காதலிக்க சில ஆலோசனைகள்

ஐ லவ் யூ சொல்லப் போறீங்களா? இதோ சில ஆலோசனைகள்...
:: எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் :: வெற்றி உங்கள் கையில்......

இந்த வார்த்தை படுத்தும்பாடு தான் என்ன? அதைவிட சொல்லப்படும் பாடு சொல்லிலடங்காதவை. இதோ சில ஆலோசனைகள். பயப்படாமல் செய்து பாருங்கள். செய்யும் போது பார்த்து கவனம். செருப்படிகள் விழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
எனது நண்பர் சொன்ன அனுபவங்களுடன் எனது அனுபவங்களும்....


* சொல்லும் காதல் தான் செல்லும், சொல்லாக் காதல் செல்லாது. காதலை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தால் அதாவது ஒரு தலைக் காதலாக இருந்தால் யாராவது தள்ளிகிட்டு போயிடுவாங்கள். பார்த்து கொள்ளுங்கள்.

* உங்களது காதலை எஸ்.எம்.எஸ் மூலமாக அல்லது ஈ.மெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அல்லது எழுத்து வடிவிலோ உணர்த்தலாம். அதற்கு மேலே நண்பரை தூது அனுப்பலாம்.
எச்சரிக்கை செல்லும் நண்பன்/நண்பி சொதப்பும் படியாக இல்லாமல் தெளிவான முறையில் கூறக்கூடியவராக இருக்கணும். இல்லையென்றால் தூது செல்ல போனவனே தள்ளிட்டு போற நிலை வேண்டாம்.

* விசேட தினங்களில் ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துகள் கூறலாம். அன்புக்குரியவருக்கு பாடலை விரும்பிக் கேட்கிறதாகவும் இருக்கும் காதலை பிரபலபடுத்தியதுமாகவும் இருக்குமல்லவா.

* நீங்கள் தெரிவு செய்யும் உங்கள் துணை வாழ்நாள் முழுவதும் அன்பை பொழிவாரா அல்லது சின்ன வீடு பார்ப்பாரா என்றெல்லாம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஐ லவ்யூ சொல்லப்போகும் நபரிற்கு அது ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் பரிசு பொருட்கள் அல்லது உங்கள் அன்புக்குரியருக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு தேவையான பொருளை பகிர்ந்தளியுங்கள். அது உங்கள் அன்பினை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக செயற்படும்.
பொதுவான ஆலோசனை: பெண்களிற்கு பொம்மைகள் அதுவும் நாய்க்குட்டி மற்றும் குழந்தைப் பொம்மை மிகவும் பிடிக்கும். எல்லா காதலிகளுக்கும் இது உகந்ததல்ல. ஒரு சிலர் இதற்கு விதிவிலக்கு.

* கொடுக்கும் பரிசு பொருட்கள் சிறிய பொருளாக இருந்தால் பிடிபடாமல் வீட்டில் தப்பிக் கொள்ளலாம். பெண் பிள்ளைகள் காதலிக்கும் போது ஏனோ தெரியல காதலனுக்கு பெரிசு பெரிசா தான் வாங்கி கொடுப்பாளவ......
எனக்கு நடந்த ஒரு அனுபவக்கதை எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஒரு பெண்ணை சீரியாசாக லவ் பண்ணிணான் பின் வெளிநாடு செல்வதற்காக கொழும்புக்கு வந்து விட்டான். (கொழும்பிலிருந்து லவ் தொடர்ந்தது) ஆனால் காதலியோ யாழ்ப்பாணத்தில் ஏ.எல். படிக்கிறாள். அண்மையில் நான் எனது பெற்றோர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம் நண்பன் தனது காதலிக்கு நான் யாழ். வந்த விடயம் கூறிவிடவே அவள் பெரிய சொப்பிங் பாக்கிற்குள் பரிசுப் பொருளும் கைபட எழுதிய கடிதமும் கொண்டு வந்து தந்துவிட்டாள். தனது காதலனிடம் சமர்ப்பிக்குமாறு.. நானும் சரி தங்கச்சி என்டு வாங்கி விட்டேன். இனிதான் எனது வீட்டில் சீன் சமாளிக்க வேண்டுமே. என்ன செய்வதென்று தெரியாமல்
வெயிட் அன் சீ.......

(தொடரும்)

எல்லா ஆக்கத்திற்கு கீழே தொடரும் தொடரும் என்று போட்டுக் கொண்டு வருகிறாய் அதை முடிக்காமல் அடுத்தடுத்து வேறு ஏதேதோ எழுதுகிறாய் என்று எனது நண்பன் யாழ்ப்பாணத்திலிருந்து மெயில் பண்ணியிருந்தான். அது உண்மை தான் எங்க அய்யா நேரம் வேலை செய்து போட்டு ரூம்முக்குள்ள போய் படுத்து தூங்கவே நேரம் சரியாகி விடுது பிறகெப்படி புளொக்குகளை எழுதி முடிக்கிறது. ஏதோ முடிந்தவரைக்கும் எழுதுறன் என்று நண்பனுக்கு கூறினேன். வலைப்பூ நண்பர்களே எனது தொடரும் ஆக்கங்களை வெகுவிரைவில முடிக்க முயற்சி செய்யுறன். நம்பிக்கையை கைவிடாதீர்கள்.

Comments

Anonymous said…
ஆகா..இத்தனை முறையா...