12 July 2011

உறவை பலப்படுத்தும் முத்தம்


Kissing அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது.முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது வியக்கத்தக்க ஆச்சரியத்தக்க பலன்களை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

முத்தம் கொடுப்பவரை விட பெறுகின்றவருக்குத்தான் முத்தத்தின் பலன்கள் அதிகளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் ஏற்படும் பலன்கள் உங்களுக்காக உறவின் தொடக்கம் முத்தம் என்பது தாம்பத்யத்தின் ஆரம்பம்.


உறவை தொடங்குவதற்கான சாவியாக முத்தம் செயற்படுகிறது. உறவு பலப்படும் முத்தம் என்பது தம்பதியர்க்கிடையேயான உறவை பலப்படுத்தும். காதலர்கள் ஒருவருக்கொருவர் பிணைப்பை உறுதிப்படுத்தவும் முத்தம் உதவுகிறது.மன அழுத்தத்தை போக்கும் மன அழுத்தத்தைப் போக்குவதில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் முத்தமிட்டுக்கொள்வதின் மூலம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி முத்தத்தின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம்.

30 நிமிடங்கள் தொடர்ந்து முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் அலேர்ஜி நோய் சரியாகிவிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலை இளைக்கச் செய்யும் முத்தம் தினமும் 20 நிமிடங்கள் முத்தமிட்டுக்கொள்வது உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

20 நிமிட முத்தம் 22 கலோரிகளை எரிக்கிறதாம். உடல் இளைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அடிக்கடி முத்தமிட்டுக்கொள்ளலாம் சுறுசுறுப்பாக்கும் முத்தம் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்குவதில் முத்தம் முக்கிய பங்காற்றுகிறது.


முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்வதில் முத்தத்தின் பங்கு அதிகம் வறட்சியைப் போக்கும் முத்தமிடுவதன் மூலம் வாயில் சலைவா எனப்படும் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் உதடு வறட்சி நீங்குவதோடு ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது. வாய்துற்நாற்றத்தை அகற்றி கெட்ட பாக்டீரியாவை அடியோடு அகற்றுகிறது.

18 March 2011

முச்சக்கர வண்டியில் விபச்சாரம்! மூன்று சீனப் பெண்கள் உட்பட நால்வர் கைது!!

முச்சக்கர வண்டி மூலம் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த முச்சக்கர வண்டிச் சாரதியான தரகரும் மூன்று சீனப் பெண்களையும் கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களான சீனப் பெண்கள் மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கியிருந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் 30 மற்றும் 35 வயதுடையவர்களென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரான இவர்களுக்குச் தரகராகச் செயல்பட்டமுச்சக்கரவண்டி சாரதி முல்லேரியா பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் தனக்கு கிடைக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கேற்ப இந்த சீனப்பெண்களை அழைத்துக்கொண்டு தேவையான இடங்களில் விட்டுச் செல்வதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த விபசார நடவடிக்கை தொடர்பாக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து கல்கிசை கடற்கரை பகுதியில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

11 March 2011

அவுஸ்திரேலியா தஞ்சம் கோரும் இலங்கையர்களுக்கு அபாயம்

உண்மையான விசா இல்லாத இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவினுள் பிரவேசம்; தடுக்கப்பட்டுள்ளதுமிகவும் அபாயகரமான படகுகளில் தமது உயிர்களையும் ஜீவ சேமிப்புக்களையும் பணயம் வைத்து பயணிக்க மனிதக் கடத்தற்காரர்கள் இலங்கையரை பிழையாக வழிநடத்துகின்றனர்.
கடும் விதிகளதாம் இலங்கை அகதிகள் எனக் கோரும் இலங்கையரின் செயல்முறைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதென அறிவித்துள்ளது. அது மீள எப்போது நடைபெறும் என்பது உறுதியாகாவிட்டாலும், ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இவ்விதிகளின் இறுக்க சுபாவம் நிமித்தம் பல அகதி கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலதிக கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளனதாம் அகதிகள் எனக் கோரும் பல இலங்கையர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மீள இவர்கள் திருப்பி அனுப்பவும் படுவர்.
நிஜமான அகதிளென கருதப்படுகிறவர்களுக்கு மாத்திரமே அவுஸ்திரெலியா விசாக்களை வளங்கும்.
மனிதக் கடத்தற்காரர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் பணத்தை எடுக்கும் வரை மாத்திரமே இதை இவர்கள் செய்கின்றனர் அவுஸ்திரேலியாவில் தங்கவைப்பது பொய்யாகும்.
நீங்கள் ஒரு மனிதக் கடத்தல்காரருக்கு செவிகொடுத்தால் உங்கள் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள்

05 March 2011

விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அதிகளவு தண்ணியடிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகள்!

விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் ஐரோப்பியர்களுள் அதிகம் மது அருந்துபவர்கள் பிரிட்டிஷ் பிரஜைகளே.

இது சம்பந்தமான ஒரு கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. உள்ளூரில் இருக்கின்ற போது மது அருந்துவதைவிட வெளிநாடு சென்றால் இவர்கள் அதிகம் மது அருந்துகின்றனர்.

சுமார் 65%மானவர்கள் இப்படித்தான் உள்ளனர். சுற்றுலா ஆலோசனை நிறுவனமொன்று இந்த மதிப்பீட்டை நடத்தியுள்ளது.


வெளி இடங்களுக்குச் சென்றால் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுள் 41% மட்டுமே அதிகம் மது அருந்துகின்றனர்.

இத்தாலியர்களுள் 28%மானவர்களுக்கு மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் மத்தியில் இந்த மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரஜைகள் வெளிநாடு சென்றால் உள்ளூரில் மது அருந்துவதை விட ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மடங்கு மது அருந்துகின்றனர்.

29%மான பிரிட்டிஷ் பிரஜைகள் இவ்வாறு காணப்படுகின்றனர்.ஏனைய ஐரோப்பியர்கள் மத்தியில் இது 10% மட்டுமே.