18 October 2013

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்த சிவாஜிலிங்கம்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (14.10.13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தியாகங்களிற்கு மதிப்பளிக்கும் முள்ளிவாய்க்காலிற்கு தனது வெற்றியை சமர்ப்பணம் செய்வதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சமாதான நீதவான் டொக்டர் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம்  தெரிவித்தார்
- See more at: http://www.tamilnews.cc/news.php?id=45300#sthash.fvdRdyOa.dpuf

புலிகள் புதைத்த பெரும் பணத்தை தோண்டும் இராணுவம் !

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானம் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை தோண்டப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே இந்த மயானம் தோண்டப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

தமது காவலில் இருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள். இதில் இருந்து ஒரு விடையம் நன்றாகப் புலனாகிறது. இலங்கை இராணுவமானது தாம் இரகசியமாக தடுத்துவைத்துள்ள புலிகள் உறுப்பினர்களை இன்றும் கூட கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்பது தான். ஒரு காலத்தில் தமிழின விடிவுக்காகப் போராடி இவர்கள் தற்போது கேட்ப்பார் அற்று இலங்கை உள்ள இரகசிய முகாம்களில் வாடுகிறார்கள். இவர்கள் தொடர்பாக சர்வதேச தமிழர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை என்று பலர் குற்றஞ்சொல்லும் அளவுக்கு நிலமை மோசமடைந்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட இந்த புலிகள் உறுப்பினர் இப் பிரதேசத்தில் ஆயுதங்களும் பெருமளவான பணமும் இருப்பதாக கூறியுள்ளார். இதனை தோண்டு எடுக்கவே தற்போது விசேட அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இப்போர்வையில் மயானம் முழுவதையும் கிண்டி, கிளறுவார்கள் போல இருக்கே ?

தனிக்கட்சி தொடங்கிய நடிகர் விஜய்?

நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பின், அவருக்கும், ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட, அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் இறங்கினார்.

இதற்கிடையில், "தலைவா படம் ரிலீசாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜயும், அவருடைய அப்பாவும், அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை, படம் ரிலீசாவதற்கு, சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது. இதனால் நொந்து போன நடிகர் விஜய், படம் ரிலீசாவதற்குள்ளாகவே, வெறுத்துப்போய், ஊட்டிக்குச் சென்று தங்கிவிட்டார். மிக நீண்ட போராட்டத்துக்குப் பின், படம் ஒருவழியாக ரிலீஸ் ஆனது. இருந்தாலும், "தலைவா படம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது.

தற்போது, அவர் நடித்துக் கொண்டிருக்கும், "ஜில்லா படம்  முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவர் மீண்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறார். தன், "விஜய் ரசிகர் மக்கள் நல நற்பணி மன்றத்தை மீண்டும் வேகப்படுத்தி, அரசியல் களத்தில், பரபரப்பாக செயல்பட வைப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியிருக்கிறார்,
"ஜில்லா பட ஷூட்டிங், சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது. அப்போது தனக்கு மிகவும் நம்பகமான சில மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னுடைய எண்ணஙகளையும், கருத்துக்களையும், அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து, விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, "தலைவா படம், கேரளாவில் ஓரளவுக்கு வெற்றியடைந்தது. ஆனால், தமிழகத்தில் படம், படு தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்று நடிகர் விஜய் கேட்டார். அதற்கு மாவட்டச் செயலர்கள் பலரும், பல விதமான கருத்துக்களைக் கூறினர். ஒரு சிலர், உருப்படியாகவும் நல்லவிதமாகவும் சில கருத்துக்களைக் கூறினர். அவர்கள் கூறியதாவது:


உங்களுக்கு, மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது. உங்கள் பலத்தை நீங்களே உணருவதில்லை. அப்படித்தான், "தலைவா படம் ரிலீசுக்கு, அரசு தரப்பில் மறைமுகமாக தடை ஏற்பட்டதும், நீங்கள் அரசுக்கு சரண்டர் ஆகி விட்டீர்கள். முதல்வரை கெஞ்சி, வாழ்த்தி அறிக்கை கொடுத்தீர்கள். இதை உங்களுடைய ரசிகர்களும், மக்களும்
ரசிக்கவில்லை. படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, உங்கள் இமேஜை குறைத்துக் கொண்டது தவறு.  நீங்கள் தைரியமாக அரசியல் செய்ய முன்வர வேண்டும்.‌

20 March 2013

எகிப்த்திய புரட்சிக்கு நிகராக ஆரம்பித்துள்ள இணையத்தளம் ! : பதிவர்கள் செய்யவேண்டியது

2011ம் ஆண்டு எகிப்த்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், Facebook ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் Facebook ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடயம்.

அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். Tamilrising( தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும்.

எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும். TAMIL RISING . COM

இந்த விடயத்தில் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்யலாம்?

 01) கீழ்க்காணும் நிரலைப் பிரதி செய்து உங்கள் வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளங்களிலோ இணைத்துவிடுங்கள். அவ்வாறு இணைப்பதனூடாக உங்கள் வலைப்பதிவுக்கு வரும் பதிவர்களுக்கு Tamil Rising.com என்ற தளம் இருப்பதைத் தெரியப்படுத்தலாம்.

நிரல் : -


வலைப்பதிவில் இணைக்கும் முறை

1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)

2. “Manage Layouts” பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).

3. “Edit HTML” என்கிற பகுதிக்குச் செல்க

4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க

6. “EditBox” இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற தேர்வு செய்க.

7. < / h e a d >என்ற நிரலுக்கு மேல் இடுக..
8. சேமிக்கவும்.

9. இனி உங்கள் தளத்துக்கு பார்வையாளர்கள் முதல்முறை வரும்போது கறுப்புத் திரையில்  போராட்டம் தொடர்பான செய்திகளும் தளத்துக்கான இணைப்பும் தெரியும்.