ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் பதவியை துறந்தார்

ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஷ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து சுதந்திரக் கோரிக்கையை முன்வைத்த பிரசாரத்துக்கு அலெக்ஷ் சால்மண்ட் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து ஏற்பாடு இலங்கைக்கு பொருந்தாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

நாட்டுக்கு நாடு பிரச்சினைகள் வேறுபட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய நிலையில் பிரிவினைக்கான கோஷம் ஒன்று தொடர்பில் இலங்கையில் கருத்துக் கோரப்பட்டால் மக்கள் அதனை நிராகரித்து விடுவார்கள் என்றே தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.
ஸ்கொட்லாந்தில் ஒரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அது போன்ற ஒரு ஏற்பாடு இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பொருந்துமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு கூறினார்.


ஸ்கொட்லாந்தில் காலம்காலமாக அங்குள்ள மக்களுக்கு படிப்படியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, அதன் இறுதியிலேயே இப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர்,
ஆனால் இலங்கையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய இலங்கை - இந்திய ஒப்பந்தம் போன்ற வாய்ப்புக்களை இலங்கை தமிழ் தலைவர்கள் தவறவிட்டு விட்டதாகவும் கூறினார்.

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதான வாக்கெடுப்பு 55க்கு 45 வீதத்தினால் தோல்வி
ஸ்கொட்லாந்து வாக்காளர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து பிரிவதா? இல்லையா? என்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று ஸ்கொட்லாந்தில் நடைபெற்றது.

Comments