ஒரு வெறும் ஹாய் போட்டு மெயில் பண்ணினேன். உடனேயே இன் -பொக்ஸில் அநாதையாக ஒரு மெயில் வந்திருந்தது. அதில் அழகாக கீழ் குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் காட்சியளித்தன!!!
Hey idiots, this is a spam message....don't forward this to anyone......
காலைவேளையில் ஒரு 'குட்மோனிங்' சொல்லுவம் என்டில்லை இப்படி திட்டி வருதே சகுணம் சரியில்லை போல இருக்கு என மனதுக்குள்ள நினைத்து விட்டு பணிகளை பார்க்க தொடங்கினேன்.

நண்பர்களே! வாசகர்களே!
இப்படிபட்ட பல ஏமாற்ற வித்தைக்காரர்கள் இணையத்தளத்தில் இருக்கும் வரை ஏமாளிகளும் இருக்கதான் செய்வார்கள். எனவே இவ்வாறு மெயில்கள் வந்தால் தெளிவாக இருக்கவும். ஜாக்கிரதை!!

03 January 2009

2008ஆம் ஆண்டு இழந்த 12 முக்கிய அரசியல்வாதிகள்

இதில் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன், அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, தி.மு.தசநாயக்க, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆகியோர் இனம்தெரியாதோரின் துப்பாக்கிப் பிரயோகத்திலும், கிளைமோர்த் தாக்குதலிலும் படுகொலை செய்யப்பட்டதுடன் அமைச்சர் அநுர பண்டாரநாயக்க, முன்னாள் அமைச்சர்களான ரெஜி ரணதுங்க, ரிச்சட் பத்திரண, முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபதி சூரியாராச்சி, முன்னாள் பிரதி சபாநாயகர் சரத் முனசிங்க ஆகியோர் இயற்கை மரணம் எய்தியிருந்தனர்.

நன்றி: தமிழ் ஊடகத்திலிருந்து

01 January 2009

2008க்கு bye! 2009க்கு கூலாக ஒரு Hai...!

2008க்கு bye! 2009க்கு கூலாக ஒரு Hai...!
விடைபெறும் 2008க்கு செல்லச்சினுங்களோடு bye! சொல்லீட்டு 2009 ஆம் ஆண்டுக்கு கூலாக ஒரு Hai...! சொல்லுவம்.
இலங்கையைப் பொறுத்தவரை 2008 ஆம் ஆண்டானது விட்டுச் செல்வதெல்லாம் யுத்தத்தையும் விலையேற்றத்தையும் தான்! தலைநகர் மக்களிடையே பஸ் குண்டுவெடிப்பு பீதிகளும் கொழும்பில் வாழும் வடக்கு-கிழக்கு இளைஞர்களிடம் வெள்ளைவான் பயமும் அகன்று செல்ல இன்னும் நிறைய நாட்கள் செல்லும் என்றே சொல்ல வேண்டும். 2009 ஆம் ஆண்டாவது சமாதானம் நிறைந்த ஆண்டாக பிறக்குமா என்ற தமிழ் மக்களின் ஏக்கத்தை கிழித்தெறியும் முகமாக அரசாங்கமானது 2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி ஆண்டாக பிரகடனப்படுத்தியிருப்பதால் பிறக்கும் புதுவருடமும் இரத்த களமாகவே அமையும் என்று கூறலாம்.
பொதுத்தேர்தல் வரவிருப்பதால் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறிப்பாக பெற்றோலியத்தின் விலைகளை ஓரிரண்டு ரூபா குறைத்து ஏமாற்றும் தந்திரத்தை மக்கள் புரிந்துள்ளனர். தேர்தல் காலங்களில் விலை குறைப்புச் செய்திகளையும் தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் விலையேற்றம் பற்றிய செய்திகளும் மக்களுக்கு பழகிப் போனதொன்றாகும்.