Wi-Max தொழிற்படும் முறை

வை-மெக்ஸ் தொழிற்படும் விதத்தை மிகவும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், ஏறக்குறைய Wi-Fi தொழிற்படும் முறைமையைப் போன்றது. இரண்டிக்குமிடையிலான வித்தியாசத்தை நோக்குவோமானால் Wi-Max அதிக வேகத்துடனும் அதிக தூரத்திலும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வசதியினை வழங்குகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான உபயோகிப்பாளர்களை கொண்டிருக்கும் இணைப்பாக வை-மேக்ஸ் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் கேபிள் வசதி, தொலைபேசி இணைப்புகளும் இல்லாத இடங்களில் இந்த வை-மெக்ஸ் பெரியளவில் உதவுகிறது.

இந்த வை-மேக்ஸ் உபகரணங்களாவன:

1. Wi-Max டவர்: நாம் சாதாரணமாக பயன்படுத்தும் செல்போன் இணைப்பை ஏற்படுத்த உதவும் கோபுர முறைமைகளை போன்றதாகும். இந்த டவர்களை கட்டிடத்தின் மாடியிலோ அல்லது பொதுவான ஒரு இடத்திலோ அமைத்துக் கொள்ளலாம்.

2. Wi-Max ரிசீவர்: ரிசீவர் முறையில் தகவல்களை பெற்றுக் கொள்ளும் கருவியாக அன்ரனா (Antenna) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை அன்ரனாவானது சாதாரண ரீவி அன்ரனா போல் அல்லாது ஒரு சிறிய பெடடியாக அதனுள் PCMCIA என்ற காட் வசதி கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் ல்ப்ரொப் அல்லது கணனிக்கு வரும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இதுபோன்று அமைக்கப்பட்டுள்ள Wi-Max டவர்கள் மூலம் இன்டர்நெட் இணைப்பை அகன்ற அலைவரிசை முறையில் வயர்லெஸ் ஆக பெற்றுக் கொள்ளலாம். இந்த வை-மேக்ஸ் டவர்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைக்கவும் பயன்படுகிறது. ஒரு Wi-Max டவர் ஆனது 3000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு தகவல்களை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் உதவுகின்றது.

இந்த வை-மேக்ஸ்' வழங்கும் இரண்டு விதமான வயர்லெஸ் சேவைகள்.

1. நேரடி பாதையில்லாத ஒளிபரப்பு : ( NON LINE & RIGHT)
இந்த முறையானது ஒரு Wi-Fi போன்ற சேவையினை வழங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒரு சிறிய அன்டனா கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு, அதனை Wi-Max டவர் உடன் தொடர்பு கொள்ளச் செய்து தகவல்கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மூலம் Wi-Max குறைந்த அலைவரிசைகளைப் பயன்படுத்தி (2GHZ முதல் 11GHZ வரை) தகவல் அனுப்பும் வேகத்தை அமைத்துக்கொள்கின்றது. இந்த குறைந்த அலைவரிசை தகவல் அனுப்புதல் மூலம் இயற்கையான தடங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடிகின்றது.

2. நேரடிப் பாதையிலான ஒளிபரப்பு: (LINE OF RIGHT)
இந்த முறையின் மூலம் ஒரு நிரந்தரமான டிஷ் அன்ரனா ஒன்றை வீட்டின் அல்லது அலுவலத்தில் உள்ள கூரையின் மேல் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அன்டனா Wi-Max டவரை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் தகவல்களை வீட்டின் மாடியில் உள்ள அன்ரனா எளிதான Wi-Max டவரில் இருந்து பெற முடிகின்றது. இது போன்ற Wi-Max இணைப்பானது மிகவும் வலிமையானது மற்றும் நிரந்தரமானது.

இந்த முறையில் தொடர்பு கொள்வதால் அதிக அளவிலான தகவல்களையும் பெரிய அளவிலான தடங்கல்கள் இன்றி எளிதாக அனுப்ப முடியும். மேலும் இதன் மூலம் அதிக வேகமாக அதாவது 66GHZ என்ற அலைவரிசை வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wi-Max தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

தற்போதைய நிலைவரப்படி இன்ரெல் (Intel) நிறுவனம் தயாரித்து வரும் Centrino என்று அழைக்கப்படும் புரசசர்களைக் கொண்டு தயாரிக்கும் லப்ரொப் கம்பியூட்டர்களில் இது போன்ற Wi-Max என்ற தொழில் நுட்பத்தை ஏற்கனவே அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இன்ரெல் வழங்கும் அனைத்து லப்ரொப் கம்பியூட்டர்களிலும் இந்த வை-மேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள லப்ரொப் கம்பியூட்டர்களை உபயோகிக்கத் தொடங்கினால் Wi-Max base Station எனப்படும் அடிப்படைக்கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது சுலபம்.

மேலும் இந்த இன்டல் (Intel) நிறுவனமானது கிளியர்வயர் (ClearWire) என்ற நிறுவனத்துடன் இணைந்து Wi-Max என்ற தொழில் நுட்பத்தை புதிய முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த கிளியர்வயர் நிறுவனமானது Wi-Max base Station-ல் இருந்து ஒரு சிறிய வயர்லஸ் மோடம் என்ற பெட்டிக்கு தகவல்களை அனுப்பும் வண்ணம் வடிவமைத்து வருகின்றது. இவ்வாறு செய்வதால்இ நமது கம்ப்ïட்டரில் இந்த சிறிய மோடம் மட்டும் அமைக்கப்பட்டு இருந்தால் நமது கம்ப்ïட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு Wi-Max தொழில் நுட்பத்தின் மூலம் தகவல்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று ஒரு கம்பியூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போது encryption எனப்படும் முறையைப் பயன்படுத்தி அனுப்பப்படுகின்றது. ஆகையினால் அனுமதியில்லாமல் எந்த ஒரு நபரும் நமது தகவல்களை படிக்கவோ, பார்க்கவோ முடியாது. இந்த encryption என்ற முறையின் மூலம் தகவல்களை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றி அனுப்புகின்றது. மேலும் Wi-Max தகவல் அனுப்பும் வேலையினை மிகவேகமாகவும் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக Wi-Fi என்ற முறை மூலம் ஒரு நொடிக்கு 54 மெகாபிட்ஸ் என்ற வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும். ஆனால் Wi-Max என்ற முறை மூலம் ஒரு நொடிக்கு 70 மெகாபிட்ஸ் என்ற வேகத்தில் தகவல்களை அனுப்ப முடியும்.
ஆனால் Wi-Max உடைய சிறப்பு அதன் வேகம் (Speed) அல்ல. மாறாக அது செயல்படும் தூரம் (distance) என்பதே சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

Wi-Max செயல்படும் விதம்

நமது கம்பியூட்டரில் Wi-Max பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் இணைப்பு அமைப்பது என்பது மிகவும் சுலபம். உதாரணமாக இன்டர்நெட் இணைப்பு வழங்குபவர்கள் (ISP) Wi-Max base Station என்ற அமைப்பை நிறுவுவர். இந்த base Station நமது வீட்டிலிருந்து அல்லது அலுவலகத்திலிருந்து 10 மைல் தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது நமது கம்பியூட்டரில் Wi-Max இருந்தாலோஇ அல்லது நமது பழைய கம்ப்ïட்டரில் Wi-Max நிறுவிக் கொள்ள வேண்டும்.
இப்போது நமது கம்பியூட்டர் Wi-Max base Station இடம் இருந்து encryption Code எனப்படும் தகவலைக் கொடுக்கும். இந்த encryption Code எனப்படும் Key-யை வைத்துதான் Wi-Max base Station நமது கம்பியூட்டருக்கு தகவல்களைக் கொடுக்கின்றது. இது போன்ற முறையில் இன்டர் நெட் உபயோகிப்பதற்கு நாம் மாத வாடகை கொடுத்தால் போதுமானது, இந்த மாத சந்தாவானது சாதாரண Dialup இன்டர் நெட் இணைப்புக்கு கொடுக்கும் தொகையை விட குறைவானதாகும்.

சாதாரணமாக நமது அலுவலகத்தில் உள்ள கம்பியூட்டர்களில் இன்டர்நெட் இணைப்பு அமைப்பதற்கு Wi-Fi முறையிலே ஏற்பாடு செய்து கொள்வது சிறந்தது. ஏனென்றால், நமது அலு வலகங்களில் உள்ள கம்ப்ïட்டர்கள் LAN என்ற Local Areas NetWork முறையில் உள்ளது.

அதற்கு Wi-Fi இணைப்பே போதுமானது. ஆனால், அதைவிட பெரிய அளவில் அல்லது நகரங்களுக்குள் உள்ள கம்பியூட்டர்களில் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமானால் அதற்கு Wi-Max முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த Wi-Fi இணைக்கப்பட்டுள்ள LAN கம்பியூட்டர்களும் Wi-Max மூலம் இணைக்கப்பட்டுள்ள MAn அல்லது Wan கம்பியூட்டர்களும் தொடர்பு கொள்ள ரூட்டர்கள் (Router) போதுமானது.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மூலம் லோக்கல் தொலைபேசி STD தொலைபேசி மற்றும் வெளிநாட்டு தொடர்பு கொள்ளும் வசதிகளை Voice over IP (VIOP) எனப்படும் முறை மூலம் உருவாக்கிக் கொள்ளலாம். நமது லப்ரொப் கம்பியூட்டர் மூலம் வயர்லஸ் முறையில் எங்கு வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்பது சிறப்பான வசதியல்லவா!

Comments