புத்துயிர் பெறுமா ஏ-9?


2002, 2003-4 காலப் பகுதியிலிருந்த சந்தோஷம் மீண்டும் ஏற்படுமா?
கொழும்பு செல்வதென்றால் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம்-முகமாலை பஸ்ஸில ஏறினால் 10 மணியளவில் முகமாலை சென்றடைந்து பின்னர் 11 மணியளவில் குறிப்பிட்ட பஸ் (விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி) ஒன்றில் 3 மணித்தியால பயணம் இடைவேளைக்காக முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் 15 நிமிடம். பின்னர் மதியம் 1 மணிக்கு ஓமந்தைக்கு வந்தடைந்த பின்னர் கொழும்பு பஸ் எடுத்தோம் என்றால் மாலை 5 அல்லது 6மணிக்கெல்லாம் தலைநகருக்கு வந்து விடலாம் வெறும் 350 ரூபாவுடன். அல்லது ஹயஸ் வானில் தான் போகனும் இப்படியெல்லாம் 2, 3 பஸ்ஸில ஏறமுடியாது என்று அடம்பிடிப்பவர்களுக்கு (வீட்டு வாசலில ஏற்றி கொழும்பு உறவினர்களின் வீட்டு வாசலிலேயே கொண்டு சென்று drop பண்ணணும் என்றால்) 1000 ரூபாவை கொடுத்தால் ஏறின வானிலயே கொழும்பு வந்து சேரலாம்.


அன்றைய காலப்பகுதி (சமாதான காலம்) வேறு, இன்றைய காலப்பகுதி (யுத்தவெறி பிடித்த காலம்) வேறு. சரி 2009 தமிழ் புதுவருடத்துக்காவது ஏ-9 திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. வீதியை திறந்தால் அதனூடாக மேற்கொள்ளப்படும் பிரயாணம் சற்று சிரமமாக அமையலாம். சோதனைகள் அதிகமாக இருக்கலாம். எனினும் தற்போது விமானம், கப்பல் மூலம் மேற்கொள்ளும் பிரயாணத்தை விட ஏ-9 செலவு குறைந்ததாக அமையலாம்.


தற்போதைய நிலைவரப்படி ஏ-9 வீதி சேதமடைந்திருப்பதால் அதனை மறு சீரமைப்பு செய்த பின்னரே பாதை திறக்கப்படும் என்றும் முதலில் இராணுவ போக்குவரத்துக்கு மட்டும் தான் என்றும் பின்னரே பொதுமக்களின் பாவனைக்காக பாதை திறக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் முகமாலை முதல் கிளிநொச்சி வரையிலான பாதை மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை ஏ-32 பாதை தற்பொழுது மும்முரமாக செப்னிடும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் ஏ-9 வீதி திருத்தியமைக்கப்படும் என்றும் அண்மையில் பத்திரிகையொன்றில் பார்த்தேன்.


எது எப்படியோ ஏ-9 வீதி திறந்த பின்னர் சமாதான காலத்திலிருந்த யாழ்ப்பாணத்தை காணமுடியாது தான் என்றாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாலே போதும். 2004 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சிங்கள மக்களின் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் 2009இல் ஏ-9 பாதை திறந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சிங்கள மக்கள் கைவிட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கும். அதுவும் வர்த்தக நோக்கத்திற்கு மட்டும் தான் என்பதில் சந்தேகமில்லை.

Comments

என்று முடியும் இந்த வெறி பிடித்த போர்

:((((