யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான நடைமுறை - 2

வவுனியாவிற்கு 200 ரூபா ரிக்கற் தந்தார். 450 ரூபாவுடன் கொழும்புக்கு கொண்டு சென்று விடமாட்டீர்களா என்று எனது நண்பர் வினவியபோது ''இல்லை தம்பி வவுனியா வரைக்கும் தான் எமது சேவை. நீங்களே தான் கொழும்பு சென்றால் என்ன, கண்டி சென்றால் என்ன'' என கூறினார்.

நானும் நண்பனும் பிளான் போட்டோம் வவுனியாவிலிருந்து பஸ்ஸில் கொழும்பு போவோம் என்று. ஆனால் எனக்கு தெரிஞ்ச பெரிசு சொல்லிச்சு தம்பி மாரே நீங்கள் பஸ்ஸில் போறது ஒன்றுமில்லை. செக்கிங் ஒவ்வொரு நேரமும் ஒரு மாதிரி இருக்கும். ஒரு தடவை செக்கிங் இருக்கவே இருக்காது. சில நேரங்களில் 4,5 தடவை கூட செக்கிங் பண்ண வாய்ப்புகள் இருக்கின்றது.

என்ன குண்டா கொண்டு போறம் என்று எனது நண்பன் கேட்க ஏதோ உங்கள் இஸ்டம் தம்பி மாரே! என்று கூறியது. ஒரு தடவை செக்கிங் பண்ணுறபோவெ வெறுக்குது பல தடவை என்றால் அலுப்புதான் வரும். ரயிலில் செல்வோம் என்று 9.30 சிங்கள மஹா வித்தியாலயத்தில் இருந்து கொண்டே பிளான் போட்டோம்.


நேரமோ சரியாக 9.45 ஐ செல்போன் காட்டியது. அனைத்து பஸ்களுமே இயக்க நிலைக்கு கொண்டு வந்தார்கள். 9.50 க்கு ஒவ்வொரு பஸ்ஸாக புறப்பட்ட ஆரம்பித்தது. முதலில் இரு சொகுசு தனியார் பஸ்களும் அதற்கு பின்னால் CTB பஸ்களும் கிளம்பின. 10.30 மணிக்கு சாவகச்சேரி நகரை கடந்து சென்றது. 11.30 மணிக்கெல்லாம் கிளிநொச்சி நகரை கடந்து பஸ்கள் சென்ற வண்ணம் இருந்தன.


நானும் நண்பனும் ஒரு புறம் சைட்டால சைட் அடிக்கிறதும் மிகுதி நேரமெல்லாம் அழிவடைந்த நகரையும் கட்டடங்களையும் பார்வையிட்டுக் கொண்டடிருந்தோம்.


கிளிநொச்சி நகரில் பல கட்டடங்கள் அழிந்திருந்தாலும் சில கட்டடங்கள் அப்படியே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் நிறுத்தி கச்சான் வாங்குவோம் என்று பார்த்தால் பஸ்ஸின் சாரதி நிறுத்த மாட்டேன் நான் வவுனியாவில் தான் நிறுத்துவேன் என்று அடம்பிடித்தார்.


அவர் கூறியது போலவே யாழ்ப்பாணத்தில் ஏற்றிய எம்மை எந்த ஒரு இடத்திலுமே இறக்காமல் வவுனியா நகரில் சென்று அவிழ்த்து விட்டார்கள்.

Comments

விரிவாகவே எழுதுங்கள் பலருக்கும் பயன்படும்.
விரிவாக எழுதுவதற்கு முயற்சி செய்கின்றேன்.
Mr.Muruku உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.