நீலப்படம் பார்த்த சோகக் கதை

பாடசாலை காலத்தில் செய்த குறும்புகள், வதைகளை, வாத்திமாரின் அடிகள், ஆலோசனைகள் போன்ற பல சம்பவங்களை மீட்டுப்பார்க்கும்போது பள்ளி மாணவனாக மாறிவிடுவோமல்லவா? அதுஒரு கனாக்காலம்.



பாடசாலையில் செய்த ஒரு குறும்பு தான் இது. அதாவது 8,9ஆம் ஆண்டுகளில் என்று நினைக்கிறன், படித்துக் கொண்டிருந்தபோது எனது நண்பர்கள் பாடசாலையை கட் அடித்துவிட்டு நீலப்படம் பார்க்க பாடசாலைக்கு வந்து ‘வந்தேன் வாத்தியாரே’ என்று பதிவுசெய்து விட்டு அதுதான் ரிஜிஸ்ட்டர் செய்துவிட்டு வாத்திமாருக்கு அல்வாவை வைச்சுவிட்டு ஏதோஒருவாறாக சென்றுவிட்டார்கள்.


வகுப்பில் இருந்ததோ 40 பேரில் 30 பேர்தான். பாடசாலை 2 மணிக்கு முடிவடைந்து விட்டது. இடையில் சென்றவர்கள் வரவில்லை. ஏதோ நீலப்படம் பார்க்க சென்றுவிட்டார்கள் என்று ஒழுங்குபடுத்தல் (டிசிபிளின்) வாத்தியாருக்கு தெரிந்துவிட்டது. மறுதினம் பாடசாலைக்கு அனைவரும் வந்தார்கள்.
நீலப்படம் பார்க்கசென்றவர்களை வெளியில் வரசொன்னார் டிசிபிளின் வாத்தியார்.



என்ன சேர் நீலப்படம் என்று விழித்ததார்கள். இடையில் ஓடியவர்கள் வெளியில் செல்லசெல்ல அடி கும்மாங்குத்து என்று அடி விழவிழ நீலப்படமா பார்க்கின்றீர்கள் என்று கேட்டுகேட்டு அடிவிழுந்துகொண்டிருக்கும் போது ஒரு மாணவன் சொன்னான் சேர், நாங்கள் நீலப்படம் பார்க்க, அந்தப்படம் எல்லாக் கலரிலயும் தான் வந்தது. ஏன் அடிக்கிறீங்கள் என்று கேட்டான்.


எல்லாக்கலரிலயும் தானே வந்தது என்று சொல்லிசொல்லி வாத்தியிடம் வாங்கிகட்டினார்கள். அதுக்கு பின்னர் தான் தெரியும் அந்தப்படத்தை (செக்ஸ் படத்தை) நீலப்படம் என்றும் சொல்லுறவங்கள் என்று.

பாடசாலையில் படித்த எனது அருமை நண்பர்களுடன் கதைக்கும்போது இதைச் சொல்லிசொல்லி சிரிப்பார்கள். என்றும் அழியாமல் நிற்கும் எல்லாக்கலர் படம்.

Comments