அ. அமிர்தலிங்கம் பற்றிய குறிப்புகள்

1989 ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் திகதி கொழும்பில் கொலை செய்யப்பட்ட அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தையொட்டியே இப்பதிவை இடுகின்றேன்.


1949: தமிழரசுக் கட்சி நிறுவுதல். மத்திய செயற்குழு உறுப்பினரானார்.
1952: முதல் தேர்தல்களம். வட்டுக்கோட்டையில் வீரசிங்கம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
1953: தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி உதயம் - அதன் முதல் தலைவர்.
1954: ஜுலை திருமணப்பதிவு. அன்றே மாலையில் கரவெட்டியில் நடைபெற்ற பொது மேடைக்கருத்தரங்கில் வி.பொன்னம்பலத்துடன் கருத்துப்போர்.
1954: இலங்கைத் தமிழர் சரித்திரத்தில் முதல் கறுப்புக் கொடி போராட்டம். சேர் ஜோன் கொத்தலாவலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் அடியுண்டார்.

1956: தேர்தல் வெற்றி. வட்டுக்கோட்டை தொகுதிப் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றார்.
1956: ஆனி 5ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம். சிங்களக் காடையர்களால் தாக்குண்டு தலையில் காயத்துடன் அன்று மாலை பாராளுமன்றத்தில் பேச்சு.
1956: ஆனி 15 ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தலைமகன் காண்டீபன் பிறந்தார்.

1956: ஜுலை 5 முதல் ஜுலை 16 வரை திருமலை யாத்திரை பொன்னாலையிலிருந்து திருமலை வரை நடந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர்.
1957: எம்.பி.டி.ரொய்சாவுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் கறுப்புக் கொடி. பொலிஸாரால் தாக்கப்பட்டார்.
1957: ஓகஸ்ட் இங்கிலாந்தில் "ஐவெநச Pயசடயைஅநவெ ஊழகெநசநnஉந" -இல் உரையாற்றினார்.
1958 ஏப்ரல் 10 - சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி 14 நாட்கள் சிறை தண்டனை - யாழ் கோட்டை சிறையில் அடைப்பு.
1958 மே - ஊரடங்குச் சட்டம் அமுலாகியிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு தோணியில் செல்லுதல். மட்டக்களப்பில் கைதாகி கொழும்பு கொண்டு செல்லப்பட்டு 4 மாதம் தடுப்புக் காவலில் வைக்கப் பெற்றார்.
1958 நவம்பர் - தீண்டாமை ஒழிப்பு மாதம் ஆலய, தேனீர்க் கண்ட பிரவேசம்.
1959 ஜுன் 2ஆம் நாள் இரண்டாவது மகன் பகீரதன் பிறப்பு.

1960 மார்ச் பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லுதல்.
1960 ஜுலை பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லுதல்.
1961 தனிச்சிங்களச் சட்ட அமுலை எதிர்த்து தமிழ்பிரதேசமெங்கும் அரச தலைமையலுவலகம் முன் (கச்சேரி) சத்தியாக்கிரகம். தமிழரசு தபால் சேவை நடத்தப்பட்டது.

1961 சத்தியாக்கிரகத்தை முறியடிக்க கணவன் மனைவி இருவரும் ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் கைது. 6 மாதம் தடுப்புக் காவல் - பனாகொடை இராணுவமுகாமில்.
1961 ஒக்டோபரில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை.
1963 ரி.பி.இலங்கரட்னாவுக்கு யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி - பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

1965 மார்ச் பொதுத் தேர்தல் - வட்டுக்கோட்டை பாராளுமன்றப் பிரதிநிதியாக 11,000க்கும் மேற்பட்ட வாக்குகளில் வெற்றி பெற்றார்.
1966 2ஆவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் பங்குபெறுதல்.
1967 கட்சியைப் பலப்படுத்துவதிலும் பண்டா - செல்வா ஒப்பந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்குபெறுதல்.
1968 மலையகமெங்கும் இலங்கை தொழிலாளர் கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சுற்றுப்பயணம்.

1969 தமிழரசுக் கட்சியின் செயலாளராக உருவில் 11வது மாநாட்டில் தெரிவானார்.
1970 பொதுத் தேர்தல் - வட்டுக்கோட்டையில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
1971 பிப்ரவரி 7ஆம் நாள் தமிழர் இயக்கங்கள் வல்வெட்டித்துறையில் ஒன்றுபட்ட போது முன்னின்று செயற்பட்டார்.
1972 மே 14ஆம் நாள் தமிழர் கூட்டனி திருமலையில் உதயமாக முன்நின்று உழைத்தார்.

1972 மே 22 புதிய அரசியலமைப்புச் சட்டத்தை யாழ். நாவலர் மண்டபத்தில் தீக்கிரையாக்கினார்.
1973 மல்லாகம் மாநாட்டில் 7.9.1973 அன்று தமிழரசுக்கட்சியின் 6ஆவது தலைவராக ஏகமனதாகத் தெரிவு.
1974 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அதன் வெற்றிக்கு தீவிரமாக உழைத்தவர்.

1975 வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடும் தனது நீண்டகாலக் கனவான தமிழீழ இலட்சியத்தை முன்னெடுத்து மாநாட்டுத் தீர்மானமாக நிறைவேற்ற பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதல் இணைச்செயலாளர் நாயகங்களாக திரு.சிவசிதம்பரமும், இவரும் தெரிவானார்கள். இதைத் தொடர்ந்து இறக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாகத் திகழ்ந்தார்.

1975 வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை துண்டுப் பிரசுரமாக விநியோகித்தமைக்காகக் கைதாகி - 'Trailat Bar' என்ற சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். தடுப்புக்காவலில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டார்.
1975 'Trailat Bar' நீதிமன்றம் அதிகாரமற்றது என்ற தீர்ப்பைத் தொடர்ந்து விடுதலையானார்.

1975 சட்டமறுப்பில் சிறைசென்ற திரு. ஆனந்தசங்கரியையும் ஏனைய தொண்டர்களையும் விடுதலையாகி வரவேற்கச் சென்ற போது யாழ்கோட்டை பொலிஸ் நிலையம் முன்னால் தாக்கப்பட்டார்.
1977 தந்தை செல்வாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாக தெரிவானார்.
1977 ஜுலை தேர்தல் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவானார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவானர்.

1977 ஓகஸ்டு யாழ் பஸ்நிலையத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டார்.
1978 இந்தியா விஜயம், தமிழீழப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் பிரச்சாரம். இந்திய அரசை
1978 இங்கிலாந்தில் Co-ordinating Coaaitee நிறுவுதல். (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு)
1981 பொலிசாரின் யாழ் நூல்நிலைய எரிப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலக எரிப்பு,

1982 Coaan Wealth Conference - Nogria பங்கேற்பு
1982 அமெரிக்க மசற்சுசெற் தமிழீழ தீர்மான பத்திரத்தைப் பெறல்.
1983 ஜனவரி 5வது உலகத்தமிழ்மாநாடு. மதுரை பிரதானப் பேச்சாளர்.
1983 ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து மாறுவேடத்தில் கொழும்பு வந்து இந்தியாவிற்கு செல்லல்.

1983 (தொடர்) தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்தபின் டெல்லி சென்று அன்னை இந்திராவைச் சந்தித்தார். (ஆகஸ்ட் 13) ஆகஸ்ட் 14 - சர்வதேச பத்திரிகையாளர்களின் சந்திப்பு - வெற்றிகரமாக நடந்தேறியது. ஆகஸ்ட் 15 - இந்திய குடியரசு தின விழாவில் அரச பிரதிநிதியாக பங்கேற்பு.
1983 அக்டோபர் இங்கிலாந்திற்கும் ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் பிரசாரம்.
1983 பிரிவினைக்கெதிரான உறுதிப்பிரமாணம் செய்ய மறுத்து பாராளுமன்றப் பதவியையும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் தூக்கி வீசுதல்.
1984 கொழும்பில் வட்ட மேசை மாநாடு, பு.பார்த்தசாரதியின் (Special envoy) அனுசரணையுடன்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தல்
1986 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம்.
1987 இந்தியாவில் இருந்து மீண்டும் கொழும்பு திரும்புதல்
1988 பாராளுமன்றத் தேர்தல் மட்டக்களப்பில் போட்டியிட்டு பின் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லல்.

1989 இந்திய இலங்கை ஒப்பந்த நடைமுறை பற்றிய பங்களிப்பு.
1989 ஜுலை 13ஆம் நாள் கொழும்பில் கொலை செய்யப்படல். (இறக்கும்போது வயது 62)

அ.அமிர்தலிங்கம் பற்றிய வாழ்க்கை குறிப்பு

பிறப்பு : 26.08.1927
இடம் : இலங்கை - வட மாகாணம்
வலிமேற்கில் உள்ள பண்ணாகம்.
தந்தை : சின்னட்டியார் அப்பாப்பிள்ளை (1879 - 1952) ஸ்டேசன் மாஸ்டர் மலேசியா.

1925 - 1940 வரை சங்கானை கிராமசபை உறுப்பினர் பண்ணாகம் மெய்கண்டான் பரிபாலன சபையில் சமூக சேவை.
தாய் : வள்ளியம்மை அப்பாப்பிள்ளை
ஆரம்பக்கல்வி : 1931 முதல் 1936 வரை பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்,
இடைநிலைக்கல்வி : 1936 முதல் 1946 வரை சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி,
1946இல் இக்கல்லூரியிலிருந்து முதன்முதலில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர் என்ற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம் : 1946 முதல் 1948 B.A. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
சட்டக்கல்லூரி : 1948 முதல் 1951 வரை முதல் வகுப்பில் சித்தியடைந்தார். சட்டக்கல்லூரி தமிழ்ச் சங்கத்தை 1950இல் ஸ்தாபித்தார். அதன் தலைவராக 1950 - 1951இல் கடமையாற்றினார். 1951இல் நியாயவாதியாகத் திறமைச் சித்தி எய்தினார்.


Comments

நன்றி சாரங்கன்!