15 December 2008

செருப்படி வாங்கி விடை பெறும் புஷ்


ஈராக் சென்ற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து பதவியிலிருந்து விடைபெறும் நோக்கத்துடன் புஷ் நேற்று ஈராக் சென்றார். .
அந்நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேசிய பின்னர் புஷ் ஈராக் பிரதமர் அல் நூரியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, பத்திரிகையாளர் ஒருவர் ஆவேசத்துடன் புஷ்ஷை கடுமையாக திட்டியவாறே தனது சப்பாத்துக்களை கழற்றி புஷ் மீது வீசினார்.
எதிர்பாராத நேரத்தில் தன்னை நோக்கி சப்பாத்து பறந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த புஷ் வேகமாக தனது தலையை குனிந்து கொண்டதால் அந்த சப்பாத்துக்கள் அவர் மீது படாமல் சென்றது.

An Iraqi man shows a mobile text message one of several in circulation that reads, 'We congratulate Mr Bush and Maliki a pair of shoes'


இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சப்பாத்துக்களை வீசி புஷ்ஷை தாக்கிய பத்திரிகையாளரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர் எகிப்து தொலைக்காட்சி ஒன்றின் ஈராக் நிருபராக பணியாற்றி வருகிறார்.
இந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த அதிபர் புஷ், தன் மீது வீசப்பட்ட சப்பாத்துக்களின் சைஸ் 10 என்பது மட்டுமே தமக்கு தெரியும் என்றார். (பலமுறை சப்பாத்து எறிவாங்கியிருக்கிறார் போலும்... சப்பாத்துடைய அளவுகளை எல்லாம் ஞாபகம் வைச்சிருக்கிறாரே)
சப்பாத்து எறிந்த விடயமறிந்த பலரும் தமது சந்தோஷங்களை எஸ்.எம்.எஸ் மூலம் தமது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர் என ஏ.எப்.பி படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருக்கிறது.
ஈராக்கில் தங்களுக்கு பிடிக்காதவர்களை மக்கள் செருப்பால் அடித்து அவமதிப்பது வழக்கம்.


ஈராக் அதிபர் பதவியிலிருந்து சதாம் உசேன் நீக்கப்பட்ட பின்னர், அவரது சிலை அகற்றப்பட்டவுடன் ஏராளமான ஈராக் மக்கள் சதாமின் சிலையை தங்கள் செருப்புகளால் அடித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சப்பாத்து அடி மூலம் தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு விடைபெறுகிறார் புஷ்.

11 December 2008

யாழ்ப்பாணத்து சிம் கார்ட்களும் இளைஞர்களும்...

யாழ்ப்பாணத்தில் கையடக்க தொலைபேசி சேவைகளை டயலொக், மொபிட்டல் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தமது சேவைகளை யாழ்.குடாநாட்டிற்கு வழங்கிவருகின்றது. குடாநாடு முழுவதும் சுமார் 50,000 கையடக்க தொலைபேசி பாவனையில் இருப்பதாக அண்மையில் இணையத்தளம் ஒன்றில் அறிந்து கொண்டேன்.


இந்நிலையில்

Continue....
எனது மடிக்கணனியானது வைரஸ் காரணமாக கொஞ்சம் பிரச்சினை தருகிறது. அதை சீர்செய்திட்டு மிகுதி தொடரும் ஆக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சி செய்கின்றேன். தொடர்ந்திருங்கள்.

07 December 2008

கூகுள் அட்சென்ஸ்...

நாம் ஏற்கெனவே இணையத்தளமோ அல்லது புளொக்கோ வைத்திருந்தால் அதன் மூலம்.
உங்களிடம் சொந்தமாக இணையத்தளம் அல்லது ஒரு வலைப்பதிவாவது இருக்கின்றதா? இருந்தால் நீங்கள் அட்சென்ஸ் பாவிக்கலாம். இது கூகுளின் ஒரு சேவையே.
கூகுள் நிறுவனமானது வர்த்தக நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களை வாங்கி உங்கள் தளத்தில் விளம்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழிதான் இந்த ' கூகுள் அட்சென்ஸ்'


'கூகிள்' மிகவும் நம்பிக்கையான நிறுவனம். மற்ற நிறுவனங்களைப் போல் ஏமாற்றுவதில்லை. பணத்தை தவறாமல் அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இது பற்றி மேலும் விபரமறிய http://www.google.co.in/intl/en/ads என்பதை சுட்டுங்கள். பொறுமையாக படியுங்கள் அனைத்துவிபரமும் இருக்கிறது.
அட்சென்ஸ் தளத்திற்குச் சென்று பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்யும் போது உங்கள் பெயர், மற்றும் காசோலை அனுப்புவதற்கான வேண்டிய முகவரி மற்றும் உங்களின் இணையதள முகவரி போன்ற பல விடயங்களை கேட்பார்கள். நீங்கள் தெளிவாக கொடுக்க வேண்டும். பின் இரண்டு நாட்களுக்குள் உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டதற்கான மெயில் அனுப்புவார்கள்.
உங்கள் கணக்கு அக்ரிவ் செய்யப்பட்ட பின் கூகுள் அட்சென்ஸ் தளத்திற்குச் சென்று அவர்களின் விளம்பரங்களை வெளிப்படுத்த தேவையான புரோகிராம் கோடிங்கை தருவார்கள். நாம் அதை அப்படியே காப்பி செய்து நம் இணையதளத்தில் இடையில் போட்டால் போதும். நம் வெப் தளத்திலோ புளொக் தளத்திலோ அவர்களின் விளம்பரம் அருமையாக காட்சிதரும்.
தமிழ் தளம் வைத்துக்கொண்டு கூகுள் அட்சென்சுக்கு விண்ணப்பிக்கின்றீர்களா? அப்படியானால் அனுமதியை மறுத்து விடுவார்கள். சொறி உங்களுடைய தளத்தில் ஆங்கில வார்த்தைகளின் செறிவு குறைவாக உள்ளது என்று கூறி மழுப்பி விடுவார்கள். கூகுளிற்குமா தமிழன் மேல் பொறாமை???? சீ.சீ.
அட்சென்ஸ் பாவிக்கும் தமிழ் தளங்கள் முதலில் ஒரு ஆங்கிலத் தளத்தைக் காட்டி கணக்கை ஆரம்பித்துவிட்டுப் பின்னர் கோடிங்கை பெற்று தமிழ் தளங்களில் பாவிப்பது வழக்கம். கூகுள் அட்சென்ஸ் புதிய தளங்களில் அதுதான் தமிழ் தளங்களில் கோட்டைப் போடும் போது தானே புதிய தளங்களை இனம்கண்டு சேர்க்கும். உதாரணமாக உங்களிடம் 3 தமிழ் புளொக் (எந்த மொழியானாலும் பிரச்சினையில்லை) மற்றும் 2 இணையத்தள முகவரி இருக்குமானால் 5 தடவை அட்சென்ஸ்க்காக விண்ணப்பிக்க தேவையில்லை. ஒரு தடவை விண்ணப்பித்து அனுமதி கிடைத்தவுடன் அந்த கோடிங்கையே உங்களுடைய 5 தளங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் தளத்திற்கு வரும் விருந்தினர்கள் வலைப்பூவில் அதாவது உங்களது தளத்தில் காணப்படும் விளம்பரங்களை சொடுக்கும் போது குறிப்பிட்ட தொகைப் பணம் உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும். 100 டொலர் வந்தவுடன் காசோலையை கணக்கு திறக்கும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்புவார்கள். அதற்கு முன்னர் 90டொலர் வந்தவுடன் உங்களுடைய முகவரிக்கு ஒரு போஸ்ட் கார்ட் நீங்கள் தான் உரிமையாளரா? என இனம்கண்டு கொள்ள அனுப்புவார்கள், அதை நீங்கள் திரும்ப கூகுள் நிறுவனத்தின் தலைமைக்காரியாலயத்திற்கு அனுப்ப வேண்டும். இலவச தளமானாலும், வலைப்பூவாக இருந்தாலும் வேலைசெய்யும்.
அட்சென்ஸ் மூலம் தமிழ் வலைப்பதிவுகளில் எதுவும் செய்ய முடியாது. ஆங்கில வலைப்பதிவுகளில் ஹிட் வீதம் கூட கூட அட்சென்ஸ் வருவாயும் பலமடங்காக கூடிக்கொண்டு போகும். அட்சென்ஸ்சை விட நல்ல தளம் ஏதும் இருப்பதாகத் இதுவரை தெரியவில்லை.
கூகுள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை.
நான் சுமார் 7,8 தடவை வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி மற்றும் வலைப்பூக்களை உருவாக்கி செய்து அட்சென்ஸ்க்கு விண்ணப்பித்து பார்த்தேன் முயற்சி பலனளிக்கவில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் கூகுள் நிறுவனத்தினர் மறுத்து விட்டனர்.
சற்றும் மனந்தளராமல் அந்த முயற்சியை அதாவது கூகுளின் அட்சென்ஸ்ஸை கைவிட்டு Adbrite, BidAdviser நிறுவனங்களை நாடினேன். இவர்களும் கூகுள் அட்சென்ஸ் சொன்ன பதிலையே சொன்னார்கள். எனினும் கணக்கை திறந்து விளம்பரங்களை எமது வலைப்பதிவில் இட அனுமதியளிக்கின்றனர். பணம் தான் தரமாட்டார்கள் இது என்ன கொடுமை சரணவணா.
தமிழ் தளங்களில் அட்சென்ஸ் பாவிப்பதை காட்டிலும் ஆங்கில தளங்களில் பாவிப்பதால் டொலர்களை கண்களில் காட்டுகிறார்கள் கூகுள்.

இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன.
இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு.
நான் கூகிள் அட்சென்சை தமிழ், ஆங்கில வலைப்பதிவுகளில் பாவித்து வருகின்றேன். ஆனால் தமிழ் வலைப்பதிவில் கூகிள் அட்சென்ஸ் மூலமான வருவாய் மிக மட்டம். ஆங்கில வலைப்பதிவில் சுமாராக வந்துகொண்டிருக்கின்றது.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு வலைப்பதிவுகளும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 பக்கப் பார்வைகளைப் பெறுகின்றன. ஆனால் ஒவொருநாளும் ஆங்கில வலைப்பதிவில் கிடைக்கும் பணத்தின் பெறுமதி தமிழ் வலைப்பதிவில் கிடைக்கும் பணப்பெறுமதியின் 4 மடங்காகும்.
இதற்கான காரணம் என்ன?
கூகிள் அட்சென்ஸ் பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பார்த்து அதற்கு தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டும். தமிழ் பக்கங்களைப் பார்த்தால் அதற்கு எதுவும் புரிவதில்லை. தமிழ் மொழி என்று மட்டுமே புரிகின்றது. அதனால் தமிழில் ஏதாவது விளம்பரம் இருந்தால் காட்டும் இல்லாவிட்டால் தொடர்பில்லாமல், சூறாவளி பணம் தாருங்கள் என்று கேட்கும். பக்கத்தைப் பார்ப்பவரும் இதென்ன கோமாளித்தனம் என்று நினைத்து அதை அப்படியே விட்டுவிடுவார்.
ஆங்கில வலைப்பதிவில் அல்லது பக்கங்களில் தொடர்பான விளம்பரங்களைக் காட்டுவதால் தளத்திற்கு வரும் பயனாளர்கள் அந்த விளம்பரங்களைக் சொடுக்கி அங்கே செல்வார்கள். உங்களுங்கும் பையில் பணம் நிரம்பும். உதாரணமாக தீபெத் பற்றி ஒரு இடுகையை நீங்கள் இட்டால் அங்கே தீபெத்திற்கான பயண வழிகாட்டி போன்ற விளம்பரங்கள் கிடைக்கும். தீபெத் பற்றி உங்கள் இடுகையை வாசிப்பவர் மேலதிக விபரம் நோக்கி அந்த விளம்பரங்களைச் சொடுக்குவார்.
கூகிள் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் ஆங்கிலம் அல்லது கணனியியலில் போன்ற மொழிகளில் பயன்படுத்துங்கள். செல்வச் சீமானாகுங்கள். தமிழுக்கு இன்னும் காலம் இருக்கின்றது போலும்.

அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

04 December 2008

Wi-Max தொழிற்படும் முறை

வை-மெக்ஸ் தொழிற்படும் விதத்தை மிகவும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், ஏறக்குறைய Wi-Fi தொழிற்படும் முறைமையைப் போன்றது. இரண்டிக்குமிடையிலான வித்தியாசத்தை நோக்குவோமானால் Wi-Max அதிக வேகத்துடனும் அதிக தூரத்திலும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வசதியினை வழங்குகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான உபயோகிப்பாளர்களை கொண்டிருக்கும் இணைப்பாக வை-மேக்ஸ் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் கேபிள் வசதி, தொலைபேசி இணைப்புகளும் இல்லாத இடங்களில் இந்த வை-மெக்ஸ் பெரியளவில் உதவுகிறது.

இந்த வை-மேக்ஸ் உபகரணங்களாவன:

1. Wi-Max டவர்: நாம் சாதாரணமாக பயன்படுத்தும் செல்போன் இணைப்பை ஏற்படுத்த உதவும் கோபுர முறைமைகளை போன்றதாகும். இந்த டவர்களை கட்டிடத்தின் மாடியிலோ அல்லது பொதுவான ஒரு இடத்திலோ அமைத்துக் கொள்ளலாம்.

2. Wi-Max ரிசீவர்: ரிசீவர் முறையில் தகவல்களை பெற்றுக் கொள்ளும் கருவியாக அன்ரனா (Antenna) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை அன்ரனாவானது சாதாரண ரீவி அன்ரனா போல் அல்லாது ஒரு சிறிய பெடடியாக அதனுள் PCMCIA என்ற காட் வசதி கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் ல்ப்ரொப் அல்லது கணனிக்கு வரும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இதுபோன்று அமைக்கப்பட்டுள்ள Wi-Max டவர்கள் மூலம் இன்டர்நெட் இணைப்பை அகன்ற அலைவரிசை முறையில் வயர்லெஸ் ஆக பெற்றுக் கொள்ளலாம். இந்த வை-மேக்ஸ் டவர்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைக்கவும் பயன்படுகிறது. ஒரு Wi-Max டவர் ஆனது 3000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு தகவல்களை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் உதவுகின்றது.

இந்த வை-மேக்ஸ்' வழங்கும் இரண்டு விதமான வயர்லெஸ் சேவைகள்.

1. நேரடி பாதையில்லாத ஒளிபரப்பு : ( NON LINE & RIGHT)
இந்த முறையானது ஒரு Wi-Fi போன்ற சேவையினை வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒரு சிறிய அன்டனா கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு, அதனை Wi-Max டவர் உடன் தொடர்பு கொள்ளச் செய்து தகவல்கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மூலம் Wi-Max குறைந்த அலைவரிசைகளைப் பயன்படுத்தி (2GHZ முதல் 11GHZ வரை) தகவல் அனுப்பும் வேகத்தை அமைத்துக்கொள்கின்றது. இந்த குறைந்த அலைவரிசை தகவல் அனுப்புதல் மூலம் இயற்கையான தடங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடிகின்றது.

2. நேரடிப் பாதையிலான ஒளிபரப்பு: (LINE OF RIGHT)
இந்த முறையின் மூலம் ஒரு நிரந்தரமான டிஷ் அன்ரனா ஒன்றை வீட்டின் அல்லது அலுவலத்தில் உள்ள கூரையின் மேல் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அன்டனா Wi-Max டவரை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் தகவல்களை வீட்டின் மாடியில் உள்ள அன்ரனா எளிதான Wi-Max டவரில் இருந்து பெற முடிகின்றது. இது போன்ற Wi-Max இணைப்பானது மிகவும் வலிமையானது மற்றும் நிரந்தரமானது.

இந்த முறையில் தொடர்பு கொள்வதால் அதிக அளவிலான தகவல்களையும் பெரிய அளவிலான தடங்கல்கள் இன்றி எளிதாக அனுப்ப முடியும். மேலும் இதன் மூலம் அதிக வேகமாக அதாவது 66GHZ என்ற அலைவரிசை வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wi-Max தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

தற்போதைய நிலைவரப்படி இன்ரெல் (Intel) நிறுவனம் தயாரித்து வரும் Centrino என்று அழைக்கப்படும் புரசசர்களைக் கொண்டு தயாரிக்கும் லப்ரொப் கம்பியூட்டர்களில் இது போன்ற Wi-Max என்ற தொழில் நுட்பத்தை ஏற்கனவே அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இன்ரெல் வழங்கும் அனைத்து லப்ரொப் கம்பியூட்டர்களிலும் இந்த வை-மேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள லப்ரொப் கம்பியூட்டர்களை உபயோகிக்கத் தொடங்கினால் Wi-Max base Station எனப்படும் அடிப்படைக்கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது சுலபம்.

மேலும் இந்த இன்டல் (Intel) நிறுவனமானது கிளியர்வயர் (ClearWire) என்ற நிறுவனத்துடன் இணைந்து Wi-Max என்ற தொழில் நுட்பத்தை புதிய முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த கிளியர்வயர் நிறுவனமானது Wi-Max base Station-ல் இருந்து ஒரு சிறிய வயர்லஸ் மோடம் என்ற பெட்டிக்கு தகவல்களை அனுப்பும் வண்ணம் வடிவமைத்து வருகின்றது. இவ்வாறு செய்வதால்இ நமது கம்ப்ïட்டரில் இந்த சிறிய மோடம் மட்டும் அமைக்கப்பட்டு இருந்தால் நமது கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு Wi-Max தொழில் நுட்பத்தின் மூலம் தகவல்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று ஒரு கம்பியூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போது encryption எனப்படும் முறையைப் பயன்படுத்தி அனுப்பப்படுகின்றது. ஆகையினால் அனுமதியில்லாமல் எந்த ஒரு நபரும் நமது தகவல்களை படிக்கவோ, பார்க்கவோ முடியாது. இந்த encryption என்ற முறையின் மூலம் தகவல்களை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றி அனுப்புகின்றது. மேலும் Wi-Max தகவல் அனுப்பும் வேலையினை மிகவேகமாகவும் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக Wi-Fi என்ற முறை மூலம் ஒரு நொடிக்கு 54 மெகாபிட்ஸ் என்ற வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். ஆனால் Wi-Max என்ற முறை மூலம் ஒரு நொடிக்கு 70 மெகாபிட்ஸ் என்ற வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும்.
ஆனால் Wi-Max உடைய சிறப்பு அதன் வேகம் (Speed) அல்ல. மாறாக அது செயல்படும் தூரம் (distance) என்பதே சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

Wi-Max செயல்படும் விதம்

நமது கம்பியூட்டரில் Wi-Max பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் இணைப்பு அமைப்பது என்பது மிகவும் சுலபம். உதாரணமாக இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் (ISP) Wi-Max base Station என்ற அமைப்பை நிறுவுவர். இந்த base Station நமது வீட்டிலிருந்து அல்லது அலுவலகத்திலிருந்து 10 மைல் தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது நமது கம்பியூட்டரில் Wi-Max இருந்தாலோஇ அல்லது நமது பழைய கம்ப்ïட்டரில் Wi-Max நிறுவிக் கொள்ள வேண்டும்.
இப்போது நமது கம்பியூட்டர் Wi-Max base Station இடம் இருந்து encryption Code எனப்படும் தகவலைக் கொடுக்கும். இந்த encryption Code எனப்படும் Key-யை வைத்துதான் Wi-Max base Station நமது கம்பியூட்டருக்கு தகவல்களைக் கொடுக்கின்றது. இது போன்ற முறையில் இன்டர் நெட் உபயோகிப்பதற்கு நாம் மாத வாடகை கொடுத்தால் போதுமானது, இந்த மாத சந்தாவானது சாதாரண Dialup இன்டர் நெட் இணைப்புக்கு கொடுக்கும் தொகையை விட குறைவானதாகும்.

சாதாரணமாக நமது அலுவலகத்தில் உள்ள கம்பியூட்டர்களில் இன்டர்நெட் இணைப்பு அமைப்பதற்கு Wi-Fi முறையிலே ஏற்பாடு செய்து கொள்வது சிறந்தது. ஏனென்றால், நமது அலு வலகங்களில் உள்ள கம்ப்ïட்டர்கள் LAN என்ற Local Areas NetWork முறையில் உள்ளது.

அதற்கு Wi-Fi இணைப்பே போதுமானது. ஆனால், அதைவிட பெரிய அளவில் அல்லது நகரங்களுக்குள் உள்ள கம்பியூட்டர்களில் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமானால் அதற்கு Wi-Max முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த Wi-Fi இணைக்கப்பட்டுள்ள LAN கம்பியூட்டர்களும் Wi-Max மூலம் இணைக்கப்பட்டுள்ள MAn அல்லது Wan கம்பியூட்டர்களும் தொடர்பு கொள்ள ரூட்டர்கள் (Router) போதுமானது.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மூலம் லோக்கல் தொலைபேசி STD தொலைபேசி மற்றும் வெளிநாட்டு தொடர்பு கொள்ளும் வசதிகளை Voice over IP (VIOP) எனப்படும் முறை மூலம் உருவாக்கிக் கொள்ளலாம். நமது லப்ரொப் கம்பியூட்டர் மூலம் வயர்லஸ் முறையில் எங்கு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்பது சிறப்பான வசதியல்லவா!

மனைவியுடன் அன்பாக இருங்கள்....

ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை தங்கள் வலையில் வீழ்த்தி விடுகிற பவர் பெண்களுக்கு உண்டு. (சுப்ரமணியபுரம் படத்தில் வரும் பெண்ணின் பார்வையில் விழாத ஆண்களே இல்லையெனலாம்) ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களுக்கு, பெண்களின் 'கருணைப் பார்வை' இருந்தால் தான் முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

இவை ஒருபுறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்ற வரையறையையும் தாண்டி கணவன்-மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம்.

தம்பதியர் வாழ்க்கையில் sex முக்கிய இடம்பெறுகிறது. இதில், ஒருவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான எதிர்விளைவை அவர்களது முகத்தில் மறுநாள் காலையிலே பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள் அது பற்றி எனக்கு அனுபவத்தில தெரியாதுங்கப்பா...... நான் சின்னப் பொடியன்
செக்ஸ் விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத் தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள்.

ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. அவள் அதனால், மெல்ல மெல்லத் தான் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்ள வேண்டும்.

'இன்டைக்கு அது வேண்டாம்' என்று மனைவி சொன்னால் கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது. சரி... என்று பாசமாகவே சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை கேளுங்கள். உடல்நலம் சரியில்லையா? டாக்டரை பார்க்க செல்ல வேண்டுமா? என்றெல்லாம் பாசத்தோடு கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஓரளவு சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது.

உறவின்போதும் மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்துவிட்டு சாக்கு மாடு மாதிரி படுத்து தூங்கி விடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடி விடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின்போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் தவறாமல் கேளுங்கள். அவள் மட்டுமல்ல நீங்களும் மகிழ்ச்சியாக இருந்தீர்களா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

செக்ஸ் விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் அவளுக்கு விரக்தி தான் மிஞ்சும். என்ன வாழ்க்கை இது? என்று யோசிப்பவள், எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள்.
ஒருவேளை அப்படி நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கையே பிரச்சினைகளின் கூடாரமாகிவிடும். நரகத்தின் வேதனை தான் உங்களுக்கு மிஞ்சும்.
இதெல்லாம் தேவை தானா?
செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.

* அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியை பார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித்தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாதநேரத்தில் குறிப்பாக பிள்ளைகள் இருந்தால் அவர்கள் இல்லாத இடத்தில்) சில அன்பான முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீது பாசத்தை கொட்டுவாள்.

* வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால், அவளது கரத்தை பற்றிக்கொண்டு முடிந்தால் சிற்சில சில்மிஷங்கள் செய்யுங்கள். இந்த பாதுகாப்பையும், அன்பான அரவணைப்பையும் எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள் என்று பொதுவாக கூறலாம்.

* வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள். மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.

* எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

* எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதானமாகி விடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேச வேண்டும். மனைவி தரப்பில் அமைதி ஏற்படுவதை உணர முடியும்.

இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சந்தோஷம் தான்.

(வீரகேசரியில் சுட்டது)