30 October 2009

புரோட்பாண்ட் இணைப்பின் வேகத்தை அறிய...

மொபைல் போனை அடுத்ததாக சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தும் சாதனமாக இணையம் உருவாகியுள்ளது. அதிலும் புரோட்பான்ட் இணைப்பை இன்று பெரும்பாலும் அனைவருமே பயன்படுத்துகின்றனர் என்று சொல்வதில் தவறில்லை.

புரோட்பான்ட் இணைப்பில் பல வகை உண்டு. அதில் மொபைல் புரோட்பான்ட் ஆனது மிகவும் பிரபல்யம் பெற்ற ஒன்றாகும்.

இந்த புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும் போது பல விடயங்களை கவனிக்க வேண்டும். அதாவது இணைப்பின் வேகம், வாடகைக் கட்டணம், மொடம் என்று கூறப்படும் டொங்கானின் விலை, Coverage இன் நிலை போன்ற பல விடயங்களை கவனிக்க வேண்டும்.


(புரோட்பான்ட் சார்ந்த பல பதிவுகளை கடந்த காலங்களில் இந்த வலைப்பதிவில் இட்டுள்ளேன்)
சரி விடயத்திற்கு வருவோம், புரோட்பான்ட் இணைப்பின் வேகம் Mbps, Kbps போன்ற அளவுகளில் கணக்கிடப்படுகின்றன. புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும்போது இதன் வேகம் 1Mbps, 3.6 Mbps என்று கூறி விற்பனையாளர் விற்றுவிடுவார். பின்னர் இணையத்தில் மேயும்போது ஆமை வேகத்தில் பக்கங்கள் தோற்றுகின்றன எனப் புலம்புவதை விட புரோட்பான்ட் இணைப்பின் சரியான வேகத்தை அறிய கீழ்க் கண்ட வழிமுறைகளில் செல்லுங்கள்.

உங்களின் இணைப்பு எந்த வேகத்தில் செல்கின்றது, எத்தனை எம்.பி. பைலை எத்தனை நிமிடங்களில் பதிவிறக்கிக் கொள்ள முடியும் போன்ற பல பயனுள்ள தகவல்களை இந்த தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
www.speedtest.net
என்ற தளத்திற்குச் சென்று Begin Test (படம் 1) என்பதை சொடுக்கியதும் மீற்றர் அமைப்பு போன்ற ஒரு தொகுதி ஓடிக்கொண்டிருக்கும் (படம்2) ஓரிரு நிமிடங்களின் பின்னர் உங்களின் இணைப்பு வேகங்கள் அடங்கிய தரவுகள் (படம்3) காண்பிக்கப்படும்.
இதிலிருந்து உங்களின் சேவை வழங்குநரினால் குறிப்பிடப்பட்ட வேகத்தில் இணையம் தொழிற்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளமுடியும்.

Free Broadband இணைப்பைப் பெற

23 October 2009

பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.