அகன்ற அலைவரிசை அதிவேக இன்டநெற் இணைப்பு (BROADBAND)

அகன்ற அலைவரிசை அதிவேக இன்டநெற் இணைப்பு (BROADBAND)

சமீப காலங்களில் மக்களிடம் அதிகமாக பிரபல்யமடைந்த விடயங்களில் இந்த அதிவேக இன்டநெற் இணைப்பான அகன்ற அலைவரிசையும் ஒன்று. இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெற் இணைப்பு என்பது குறைந்த செலவில் அதிக பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்ட வரிசையில் அகன்ற அலைவரிசையும் ஒன்று.

இலங்கையில் வழங்கப்படும் அகன்ற அலைவரிசை சேவை (Broadband Service in Sri Lanka)இலங்கையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அகன்ற அலைவரிசை இணைப்பை வழங்குவதால் பாரியளவில் இலாபமீட்டுவதுடன் அனைத்து மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் கட்டண வசதியுடன் சிறந்த சேவையையும் வழங்கி வருவது குறி்ப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்றைய கால கட்டத்தில் பல விதமான இன்டர்நெட் இணைப்புகள் உபயோகத்தில் இருந்து வந்தாலும் இந்த அகன்ற அலைவரிசை நெட்வேர்க் என்பது தான் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றிருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று மிகக்குறைந்த கட்டணம் மற்றொன்று அதிவேகமாக இணைய இணைப்பு.நமது நாட்டில் Slt, Dialog மற்றும் Lankabell போன்ற நிறுவனங்கள் அகன்றஅலைவரிசை இணைப்பை வழங்கிவருவதுடன் பாவனையாளருக்கேற்ப பொதிகளையும் பல்வேறு வகையான வேகங்களில் வழங்குவதுடன் ஒவ்வொரு பொதிகளுக்கும் வெவ்வேறு வகையான கட்டணங்களையும் அறவிடுவதால் விரும்பிய பக்கேஜ்களை (பொதிகளை) தேர்வு செய்யலாம்.அகன்ற அலைவரிசை இணைப்பை 512 Kbps க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வேகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இணைப்பை ஆகக்குறைந்தது ரூபா 2500 க்கும் மேற்பட்ட மாதாந்த வாடகைகளில் இலங்கையில் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.

புதிதாக இணைப்பைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பயனாளர்கள் தொடக்க வைப்புப் பணமாக ரூபாய் 3000 கட்டினால் போதும். மேலும் ஒவ்வொரு மாதமும் ரூபா 2000 முதல் 5000 வரை வேக அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுகிறது.தற்போதைய வளர்ச்சிப்படி சீனா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் தான் இந்த அகன்ற அலைவரிசை இணைப்பை நிறுவனங்களுக்கிடையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டர்நெற் இணைப்பை பொறுத்த வரை உலக நாடுகள் அனைத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கையில் குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒன்றிணைத்துப் பார்க்கையில் எமது நாட்டில் அறவிடப்படும் கட்டணமானது சற்றுக் குறைவானதாகும். எனினும் இந்தியாவை நோக்கும் போது எமது நாட்டு கட்டணத்தை விட பாதியளவே அறவிடப்படுகிறது.

எமது நாட்டில் அதாவது இலங்கையில் மிகவும் பிரபல்யமடைந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களான Slt, Dialog, Lankabell ஆனது கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலுமே இந்த அகன்ற அலைவரிசை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைவிட Mobile Broadband என்ற இணைப்பை தற்போது Mobitel மற்றும் Dialog மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகிறது. எனினும் இம்முறையில் இணைப்பை பெற்றுக் கொள்ள சற்று செலவாகும். இதன் நன்மை என்ன என்று நோக்கினால் சிறிய மொடம் ஒன்று வழங்குனரினால் தரப்படும் இதன் மூலம் எங்கும், எந்த பகுதிகளிலும், எந்த கணினிகளில் இணைய இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

மொபைல் மொடம் மட்டுமே ரூபா 10,000 லிருந்து 30,000 வரை கிடைக்கிறது. மாதாந்த வாடகை ரூபா 3000 லிருந்து 5,000 வரையில் செல்கிறது. இதனை விட வைப்புப் பணமாக ரூபா 4000 செலுத்த வேண்டும். (நிறுவனங்களுக்கிடையில் வேக அடிப்படையில் வேறுபடலாம்)

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கினாலும் சொட்வெயார் தயாரிப்பதில் முன்னிலை பெற்று விளங்கினாலும் பல பில்லியன் அளவு மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் இன்டர்நெற் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையானது மிகக்குறைந்தளவான 6 சதவீதம் தான். மேலும் இந்த அகன்ற அலைவரிசை உபயோகிப்பாளர் எண்ணிக்கையானது 4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை இலங்கையில் பாதியளவு கூட இல்லையென்றே சொல்லலாம்.

ஏன் இந்த அகன்ற அலைவரிசை (Broadband) வேண்டும்?இன்று எல்லோராலும் பரவலாகப் பேசப்படுவது இந்த அகன்றஅலைவரிசை இன்டர்நெற் இணைப்பு தான். ஏன் அகன்ற அலைவரிசை இணைப்பு தேவை என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய காரணங்களை கூறலாம்.

1. வேகம் (SPEED)
இந்த அகன்ற அலைவரிசை என்பது நாம் ஏற்கனவே MODEM மூலம் அனுப்பி தகவல் அனுப்பி வந்த வேகத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அகன்ற அலைவரிசை இணைப்பானது 8 முதல் 10 மடங்கு அதிக வேகத்தை அளிக்கிறது. அலைவரிசையின் தரமான வேகமான 2 MBBS அளவை உபயோகிப்பதால் தகவல்களை இன்டர்நெற் மூலம் குறுகிய காலத்தில் DOWNLOAD ஆவதுடன் நமது நேரத்தையும் செலவையும் குறைத்துக் கொள்ள உதவுகிறது.

2. உடனடி இணைப்பு (INSTANT CONNECTION)
இந்த வகையான இணைப்பானது எப்பொழுதுமே உடனுக்குடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வழி வகுக்கிறது. ஆனால் நாம் முன்னர் உபயோகித்து வந்த MODEM மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து டயல் செய்து இணைப்பை பெற குறைந்தது 20 முதல் 25 நொடிகள் ஆகும். அதன் பின்னர் தான் தகவல்களை அனுப்ப முடியும்.

3. எப்பொழுதும், எந்நேரமும் இணைப்பு (ALWAYS ON)இவ்இணைப்பின் மூலம் 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாளும் இன்ரநெற் இணைப்பை இணைக்கப்பட்டிருப்பதால் தகவல்களை எப்பொழுது வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம்.

4. இரண்டு வகை இணைப்பு வசதி நமது சாதாரண இன்டர்நெற் இணைப்பை (டயல்அப்) ஏற்படுத்தி கொண்டோமேயானால் தொலைபேசியில் அழைப்பை பெறவும் முடியாது அழைப்பை ஏற்படுத்தவும் முடியாது. அதாவது ஒரே நேரத்தில் இன்டர்நெற் தகவல் பரிமாற்றத்தையும் தொலைபேசி தொடர்பையும் உபயோகிக்க முடியாது. ஆனால் இந்த அகன்ற அலைவரிசை மூலம் இன்டர்நெற் இணைப்பை பெற்றால் இன்டர்நெற் உபயோகத்தையும் தொலைபேசி அழைப்பையும் ஒரே நேரத்தில் கையாள முடியும். இதனால் இணைய இணைப்பிலிருக்கும் போது எமது தொலைபேசியில் ENGAGED SOUND ஒலி எழுப்ப வாய்ப்பே இல்லை.

5. தரமான தகவல்கள் (RICHER CONRENT)
அகன்ற அலைவரிசை இணைப்பானது மிகவும் வேகமாக செயற்படுவதால் பல்ஊடகத் தகவல்கள் (MULTIMEDIA) வேகமாக பரிமாற உதவுகிறது. ஆனால் முன்பெல்லாம் மல்டிமீடியா (அதாவது பாடல்கள் வீடியோக்கள் மற்றம் பட) தகவல்களை பார்க்கும் போது அதிக நேரம் விரையமாகும் ஏனென்றால் மிகக்குறைந்த வேகம் காரணமாக. தற்போது அவ்வகையான குறைகளை அகற்றியுள்ளது அகன்ற அலைவரிசை இணைப்பு.

6. குறிப்பிட்ட கட்டணம் (FIXED COST)
இந்த வகையான இணைப்பானது ஒரு குறிப்பிட்ட தொகையையே மாதக் கட்டணமாக அறவிடுகிறது. ஆனால் முன்பெல்லாம் உபயோகத்திற்கு தகுந்தவாறு அதாவது நிமிட பாவனைக்கேற்ப கட்டணம் கூடியோ குறைந்தோ வரும். ஆனால் அகன்ற அலைவரிசை இணைப்பானது மாதாந்த வாடகை பணம் கட்டினால் போதும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது புரோட்பான்ட் இணைப்பின் முக்கிய அம்சம். இதன் மூலம் அதிக நேரம் இணையத்தில் உலா வருவதால் பல தகவல்களை கற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது இதன் பிளஸ்.

அகன்ற அலைவரிசை பற்றிய தொழில்நுட்ப கொள்கைகள்எங்கும் இணையம் எதற்கும் இணையம் என்று கூறும் அளவிற்கு இன்டர்நெட் இன்று எல்லோரிடமும் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. ஒரு காலகட்டத்தில் மின்னஞ்சல் எனப்படும் இ.மெயில் மட்டும் அனுப்புவதற்பே இன்டர்நெற் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பலவிதமான காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சில வியாபார நிறுவனங்கள் இந்த இணையம் எனப்படும் இன்ரநெற் இல்லையென்றால் வியாபாரமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இந்த இன்ரநெற்றை பயன்படுத்துவதற்கு இதுவரை காலமும் பலவிதமான இணைப்புகள் (அதாவது டயல்அப், லீஸ் லைன்) உபயோகத்தில் இருந்தாலும் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் அகன்றஅலைவரிசை இணைய இணைப்பானது பலரையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது என்பது கண்கண்ட உண்மையாகும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

continue......

Comments