கணக்கெடுக்காததும், கண்டுகொள்ளாததுமான பொலிஸ்பதிவு..

இலங்கைத் தமிழர் அதுவும் வடக்கு - கிழக்கு தமிழர்களை பதிவு என்ற போர்வையில் அலைய விடும் பாதுகாப்பு படையினர் ஒரு புறமிருக்க பொலிஸ் பதிவு செய்யும் போது துட்டுக்காக அலையும் காக்கிச் சட்டைக்காரர்கள் ஒருபுறம். இதையெல்லாம் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.வடக்கிலிருந்து அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு வரும் போது கிளியரன்ஸ் என்று 3,4 மாதங்கள் அலையவிடும் ஆமிமாமாக்கள் ஒருபுறம்.

சரி என்று கிளியரன்ஸ் தான் எடுத்தாச்சு என்று தென்பகுதிக்கு வந்தவுடன் பொலிஸ் பதிவு இன்னொரு புறம்.கடந்த வருடம் வடக்கு மாகாண தமிழர்களை பதிவு செய்தது போதாது என்று மீண்டும் பதிவு செய்து கணக்கெடுப்பு நடத்தினமாம். அது ஒருபுறமிருக்க ஒன்லைன்ல பதிவு வேற.தமிழ் மக்கள் பொலிஸ் பதிவுகளுக்கு முன்னர் சற்று மதிப்புக் கொடுத்தனர். ஆனால் இப்போது பதிவுகள் எல்லாம் வாழ்க்கையில் பழகியும் பாழாகியும் போனதொன்றாகிவிட்டது. அதை கண்டுகொள்ளாமலும் கணக்கெடுக்காததுமானதாகிவிட்டது என்றே கூறவேண்டும்.

தென்பகுதி பொலிஸ் நிலையங்களில் பதிவை மேற்கொள்ளும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று பதிவை மேற்கொள்ளாமல் வீடுகளுக்கு செல்லும் நிலை கொழும்பு வடக்கிலுள்ள நிலையங்களில் இன்றும் காணக்கூடியதாகவுள்ளது என்பதை மறுக்க முடியாது. வரிசையில் நில்லுங்கோ துரை வந்துடுவார் என்று கத்தும் தாராக்கள் ஒருபுறம். இப்படி தமிழர்கள் பதிவுக்காக பிறந்தவர்கள் போல பதிவு செய்ய அலைந்து திரிபவர்கள் பற்றி யாருமே அலட்டிக் கொள்வதில்லை.ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் ஒவ்வொரு கட்டுப்பாடுகள்.

சில பொலிஸ் அதிகாரிகள் நேர்மையாகவும் திறமையாகவும் கடமையை செய்வதனால் எதுவித சிரமமின்றி பொலிஸ் பதிவை மேற்கொள்ளமுடியும் என்பதையும் சொல்லியாக வேண்டும்.பாதுகாப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒன்லைன் பதிவு முறையானது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை கூறமுடியாது.

ஏனெனில் இலங்கைப்பிரஜைகள் அனைவருக்கும் இன்ரநெற் அறிவு இருக்கும் என்று சொல்லமுடியாது, இன்ரநெற் என்றால் என்ன அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறவர்களும் இருக்கத்ததான் செய்கிறார்கள்.வடிவேலு சிறையில் இருக்கும் போது வடிவேலுவின் சிஷ்யன் சுறாமீன் இருக்கு, விலங்குமீன் இருக்கு ஏன் வாலை மீன் கூட இருக்கு. இந்த பொலிஸ்காரர் கேட்கிற ஜாமீன் எங்க அண்ண காட்டவே இல்லையே! என்ட மாதிரி தான் இன்டர்நெட்டை எங்க தம்பி பிடிக்கிறது என்று கேட்கிற ஆச்சி மார் எங்க என்ன ஒன்லைன்ல பதிவு செய்யுறது?

Comments

இப்படி தமிழர்கள் பதிவுக்காக பிறந்தவர்கள் போல பதிவு செய்ய அலைந்து திரிபவர்கள் பற்றி யாருமே அலட்டிக் கொள்வதில்லை.//

காலை
வணக்கம்
நண்பரே!!!
தேவா.........