ஏ-9 வீதியால் செல்லும் மக்களின் தந்திரோபாயம்

ஏ-9 வீதியினூடாக பிரயாணம் செய்வதென்பது முன்னரைப் போல் போல் இலகுவானதாக அமையவில்லை என்றாலும் மிகவும் குறைந்த செலவுடன் இப்பொழுது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும்.

காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறபடுவோமானால் அன்றிரவே கொழும்பு நகரை சென்றடைந்து விடலாம் என்பது சந்தோஷமான விடயம் தான். ஆனால் கொழும்பிலிருந்து காலை புறப்பட்டால் அன்றிரவே யாழ்ப்பாணத்தை சென்றடைந்து விடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

அதில் ஒரு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் நண்பர்களுடன் எனது ஊரிற்கு சென்றிருந்தேன். அப்போது இருந்த நடைமுறைகள் பற்றியே இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.


கொழும்பிலிருக்கும் மக்கள் வவுனியாவினூடாக யாழ்ப்பாணம் செல்ல முடியும் என்று பத்திரிகைகளில் செய்திகளை கண்குளிர காணக்கூடியதாகவே இருந்தது. எனினும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் திரும்பி கொழும்பு வருவதென்றால் கிளியரன்ஸ் என்ற தலைவலியை எடுத்துக் கொண்டு தான் வரவேண்டும் என்பதே நடைமுறை.

இதை கருத்திற் கொண்டு கொழும்பிலிருந்து யாழ். செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் திருமலை சென்று கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கான பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏன் தெரியுமா? கப்பலில் செல்பவர்களுக்கு கிளியரன்ஸ் வழங்கப்படுவதால் ஒரு வழிப் பயணத்தை கப்பல் மூலமாகவும் (கப்பலில் வந்ததற்கான ஆதாரமான கப்பல் ரிக்கட்டும் அதன் பின்னால் குத்தப்பட்டிருக்கும் கிளியரன்ஸ்ஸையும் யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தில் ஒப்படைத்துவிட்டு) பஸ் மூலமும் யாழ்-கொழும்பு பிரயாணங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.


Comments