18 March 2011

முச்சக்கர வண்டியில் விபச்சாரம்! மூன்று சீனப் பெண்கள் உட்பட நால்வர் கைது!!

முச்சக்கர வண்டி மூலம் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த முச்சக்கர வண்டிச் சாரதியான தரகரும் மூன்று சீனப் பெண்களையும் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களான சீனப் பெண்கள் மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் 30 மற்றும் 35 வயதுடையவர்களென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரான இவர்களுக்குச் தரகராகச் செயல்பட்டமுச்சக்கரவண்டி சாரதி முல்லேரியா பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் தனக்கு கிடைக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கேற்ப இந்த சீனப்பெண்களை அழைத்துக்கொண்டு தேவையான இடங்களில் விட்டுச் செல்வதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த விபசார நடவடிக்கை தொடர்பாக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து கல்கிசை கடற்கரை பகுதியில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

1 comments:

மதுரை சரவணன் said...

இரண்டு சக்கர வண்டியிலேயே நடக்குதுங்க...