இலங்கையில் டயலொக்கும் அதன் சலுகைகளும்….

இலங்கையில் டயலொக் ரெலிகொம் ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் சொற்ப அளவில் கட்டணக்குறைப்புக்களையும் அடிச்சுபிடிச்சு கடந்த சில மாதங்களாக வழங்கி வருகின்றமை பலர் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று நோக்கினால் இந்தியாவின் மிகப்பெரிய கையடக்க தொலைபேசியான எயர்டெல்லானது இலங்கைக்குள் காலாடி எடுத்துவைப்பதையே பிரதான காரணமாக குறிப்பிடலாம். இதுவரை வழங்கப்படாத பல சலுகைகள் கடந்த மாதத்திலிருந்து டயலொக் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. எது எப்படியோ எயர்டெல்லை பொறுத்த வரையில் டயலொக்குடன் ஒப்பிடும் போது டயலொக்கை உடைக்கமுடியாது. முக்கிய காரணம் என்னவென்றால் எயர்டெல்லின் முதலீடு மற்றும் கோபுரங்களின் எண்ணிக்கை மிகசொற்ப அளவே. எனினும் எயர்டெல்லின் வெளிச் செல்லும் கட்டணங்கள் மிகமிகக்குறைவாக இருப்பதாக எனது நண்பர் ஒருவர் தனது வலைப்பூவில் எழுதியுள்ளார். அதாவது வெளிச்செல்லும் அழைப்புக் கட்டணங்கள் 50 சதத்திற்குள்ளே இருக்கும் என சில இணையத்தளங்கள் எதிர்வு கூறுகின்றன. எயர்டெல்லானது இந்த மாதம் (டிசம்பர்) 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படியானாலும் இந்த வருட இறுதிக்குள் இந்திய கொம்பனியான ரிலையன்ஸின் எயர்டெல் சிம் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழும் என்பதில் சந்தேகமில்லை.

டயலொக் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய சலுகைகள்
* டயலொக் தொலைபேசிகளுக்கிடையிலான கட்டணக்குறைப்பு
இதன்படி கிற் இணைப்பிலிருந்து வெளிச்செல்லும் கட்டணங்கள்.
டயலொக் to டயலொக் 3 ரூபா ஆகவும் டயலொக் அல்லாத இலக்கங்களுக்கு 5 ரூபா ஆகவும் தற்போதைய கட்டணம் உள்ளது.

பிற்கொடுப்பனவு இணைப்பிலிருந்து வெளிச் செல்லும் கட்டணங்களாக
டயலொக் to டயலொக் 1000 நிமிடங்கள் இலவசத்தின் பின்னர் 2 ரூபா ஆகவும்
டயலொக் அல்லாத தொலைபேசிகளுக்கான கட்டணமாக 3 ரூபா ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

My10 இலக்கங்களுக்கான எஸ்.எம்.எஸ் மற்றும் வெளிச் செல்லும் கட்டணமாக வெறும் 50 சதம் மட்டுமே.

* பிற்கொடுப்பனவு இணைப்பில் பாரிய மாற்றம் அதாவது பிளாஸ்டர் பக்கேஸ்
டயலொக் பிற்கொடுப்பனவு இணைப்பிலிருந்து 1000 நிமிடங்கள் அதாவது 16 மணித்தியாலங்கள் டயலொக் to டயலொக் வெளிச் செல்லும் அழைப்புக்கள் முற்றிலும் இலவசம் இதற்கான மாதாந்த கட்டணம் நாக்குமுக்கா வரிகள் உட்பட ரூபா 400 வரும்.

* கிற் இணைப்பிலிருந்து (முற்கொடுப்பனவு) பிற்கொடுப்பனவாகவும் (பக்கேஜ்) ஆகவும்
பக்கேஜை கிற்றாகவும் மாற்றிக் கொள்ளும் வசதியை கடந்த மாத இறுதியில் டயலொக் அறிமுகப்படுத்தியது.

* Per second bill - செக்கன் அடிப்படையிலான கட்டண அறவீடுகள். இந்த வசதியை முதன் முதலாக இலங்கையில் ரீகோ தான் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

* உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை எஸ்.எம்.எஸ் வழியாக அறிந்து கொள்ளலாம்.

உங்களுடைய டயலொக் தொலைபேசியிலிருந்து ஈமெயில்களை அனுப்பிக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது. அதாவது உங்களது தொலைபேசி இலக்கத்தின் முன்னுள்ள 77 என்ற இலக்கத்தை தவிர்த்து மீதமுள்ள 7 இலக்கத்துடன் @dialog.lk என்பதை சேர்த்து ஈமெயில் அனுப்பினால் உங்களுடைய போனுக்கு எஸ்எம்.எஸ் வரும். உதாரணமாக உங்களது தொலைபேசி இலக்கம் 0777123456 என்றால் 7123456@dialog.lk என்பதை மின்னஞ்சல் முகவரியாக பயன்படுத்தலாம்.

ஜிமெயிலில் கணக்கு இருந்தால் உங்களுக்கு வரும் ஈமெயில்களை உங்களுடைய போனுக்கே அறிவிப்பு செய்தியாக அதாவது யார் அனுப்பியது என்ன சப்ஜெக் போட்டு ஈமெயில் வந்துள்ளது என்பதை தெரிவிக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில் தளத்திற்கு சென்று லொகின் செய்து செட்டிங் பகுதிக்குச் செல்லவும். பின்னர் போவேர்ட் என்ற ரப்பை கிளிக் செய்து forword to என்பதில் உங்களுடைய டயலொக் இலக்கத்துடன் அதாவது 7இலக்க டயலொக் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும். உதாரணமாக 7123456@dialog.lk
முயற்சி செய்து பாருங்களேன்.....

Comments