விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அதிகளவு தண்ணியடிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகள்!

விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் ஐரோப்பியர்களுள் அதிகம் மது அருந்துபவர்கள் பிரிட்டிஷ் பிரஜைகளே.

இது சம்பந்தமான ஒரு கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. உள்ளூரில் இருக்கின்ற போது மது அருந்துவதைவிட வெளிநாடு சென்றால் இவர்கள் அதிகம் மது அருந்துகின்றனர்.

சுமார் 65%மானவர்கள் இப்படித்தான் உள்ளனர். சுற்றுலா ஆலோசனை நிறுவனமொன்று இந்த மதிப்பீட்டை நடத்தியுள்ளது.


வெளி இடங்களுக்குச் சென்றால் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுள் 41% மட்டுமே அதிகம் மது அருந்துகின்றனர்.

இத்தாலியர்களுள் 28%மானவர்களுக்கு மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் மத்தியில் இந்த மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரஜைகள் வெளிநாடு சென்றால் உள்ளூரில் மது அருந்துவதை விட ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மடங்கு மது அருந்துகின்றனர்.

29%மான பிரிட்டிஷ் பிரஜைகள் இவ்வாறு காணப்படுகின்றனர்.ஏனைய ஐரோப்பியர்கள் மத்தியில் இது 10% மட்டுமே.

Comments

Archchu said…
Welcome back to ur Blogging.... But Post some useful Informations....