28 November 2008

இலங்கையில் டயலொக்கும் அதன் சலுகைகளும்….

இலங்கையில் டயலொக் ரெலிகொம் ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் சொற்ப அளவில் கட்டணக்குறைப்புக்களையும் அடிச்சுபிடிச்சு கடந்த சில மாதங்களாக வழங்கி வருகின்றமை பலர் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று நோக்கினால் இந்தியாவின் மிகப்பெரிய கையடக்க தொலைபேசியான எயர்டெல்லானது இலங்கைக்குள் காலாடி எடுத்துவைப்பதையே பிரதான காரணமாக குறிப்பிடலாம். இதுவரை வழங்கப்படாத பல சலுகைகள் கடந்த மாதத்திலிருந்து டயலொக் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. எது எப்படியோ எயர்டெல்லை பொறுத்த வரையில் டயலொக்குடன் ஒப்பிடும் போது டயலொக்கை உடைக்கமுடியாது. முக்கிய காரணம் என்னவென்றால் எயர்டெல்லின் முதலீடு மற்றும் கோபுரங்களின் எண்ணிக்கை மிகசொற்ப அளவே. எனினும் எயர்டெல்லின் வெளிச் செல்லும் கட்டணங்கள் மிகமிகக்குறைவாக இருப்பதாக எனது நண்பர் ஒருவர் தனது வலைப்பூவில் எழுதியுள்ளார். அதாவது வெளிச்செல்லும் அழைப்புக் கட்டணங்கள் 50 சதத்திற்குள்ளே இருக்கும் என சில இணையத்தளங்கள் எதிர்வு கூறுகின்றன. எயர்டெல்லானது இந்த மாதம் (டிசம்பர்) 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படியானாலும் இந்த வருட இறுதிக்குள் இந்திய கொம்பனியான ரிலையன்ஸின் எயர்டெல் சிம் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழும் என்பதில் சந்தேகமில்லை.

டயலொக் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய சலுகைகள்
* டயலொக் தொலைபேசிகளுக்கிடையிலான கட்டணக்குறைப்பு
இதன்படி கிற் இணைப்பிலிருந்து வெளிச்செல்லும் கட்டணங்கள்.
டயலொக் to டயலொக் 3 ரூபா ஆகவும் டயலொக் அல்லாத இலக்கங்களுக்கு 5 ரூபா ஆகவும் தற்போதைய கட்டணம் உள்ளது.

பிற்கொடுப்பனவு இணைப்பிலிருந்து வெளிச் செல்லும் கட்டணங்களாக
டயலொக் to டயலொக் 1000 நிமிடங்கள் இலவசத்தின் பின்னர் 2 ரூபா ஆகவும்
டயலொக் அல்லாத தொலைபேசிகளுக்கான கட்டணமாக 3 ரூபா ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

My10 இலக்கங்களுக்கான எஸ்.எம்.எஸ் மற்றும் வெளிச் செல்லும் கட்டணமாக வெறும் 50 சதம் மட்டுமே.

* பிற்கொடுப்பனவு இணைப்பில் பாரிய மாற்றம் அதாவது பிளாஸ்டர் பக்கேஸ்
டயலொக் பிற்கொடுப்பனவு இணைப்பிலிருந்து 1000 நிமிடங்கள் அதாவது 16 மணித்தியாலங்கள் டயலொக் to டயலொக் வெளிச் செல்லும் அழைப்புக்கள் முற்றிலும் இலவசம் இதற்கான மாதாந்த கட்டணம் நாக்குமுக்கா வரிகள் உட்பட ரூபா 400 வரும்.

* கிற் இணைப்பிலிருந்து (முற்கொடுப்பனவு) பிற்கொடுப்பனவாகவும் (பக்கேஜ்) ஆகவும்
பக்கேஜை கிற்றாகவும் மாற்றிக் கொள்ளும் வசதியை கடந்த மாத இறுதியில் டயலொக் அறிமுகப்படுத்தியது.

* Per second bill - செக்கன் அடிப்படையிலான கட்டண அறவீடுகள். இந்த வசதியை முதன் முதலாக இலங்கையில் ரீகோ தான் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

* உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை எஸ்.எம்.எஸ் வழியாக அறிந்து கொள்ளலாம்.

உங்களுடைய டயலொக் தொலைபேசியிலிருந்து ஈமெயில்களை அனுப்பிக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது. அதாவது உங்களது தொலைபேசி இலக்கத்தின் முன்னுள்ள 77 என்ற இலக்கத்தை தவிர்த்து மீதமுள்ள 7 இலக்கத்துடன் @dialog.lk என்பதை சேர்த்து ஈமெயில் அனுப்பினால் உங்களுடைய போனுக்கு எஸ்எம்.எஸ் வரும். உதாரணமாக உங்களது தொலைபேசி இலக்கம் 0777123456 என்றால் 7123456@dialog.lk என்பதை மின்னஞ்சல் முகவரியாக பயன்படுத்தலாம்.

ஜிமெயிலில் கணக்கு இருந்தால் உங்களுக்கு வரும் ஈமெயில்களை உங்களுடைய போனுக்கே அறிவிப்பு செய்தியாக அதாவது யார் அனுப்பியது என்ன சப்ஜெக் போட்டு ஈமெயில் வந்துள்ளது என்பதை தெரிவிக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில் தளத்திற்கு சென்று லொகின் செய்து செட்டிங் பகுதிக்குச் செல்லவும். பின்னர் போவேர்ட் என்ற ரப்பை கிளிக் செய்து forword to என்பதில் உங்களுடைய டயலொக் இலக்கத்துடன் அதாவது 7இலக்க டயலொக் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும். உதாரணமாக 7123456@dialog.lk
முயற்சி செய்து பாருங்களேன்.....

27 November 2008

நாளாந்தம் சட்ட ரீதியான மென்பொருள் இலவசம்

மதிப்பு மிக்க மென்பொருட்கள் ஒவ்வொரு நாளும் இலவசம்
சட்டரீதியான அனுமதியுள்ள மென்பொருள்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது, வித்தியாசமான மென்பொருள்கள் இலவசமாக giveawayoftheday.com என்ற இணையத்தளத்தில் வழங்கப்படுகிறது.ஒரு நாளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளை டவுண்லோட் செய்துகொள்ளலாம். மாறாக அடுத்தநாள் முயற்சித்தால் இலவசம் ஆப்பாக செய்யப்பட்டிருக்கும் அதாவது பணம் செலுத்த வேண்டியிருக்கும்.ரயல் பதிப்புகளை வெளியிடாமல் ஒரிஜினல் பதிப்பையே இலவசமாகவும், சட்டரீதியாகவும் வெளியிடுகிறார்கள். அந்த மென்பொருளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல், முழுமையான பயன்பாடாக இருப்பதால் நமக்கு நன்மையே. வைரஸ் தொந்தரவுகள் அற்றது.தள முகவரி :http://www.giveawayoftheday.com/

இரவில் தூக்கம் இன்றி தவிக்கின்றீர்களா?

தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பவர்கள் தூக்கம் வர மாட்டேங்குதே, எப்போது வரும்? என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்களா? அவ்வாறு சிந்திக்கும்போது மூளைக்கு வேலை ஆரம்பித்து விடுகிறது. பிறகு எப்படி தூக்கம் வரும்? மூளை அமைதியாக இருந்தால் தானே சட்டுபுட்டென்று தூக்கம் வரும். தூக்கம் வராவிட்டாலும் எதையும் சிந்திக்காமல் அமைதி காத்திருங்கள். தூக்கம் தானாக வரும்.

ஒருவரிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும். அது தான் விலை மதிப்பற்ற உண்மையான செல்வம். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம்.
இரவில் தூக்கம் இன்றி தவிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. சரியான நேரத்தில் படுக்கைக்குப் போகாதது தான் இதற்கு முழு முதற்காரணம்.

எல்லோரது வீடுகளிலும் டி.வி. இருக்கிறது. அதைவிட கம்பியூட்டர்களையும் பல வீடுகளில் காண முடிகிறது. தூக்கத்தை கெடுக்கும் நவீன சாதனங்களில் இவற்றின் பங்களிப்பும் பெருமளவு உண்டு என்பதை மறுக்கமுடியாது.
இரவு நேரம் தொடங்கிவிட்டால் எந்த டி.வி சனலை திருப்பினாலும் மெகா சீரியல்கள் தான். இந்த சீரியல்களை இரவிரவாக விழித்திருந்து பார்க்கும் தாய்க்குலங்கள் நிறையபேர் உள்ளன. பார்க்காவிட்டால் பக்கத்து வீட்டு அன்ரியிடம் மீதி கதையை கேட்கும் தாய்க்குலங்களுடன் மாணவச் செல்வங்கள் ஒருபுறம்.

இதேபோல் டி.வி மெகா சீரியல் பிடிக்கவில்லையென்றால் கம்பியூட்டரில் கேம்சிலும் இன்ரநெற் சட்டிங்கிலும் மூழ்கிக் கிடக்கும் வருங்கால தூண்களும் ஏராளம். பசியைக் கூட மறந்து அதில் ஒன்றிப்போய் விடுகின்றனர். இந்த வர்க்கத்திற்குள் நானும் ஒருத்தன்.
அளவான உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவை சுகமான ஆழ்ந்த இதமான தூக்கத்தை தருகின்றன. காலை, மாலை வேளைகளில் உங்களால் முடிந்த உடற்பயிற்சியை சிறிதுநேரம் செய்யுங்கள். இரவில் படுத்தவுடன் தூக்கம் அப்படியே உங்களை தாலாட்டும்.

தூக்கத்தை கண்களில் தவழச்செய்வதில் பாலுக்கு முக்கிய இடம் உண்டு. படுக்கைக்கு செல்லும் சிறிது நேரத்திற்கு முன்பு பால் அருந்துங்கள். இரவில் நன்றாக தூக்கம் வரும். வாழைப்பழம், பாண் ஆகியவற்றுக்கும் தூக்கத்தை தூண்டக் கூடிய பவர் உண்டு. அதனால் இவற்றை இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். பகல் நேரங்களில் இந்த உணவை தவிர்ப்பது தான் நல்லது. இல்லையென்றால் பகலிலும் தூங்கி விடுவீர்கள். படுக்கச் செல்லும் போது இனிமையான இடைக்கால பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்கலாம். இது சிலருக்கு இடைஞ்சலாகவும், பலருக்கு இனிய தூக்கம் வரவும் வழி அமைக்கும்.

குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்பதற்காக சிலர் அலாரம் வைத்து தூங்குவார்கள். நிறையபேர் அலாரத்தின் ஓசையை அதிக அளவில் வைத்துக்கொண்டு எழுகிறார்கள். இப்படி செய்வது தவறு என்கிறது ஒரு ஆய்வு. அதிகப்படியான அலாரத்தின் ஓசை வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
இனியும்.. தூக்கம் வரவில்லை சொல்ல மாட்டீர்கள்கள்தானே...? அனுபவி ராஜா அனுபவி.

(மித்திரனில் சுட்டு எடிட் பண்ணிய ஆக்கம்)

பாஸ்வேர்ட் அமைக்க சில குறுக்கு வழிகள்

கணினி பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்ட் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாஸ்வேர்ட் பயன்படுத்தாமல் நாம் கம்பியூட்டரை முழுமையாக இயக்க முடியாது. உண்மையில் பாஸ்வேர்ட் என அழைக்கப்படும் பின் (PIN) என்பது ஒரு பூட்டைத் திறக்கும் சாவி போன்று செயல்படுவதாகும். கணினியில் உள்ள புரொக்கிராம்களை விண்டோஸ் போன்றவற்றை தனித்தனியாக பாஸ்வேர்ட் என்ற போர்வையால் பூட்டிக்கொள்ளலாம்.

பாஸ்வோட் எனப்படும் பின் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளாவன:

1. கணினியை இயக்க ஆரம்பிக்கும் போது பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது.
2. கம்பியூட்டரை நெட்வேர்க்கில் இணைக்கும் போது
3. சில மென்பொருட்களை ஆரம்பிக்கும் போதும் உருவாக்கும் போதும் தேவைப்படலாம்.
4. இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த (dialup/ wireless)
5. குறிப்பிட்ட சில இணையத்தளங்களை மேயும் போது பதிவு செய்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டுமே தகவல்களை பார்வையிடலாம்.
6. இணையத்தளங்களில் ஈ.மெயில் கணக்கு ஆரம்பிக்கும் போது சரி பயன்படுத்தும் போதும் சரி பாஸ்வேர்ட் மிகவும் அவசியம்.
7. மின்வணிகத்தில் ஈடுபடும் போதும், கிரடிட் கார்ட்டை செயற்படுத்தும் போது... (E-commerce)
8. முக்கியமான இரகசிய தகவல்களை திருட்டு போகாமல் பாதுகாத்து வைக்க..
9. சில கருவிகள் (Routers, network printers...) மற்றும் பைல்களை கையாளும் போது என பல தடவை நாம் பாஸ்வேர்ட் எனும் கருவியை மட்டுமல்லாது அதன் யூசர் நேம்மையும் பயன்படுத்த வேண்டும்.

சமீபத்தில் நடந்த ஆய்வின் போது தெரியவருவதாவது:
கம்பியூட்டர் பயன்படுத்துபவர் குறைந்தபட்சம் 10 பாஸ்வேர்ட்டுக்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 30 சதவீதமான பயன்பாட்டாளர்கள் 6 இலிருந்து 9 வரையான பாஸ்வேர்ட்டுகளை மட்டுமே நினைவில் வைத்துள்ளனர்களாம். மேலும் இந்த ஆய்வின் முடிவில் 88 சதவீத்தினர்கள் பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்துவதில் தடுமாற்றமும் வெறுப்பும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாஸ்வேர்ட் உருவாக்க சில எளிய வழிமுறைகள்

1. பாஸ்வேர்ட்களை எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடியதாகவும், பிறர் இலகுவில் ஊகித்து பாஸ்வேர்ட்டுகளை கண்டறிய முடியாதவாறும் இருக்கவேண்டும்.
2. பாஸ்வேர்டுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைக்கவேண்டும். அத்துடன் பாஸ்வேர்ட்டில் குறைந்தபட்சம் 6 எழுத்துக்களாவது இருக்கவேண்டும்.
3. பாஸ்வேர்ட்டில் பெரிய எழுத்துக்களையும் (Capital letters) சிறிய எழுத்துக்களையும் (small letters) இலக்கங்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களை (%, !, #, $, @, -) பயன்படுத்தலாம்.எல்லா வகையான எழுத்துக்களையும் கலந்து பாஸ்வேர்ட்டை பயன்படுத்துங்கள். அது மிகப்பெரிய பாதுகாப்பு வேலியாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.
4. பாஸ்வேர்ட்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொண்டேயிருங்கள். உதாரணமாக மாதமொரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் மாற்றினால் உங்களது தகவல்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
5. தனிநபரின் பெயரோ அல்லது ஊர் பெயரையோ பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக பிறந்த திகதியோ மொபைல் நம்பரையோ அல்லது காதலன் காதலியுடைய அல்லது அப்பா அம்மா உறவுப் பெயர்களையெல்லாம் கண்டிப்பாக பயன்படுத்தவே கூடாது.
முயற்சி செய்து தான் பாருங்களேன்.

மகிழ்ச்சியாக இருக்க சில வழிமுறைகள்...

மகிழ்ச்சியாக இருக்க (Always Smile)

* உங்களுக்கு பிடித்த பாடகரின் இனிமையான பாடல்களை கேட்டு மகிழலாம்.
* உங்களை நீங்களே நேசியுங்கள் இதனால் மன அழுத்தம் குறைந்து உங்கள் மீது நம்பிக்கை உருவாகும்.
* மற்றவர்களையும் மனதார நேசியுங்கள். எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும் போதும் பாராட்டி/வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
* நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுங்கள். விடுமுறை நாட்களில் சினிமா, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லுங்கள். விரும்பினால் குடும்பத்தாருடன் செல்லுகின்றனர்.
*
வாய்விட்டுச் சிரியுங்கள், நோய் விட்டுப்போகும் எனவே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்க.


குடும்ப மகிழ்ச்சிக்கு சில வழிமுறைகள்...

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் எண்ணமும் "எங்கள் குடும்பம் அமைதியான ஒற்றுமை மிக்கது" என்று அனைவரும் உணர்ந்திருந்தாலே அதுவே ஒரு பெரிய மகிழ்ச்சி.

* குடும்பத்தில் ஒரு வேளையாவது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து உணவு உண்ணுங்கள்.
* விடுமுறை தினங்களில் வெளியூர் பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம் விட்டுப்பேசி மகிழ்ந்து சிரித்துக் கொண்டாடி வருங்கள். அது மட்டுமல்ல வாரம் ஒரு முறையாவது வெளியில் அதாவது பார்க், பீச் என்று சென்று ஜாலியாக இருங்கள்.
* ஒருவரின் வெற்றியை எல்லோரும் கொண்டாட வேண்டும். வாழ்த்துக்களைப் பரிமாற வேண்டும்.
* ஒருவருக்கு சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனித்தனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க வேண்டும்.
* எவர் என்னைத் திட்டினாலும், கோபித்தாலும், என்னை அவமதித்தாலும், எனக்கு உதவி செய்ய மறுத்தாலும், நான் அன்பு செய்வேன். உங்கள் மேல் நான் கொண்டுள்ள அன்பே பேரானந்தம் என்று கூற வேண்டும்.


(தொடரும்)

10 November 2008

இலவசமான co.cc என்ற டொமைன் முகவரி பெற்றுக் கொள்ள...


தற்பொழுது பாவனையில் .com, .net, .org போன்ற பல பிரபல டொமைன்கள் உள்ளதை நீங்கள் அறிந்ததே ஆனால் இப்படியான டொமைன்களை அதாவது வெப் முகவரிகளை பெற்றுக் கொள்வதற்கு வருடாந்தம் குறிப்பிட்ட தொகைப் பணம் செலுத்தவேண்டும். ஆனால் தற்பொழுது .co.cc என்ற டொமைன் முகவரி மிகப்பிரபலமாகி வருகின்றது. ஏனென்று ஒரு கேள்வியை கேட்டால் இலவசமாக .co.cc டொமைன் நேம் வழங்குகிறது என்பதே.

புளொக் (blog) வைத்திருப்பவர்களுக்கு தமது புளொக் முகவரி நீண்டிருப்பது பிடிக்கவில்லையென்றால் .co.cc என்ற முகவரிக்கு மாறிக் கொள்ளுங்கள். உதாரணமாக எனது புளொக் முகவரி
www.kt-sarangan.blogspot.com என்ற இந்த நீண்ட முகவரியை தற்பொழுது www.ktsarangan.co.cc என்ற முகவரிக்கு forward செய்துவிட்டேன். அதேவேளை எனது புளொக் முகவரியும் உபயோகத்தில் இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதி்ல்லை. வழக்கம் போல உங்களின் புளொக்கை அப்டேட் செய்யுங்கள்.

www.ktsarangan.co.cc என்பதை அட்ரஸ் பாரில் ரைப் செய்தால் தானாகவே எனது புளொக் முகவரியை இணைக்கும்.
.co.cc முகவரி பெற்றுக் கொள்வது முற்றிலும் இலவசமானதும் எந்தவிதமான விளம்பர தொந்தரவுகள் அற்ற ஒரு டொமைன் முகவரி என்றே கூறவேண்டும். அது மட்டுமல்ல இந்த வெப்சைட் மூலம் பணமும் சம்பாதிக்கலாம்.


எப்படி இலவச முகவரியை (example.co.cc) பெற்றுக் கொள்வது என்பது பற்றியும் பின் உங்கள் புளொக் முகவரியை உங்களின் பெயர்.co.cc என்பதற்கு மாற்றுவது போன்ற விபரங்கள் பற்றியும் சிறு விளக்கம்......

முதலில் .co.cc இணையத்தள முகவரிக்குச் சென்று உங்களுக்கு விருப்பமான தளமுகவரி இருக்கிறதா என்பதை check பண்ணி பாருங்கள். இருந்தால் Continue to Registration என்பதை கொடுத்து பெயர், இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து புதிய அக்கவுண்ட ஒன்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் sign in here என்பதை கிளிக் செய்தால் எக்கவுண்ட் (Manage Domain) பக்கத்திற்கு செல்லும் அதில் கீழே URL Forward என்று ஒரு மெனு இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் வழமையான தளமுகவரி அதாவது நீண்ட புளொக் முகவரியை Redirect to என்பதில் வழங்கி setup என்பதை சொடுக்கவும். இனிஎன்ன என்று கேட்கிறீர்களா அவ்வளவுதான் விஷயம். இனி உங்களின் சிறிய .co.cc முகவரியை அட்ரஸ் பாரில் ரைப் பண்ணி பாருங்கள். வலைப்பக்கம் வருகிறதா என்று வராவிட்டால் எனக்கொரு மெயில் பண்ணுங்க சந்தேகத்தை தீர்த்து வைக்கிறன். இலவசமாக பெற்ற டொமைன் நேமை (example.co.cc) உங்கள் நண்பர்களுக்கு தெரிவியுங்கள். மிகஇலகுவானதும் விளம்பர தொந்தரவுகள் எதுவுமற்ற தளம். ஒரு தடவை முயற்சி செய்து தான் பாருங்களேன். வாழ்த்துகள்....

முத்தமிடுங்கள்......

கிஸ் பண்ணுங்க-பண்ணுங்க, பண்ணிகிட்டே இருங்க ஆயுள் அதிகரிக்கும்!

அண்மையில் பத்திரிகையில் படித்த விடயத்தை சுருக்கமாக தருகின்றேன். அதாவது தம்பதிகள் முத்தமிடுவது அவர்களின் உணர்ச்சிகளில் மட்டும் நின்றுவிடப்போவதில்லை. ஆயுளும் அதிகரிக்கிறதாம். இது பற்றி பிரித்தானியாவில் ஆய்வொன்றை நடத்தியிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் ஆய்வா? என்று இலங்கையில் இருக்கிறவர்கள் கேட்கிற கூட்டமும் இருக்கதான் செய்கிறது. அதில் தெரிவித்ததாவது ஒரு பெண் திருமணம் செய்வதற்கு முன்னர் சராசரியாக 60 முதல் 70 வரையான ஆண்களை முத்தமிடுகிறாளாம். அதாவது வைபவங்களின் போது மகிழ்ச்சியை பகிர்வதற்கு மட்டும் தப்பாக இல்லையாம். இது நமது நாட்டிற்கு எவ்வளவு பொருந்தும் என கணக்கிட்டால் ??????? கேள்விக்குறியே விடை.

முத்தமிடுவதால் எமது நரம்புகள் மற்றும் உமிழ்நீர் சுரப்புகள் அதிக வேகத்துடன் தொழிற்படுவதால் இரத்தஓட்டம் சீராக அமைகிறதாம்.
முத்தமிடும் போது ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமலும் உதடும் உதடும் சேர்ந்த மாதிரி கிஸ் பண்ணுங்க. மிக முக்கியம் வெட்கப்படாமல் உங்கள் காதலனை அல்லது காதலியை முத்தமிடுங்கள். வெள்ளைக்கார கிஸ் பண்ணுங்க.
முத்தம் பற்றி நிறைய விடயங்களைப் பற்றி தொகுத்து
தருகின்றேன்.

வெயிட் அன் சீ......

காதலிக்க சில ஆலோசனைகள்

ஐ லவ் யூ சொல்லப் போறீங்களா? இதோ சில ஆலோசனைகள்...
:: எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் :: வெற்றி உங்கள் கையில்......

இந்த வார்த்தை படுத்தும்பாடு தான் என்ன? அதைவிட சொல்லப்படும் பாடு சொல்லிலடங்காதவை. இதோ சில ஆலோசனைகள். பயப்படாமல் செய்து பாருங்கள். செய்யும் போது பார்த்து கவனம். செருப்படிகள் விழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
எனது நண்பர் சொன்ன அனுபவங்களுடன் எனது அனுபவங்களும்....


* சொல்லும் காதல் தான் செல்லும், சொல்லாக் காதல் செல்லாது. காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தால் அதாவது ஒரு தலைக் காதலாக இருந்தால் யாராவது தள்ளிகிட்டு போயிடுவாங்கள். பார்த்து கொள்ளுங்கள்.

* உங்களது காதலை எஸ்.எம்.எஸ் மூலமாக அல்லது ஈ.மெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அல்லது எழுத்து வடிவிலோ உணர்த்தலாம். அதற்கு மேலே நண்பரை தூது அனுப்பலாம்.
எச்சரிக்கை செல்லும் நண்பன்/நண்பி சொதப்பும் படியாக இல்லாமல் தெளிவான முறையில் கூறக்கூடியவராக இருக்கணும். இல்லையென்றால் தூது செல்ல போனவனே தள்ளிட்டு போற நிலை வேண்டாம்.

* விசேட தினங்களில் ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துகள் கூறலாம். அன்புக்குரியவருக்கு பாடலை விரும்பிக் கேட்கிறதாகவும் இருக்கும் காதலை பிரபலபடுத்தியதுமாகவும் இருக்குமல்லவா.

* நீங்கள் தெரிவு செய்யும் உங்கள் துணை வாழ்நாள் முழுவதும் அன்பை பொழிவாரா அல்லது சின்ன வீடு பார்ப்பாரா என்றெல்லாம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஐ லவ்யூ சொல்லப்போகும் நபரிற்கு அது ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் பரிசு பொருட்கள் அல்லது உங்கள் அன்புக்குரியருக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு தேவையான பொருளை பகிர்ந்தளியுங்கள். அது உங்கள் அன்பினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக செயற்படும்.
பொதுவான ஆலோசனை: பெண்களிற்கு பொம்மைகள் அதுவும் நாய்க்குட்டி மற்றும் குழந்தைப் பொம்மை மிகவும் பிடிக்கும். எல்லா காதலிகளுக்கும் இது உகந்ததல்ல. ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு.

* கொடுக்கும் பரிசு பொருட்கள் சிறிய பொருளாக இருந்தால் பிடிபடாமல் வீட்டில் தப்பிக் கொள்ளலாம். பெண் பிள்ளைகள் காதலிக்கும் போது ஏனோ தெரியல காதலனுக்கு பெரிசு பெரிசா தான் வாங்கி கொடுப்பாளவ......
எனக்கு நடந்த ஒரு அனுபவக்கதை எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஒரு பெண்ணை சீரியாசாக லவ் பண்ணிணான் பின் வெளிநாடு செல்வதற்காக கொழும்புக்கு வந்து விட்டான். (கொழும்பிலிருந்து லவ் தொடர்ந்தது) ஆனால் காதலியோ யாழ்ப்பாணத்தில் ஏ.எல். படிக்கிறாள். அண்மையில் நான் எனது பெற்றோர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம் நண்பன் தனது காதலிக்கு நான் யாழ். வந்த விடயம் கூறிவிடவே அவள் பெரிய சொப்பிங் பாக்கிற்குள் பரிசுப் பொருளும் கைபட எழுதிய கடிதமும் கொண்டு வந்து தந்துவிட்டாள். தனது காதலனிடம் சமர்ப்பிக்குமாறு.. நானும் சரி தங்கச்சி என்டு வாங்கி விட்டேன். இனிதான் எனது வீட்டில் சீன் சமாளிக்க வேண்டுமே. என்ன செய்வதென்று தெரியாமல்
வெயிட் அன் சீ.......

(தொடரும்)

எல்லா ஆக்கத்திற்கு கீழே தொடரும் தொடரும் என்று போட்டுக் கொண்டு வருகிறாய் அதை முடிக்காமல் அடுத்தடுத்து வேறு ஏதேதோ எழுதுகிறாய் என்று எனது நண்பன் யாழ்ப்பாணத்திலிருந்து மெயில் பண்ணியிருந்தான். அது உண்மை தான் எங்க அய்யா நேரம் வேலை செய்து போட்டு ரூம்முக்குள்ள போய் படுத்து தூங்கவே நேரம் சரியாகி விடுது பிறகெப்படி புளொக்குகளை எழுதி முடிக்கிறது. ஏதோ முடிந்தவரைக்கும் எழுதுறன் என்று நண்பனுக்கு கூறினேன். வலைப்பூ நண்பர்களே எனது தொடரும் ஆக்கங்களை வெகுவிரைவில முடிக்க முயற்சி செய்யுறன். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.