கூகுள் அட்சென்ஸ்...

நாம் ஏற்கெனவே இணையத்தளமோ அல்லது புளொக்கோ வைத்திருந்தால் அதன் மூலம்.
உங்களிடம் சொந்தமாக இணையத்தளம் அல்லது ஒரு வலைப்பதிவாவது இருக்கின்றதா? இருந்தால் நீங்கள் அட்சென்ஸ் பாவிக்கலாம். இது கூகுளின் ஒரு சேவையே.
கூகுள் நிறுவனமானது வர்த்தக நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களை வாங்கி உங்கள் தளத்தில் விளம்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழிதான் இந்த ' கூகுள் அட்சென்ஸ்'


'கூகிள்' மிகவும் நம்பிக்கையான நிறுவனம். மற்ற நிறுவனங்களைப் போல் ஏமாற்றுவதில்லை. பணத்தை தவறாமல் அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இது பற்றி மேலும் விபரமறிய http://www.google.co.in/intl/en/ads என்பதை சுட்டுங்கள். பொறுமையாக படியுங்கள் அனைத்துவிபரமும் இருக்கிறது.
அட்சென்ஸ் தளத்திற்குச் சென்று பதிவு செய்யுங்கள். நீங்கள் பதிவு செய்யும் போது உங்கள் பெயர், மற்றும் காசோலை அனுப்புவதற்கான வேண்டிய முகவரி மற்றும் உங்களின் இணையதள முகவரி போன்ற பல விடயங்களை கேட்பார்கள். நீங்கள் தெளிவாக கொடுக்க வேண்டும். பின் இரண்டு நாட்களுக்குள் உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டதற்கான மெயில் அனுப்புவார்கள்.
உங்கள் கணக்கு அக்ரிவ் செய்யப்பட்ட பின் கூகுள் அட்சென்ஸ் தளத்திற்குச் சென்று அவர்களின் விளம்பரங்களை வெளிப்படுத்த தேவையான புரோகிராம் கோடிங்கை தருவார்கள். நாம் அதை அப்படியே காப்பி செய்து நம் இணையதளத்தில் இடையில் போட்டால் போதும். நம் வெப் தளத்திலோ புளொக் தளத்திலோ அவர்களின் விளம்பரம் அருமையாக காட்சிதரும்.
தமிழ் தளம் வைத்துக்கொண்டு கூகுள் அட்சென்சுக்கு விண்ணப்பிக்கின்றீர்களா? அப்படியானால் அனுமதியை மறுத்து விடுவார்கள். சொறி உங்களுடைய தளத்தில் ஆங்கில வார்த்தைகளின் செறிவு குறைவாக உள்ளது என்று கூறி மழுப்பி விடுவார்கள். கூகுளிற்குமா தமிழன் மேல் பொறாமை???? சீ.சீ.
அட்சென்ஸ் பாவிக்கும் தமிழ் தளங்கள் முதலில் ஒரு ஆங்கிலத் தளத்தைக் காட்டி கணக்கை ஆரம்பித்துவிட்டுப் பின்னர் கோடிங்கை பெற்று தமிழ் தளங்களில் பாவிப்பது வழக்கம். கூகுள் அட்சென்ஸ் புதிய தளங்களில் அதுதான் தமிழ் தளங்களில் கோட்டைப் போடும் போது தானே புதிய தளங்களை இனம்கண்டு சேர்க்கும். உதாரணமாக உங்களிடம் 3 தமிழ் புளொக் (எந்த மொழியானாலும் பிரச்சினையில்லை) மற்றும் 2 இணையத்தள முகவரி இருக்குமானால் 5 தடவை அட்சென்ஸ்க்காக விண்ணப்பிக்க தேவையில்லை. ஒரு தடவை விண்ணப்பித்து அனுமதி கிடைத்தவுடன் அந்த கோடிங்கையே உங்களுடைய 5 தளங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் தளத்திற்கு வரும் விருந்தினர்கள் வலைப்பூவில் அதாவது உங்களது தளத்தில் காணப்படும் விளம்பரங்களை சொடுக்கும் போது குறிப்பிட்ட தொகைப் பணம் உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும். 100 டொலர் வந்தவுடன் காசோலையை கணக்கு திறக்கும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்புவார்கள். அதற்கு முன்னர் 90டொலர் வந்தவுடன் உங்களுடைய முகவரிக்கு ஒரு போஸ்ட் கார்ட் நீங்கள் தான் உரிமையாளரா? என இனம்கண்டு கொள்ள அனுப்புவார்கள், அதை நீங்கள் திரும்ப கூகுள் நிறுவனத்தின் தலைமைக்காரியாலயத்திற்கு அனுப்ப வேண்டும். இலவச தளமானாலும், வலைப்பூவாக இருந்தாலும் வேலைசெய்யும்.
அட்சென்ஸ் மூலம் தமிழ் வலைப்பதிவுகளில் எதுவும் செய்ய முடியாது. ஆங்கில வலைப்பதிவுகளில் ஹிட் வீதம் கூட கூட அட்சென்ஸ் வருவாயும் பலமடங்காக கூடிக்கொண்டு போகும். அட்சென்ஸ்சை விட நல்ல தளம் ஏதும் இருப்பதாகத் இதுவரை தெரியவில்லை.
கூகுள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை.
நான் சுமார் 7,8 தடவை வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி மற்றும் வலைப்பூக்களை உருவாக்கி செய்து அட்சென்ஸ்க்கு விண்ணப்பித்து பார்த்தேன் முயற்சி பலனளிக்கவில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் கூகுள் நிறுவனத்தினர் மறுத்து விட்டனர்.
சற்றும் மனந்தளராமல் அந்த முயற்சியை அதாவது கூகுளின் அட்சென்ஸ்ஸை கைவிட்டு Adbrite, BidAdviser நிறுவனங்களை நாடினேன். இவர்களும் கூகுள் அட்சென்ஸ் சொன்ன பதிலையே சொன்னார்கள். எனினும் கணக்கை திறந்து விளம்பரங்களை எமது வலைப்பதிவில் இட அனுமதியளிக்கின்றனர். பணம் தான் தரமாட்டார்கள் இது என்ன கொடுமை சரணவணா.
தமிழ் தளங்களில் அட்சென்ஸ் பாவிப்பதை காட்டிலும் ஆங்கில தளங்களில் பாவிப்பதால் டொலர்களை கண்களில் காட்டுகிறார்கள் கூகுள்.

இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன.
இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு.
நான் கூகிள் அட்சென்சை தமிழ், ஆங்கில வலைப்பதிவுகளில் பாவித்து வருகின்றேன். ஆனால் தமிழ் வலைப்பதிவில் கூகிள் அட்சென்ஸ் மூலமான வருவாய் மிக மட்டம். ஆங்கில வலைப்பதிவில் சுமாராக வந்துகொண்டிருக்கின்றது.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு வலைப்பதிவுகளும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 பக்கப் பார்வைகளைப் பெறுகின்றன. ஆனால் ஒவொருநாளும் ஆங்கில வலைப்பதிவில் கிடைக்கும் பணத்தின் பெறுமதி தமிழ் வலைப்பதிவில் கிடைக்கும் பணப்பெறுமதியின் 4 மடங்காகும்.
இதற்கான காரணம் என்ன?
கூகிள் அட்சென்ஸ் பக்கத்தின் உள்ளடக்கத்தைப் பார்த்து அதற்கு தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டும். தமிழ் பக்கங்களைப் பார்த்தால் அதற்கு எதுவும் புரிவதில்லை. தமிழ் மொழி என்று மட்டுமே புரிகின்றது. அதனால் தமிழில் ஏதாவது விளம்பரம் இருந்தால் காட்டும் இல்லாவிட்டால் தொடர்பில்லாமல், சூறாவளி பணம் தாருங்கள் என்று கேட்கும். பக்கத்தைப் பார்ப்பவரும் இதென்ன கோமாளித்தனம் என்று நினைத்து அதை அப்படியே விட்டுவிடுவார்.
ஆங்கில வலைப்பதிவில் அல்லது பக்கங்களில் தொடர்பான விளம்பரங்களைக் காட்டுவதால் தளத்திற்கு வரும் பயனாளர்கள் அந்த விளம்பரங்களைக் சொடுக்கி அங்கே செல்வார்கள். உங்களுங்கும் பையில் பணம் நிரம்பும். உதாரணமாக தீபெத் பற்றி ஒரு இடுகையை நீங்கள் இட்டால் அங்கே தீபெத்திற்கான பயண வழிகாட்டி போன்ற விளம்பரங்கள் கிடைக்கும். தீபெத் பற்றி உங்கள் இடுகையை வாசிப்பவர் மேலதிக விபரம் நோக்கி அந்த விளம்பரங்களைச் சொடுக்குவார்.
கூகிள் அட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் ஆங்கிலம் அல்லது கணனியியலில் போன்ற மொழிகளில் பயன்படுத்துங்கள். செல்வச் சீமானாகுங்கள். தமிழுக்கு இன்னும் காலம் இருக்கின்றது போலும்.

அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

Comments

Anonymous said…
This comment has been removed by a blog administrator.