எதிர்பார்ப்பை கவிழ்த்த எயார்டெல்லின் கட்டணச் சலுகை

இலங்கைக்குள் நான்காவது கையடக்கதொலைபேசி வழங்குனராக எயார்டெல் கடந்த வாரம் (12-01-2009) காலடி எடுத்துவைத்துள்ளது. எயார்டெல்லானது பல வசதிகளை வழங்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
எயார்டெல்லை விட டயலொக்கின் பிளாஸ்டர் பக்கேஜ் சிறந்தது எனக்கூறலாம். பெரும் வரவேற்புக்கு மத்தியில் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கும் எயார்டெல்லின் எதிர்காலம் சற்று ஒளிமயமாக அமையும் என்றாலும் டயலொக்கை உடைக்கமுடியாது போலவே தோன்றுகிறது.
எயர்டெல் வருகையை முன்னிட்டு, டயலொக் இந்தியாவை வரவேற்கின்றோம், இந்தியாவிற்கு வெளிச்செல்லும் அழைப்புக் கட்டணங்கள் ரூபா 10 மட்டுமே! என பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை காணமுடிந்தது. (எயர்டெல்லை வரவேற்கும் முகமாகவே அல்லது போட்டி தொடங்கிவிட்டது கவனம் என்பதே தெரியல)
சரி எயர்டெல் அழைப்புக் கட்டணங்களை பார்த்தோம் என்றால், முற்கொடுப்பனவு இணைப்புகளுக்கு எந்த நெட்வேர்க்கிற்கும் ரூபா 2 தான், அத்துடன் எஸ்.எம்.எஸ் ஒன்றிற்கு ரூபா 1 என்றும் அறிவித்திருந்தது. இதே கட்டணங்கள் தான் பிற்கொடுப்பனவு இணைப்புகளி்ற்கும் எனினும் பிற்கொடுப்பனவு இணைப்புகளில் குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு வெளிச்செல்லும் அழைப்பு இலவசம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக ரூபா 300 மாதாந்தம் செலுத்தும் இணைப்புக்கு 300ரூபா பெறுமதியாக அழைப்புக்கள் இலவசம் (150நிமிடம்)
அதேபோலவே ரூபா.600 மாதாந்த கொடுப்பனவு இணைப்பிற்கு ரூபா.1200 பெறுமதியான வெளிச்செல்லும் அழைப்புக்கள் இலவசம். (600நிமிடம்)
எயார்டெல்லின் முற்கொடுப்பனவு சிம்மை ரூபா 100 க்கு (100ரூபா றிலொட்டுடன்) சந்தையில் பெறக்கூடியதாக இருந்தது. எனினும் இந்த முற்கொடுப்பனவு இணைப்பு நஷ்டம் இதைவிட டயலொக்கே பரவாயில்லை. வெளிநாடுகளிற்கு நிமிடத்தி்ற்கு 50ரூபாக்கு மேலாக அறவிடப்படுகிறது. உள்ளூர் வெளிச்செல்லும் அழைப்புக்கள் சராசரியாக நிமிடமொன்றுக்கு 3 ரூபா செலவாகின்றது என்ற சோகக் குரல்கள் எயார்டெல் பயன்படுத்தும் நண்பர்களிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றது.
என்னதான் இந்தியாவின் முதன்மை கொம்பனியாக எயார்டெல் இருந்தாலும் இலங்கைக்குள் தாக்குபிடிக்க முடியாது என்று பலமாகக் கூறிக்கொள்ளலாம்.

Comments