23 November 2009

ஷில்பாவை மணந்த ராஜ்குந்த்ரா

பொலிவூட் நடிகை சில்பா சிட்டிக்கும் (34) லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் நேற்று முன்தினம் (22-11-09) மும்பையில் திருமணம் நடைபெற்றது.மண்டபத்திற்கு வருகை தரும் மணமகன்


மண்டபத்திற்கு வருகை தரும் சில்பா


வீதி உலா வரும் மணமக்கள்


திருமணத்தின் பின்

30 October 2009

புரோட்பாண்ட் இணைப்பின் வேகத்தை அறிய...

மொபைல் போனை அடுத்ததாக சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தும் சாதனமாக இணையம் உருவாகியுள்ளது. அதிலும் புரோட்பான்ட் இணைப்பை இன்று பெரும்பாலும் அனைவருமே பயன்படுத்துகின்றனர் என்று சொல்வதில் தவறில்லை.

புரோட்பான்ட் இணைப்பில் பல வகை உண்டு. அதில் மொபைல் புரோட்பான்ட் ஆனது மிகவும் பிரபல்யம் பெற்ற ஒன்றாகும்.

இந்த புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும் போது பல விடயங்களை கவனிக்க வேண்டும். அதாவது இணைப்பின் வேகம், வாடகைக் கட்டணம், மொடம் என்று கூறப்படும் டொங்கானின் விலை, Coverage இன் நிலை போன்ற பல விடயங்களை கவனிக்க வேண்டும்.


(புரோட்பான்ட் சார்ந்த பல பதிவுகளை கடந்த காலங்களில் இந்த வலைப்பதிவில் இட்டுள்ளேன்)
சரி விடயத்திற்கு வருவோம், புரோட்பான்ட் இணைப்பின் வேகம் Mbps, Kbps போன்ற அளவுகளில் கணக்கிடப்படுகின்றன. புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும்போது இதன் வேகம் 1Mbps, 3.6 Mbps என்று கூறி விற்பனையாளர் விற்றுவிடுவார். பின்னர் இணையத்தில் மேயும்போது ஆமை வேகத்தில் பக்கங்கள் தோற்றுகின்றன எனப் புலம்புவதை விட புரோட்பான்ட் இணைப்பின் சரியான வேகத்தை அறிய கீழ்க் கண்ட வழிமுறைகளில் செல்லுங்கள்.

உங்களின் இணைப்பு எந்த வேகத்தில் செல்கின்றது, எத்தனை எம்.பி. பைலை எத்தனை நிமிடங்களில் பதிவிறக்கிக் கொள்ள முடியும் போன்ற பல பயனுள்ள தகவல்களை இந்த தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
www.speedtest.net
என்ற தளத்திற்குச் சென்று Begin Test (படம் 1) என்பதை சொடுக்கியதும் மீற்றர் அமைப்பு போன்ற ஒரு தொகுதி ஓடிக்கொண்டிருக்கும் (படம்2) ஓரிரு நிமிடங்களின் பின்னர் உங்களின் இணைப்பு வேகங்கள் அடங்கிய தரவுகள் (படம்3) காண்பிக்கப்படும்.
இதிலிருந்து உங்களின் சேவை வழங்குநரினால் குறிப்பிடப்பட்ட வேகத்தில் இணையம் தொழிற்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளமுடியும்.

Free Broadband இணைப்பைப் பெற

23 October 2009

பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.

10 September 2009

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான நடைமுறை - 2

வவுனியாவிற்கு 200 ரூபா ரிக்கற் தந்தார். 450 ரூபாவுடன் கொழும்புக்கு கொண்டு சென்று விடமாட்டீர்களா என்று எனது நண்பர் வினவியபோது ''இல்லை தம்பி வவுனியா வரைக்கும் தான் எமது சேவை. நீங்களே தான் கொழும்பு சென்றால் என்ன, கண்டி சென்றால் என்ன'' என கூறினார்.

நானும் நண்பனும் பிளான் போட்டோம் வவுனியாவிலிருந்து பஸ்ஸில் கொழும்பு போவோம் என்று. ஆனால் எனக்கு தெரிஞ்ச பெரிசு சொல்லிச்சு தம்பி மாரே நீங்கள் பஸ்ஸில் போறது ஒன்றுமில்லை. செக்கிங் ஒவ்வொரு நேரமும் ஒரு மாதிரி இருக்கும். ஒரு தடவை செக்கிங் இருக்கவே இருக்காது. சில நேரங்களில் 4,5 தடவை கூட செக்கிங் பண்ண வாய்ப்புகள் இருக்கின்றது.

என்ன குண்டா கொண்டு போறம் என்று எனது நண்பன் கேட்க ஏதோ உங்கள் இஸ்டம் தம்பி மாரே! என்று கூறியது. ஒரு தடவை செக்கிங் பண்ணுறபோவெ வெறுக்குது பல தடவை என்றால் அலுப்புதான் வரும். ரயிலில் செல்வோம் என்று 9.30 சிங்கள மஹா வித்தியாலயத்தில் இருந்து கொண்டே பிளான் போட்டோம்.


நேரமோ சரியாக 9.45 ஐ செல்போன் காட்டியது. அனைத்து பஸ்களுமே இயக்க நிலைக்கு கொண்டு வந்தார்கள். 9.50 க்கு ஒவ்வொரு பஸ்ஸாக புறப்பட்ட ஆரம்பித்தது. முதலில் இரு சொகுசு தனியார் பஸ்களும் அதற்கு பின்னால் CTB பஸ்களும் கிளம்பின. 10.30 மணிக்கு சாவகச்சேரி நகரை கடந்து சென்றது. 11.30 மணிக்கெல்லாம் கிளிநொச்சி நகரை கடந்து பஸ்கள் சென்ற வண்ணம் இருந்தன.


நானும் நண்பனும் ஒரு புறம் சைட்டால சைட் அடிக்கிறதும் மிகுதி நேரமெல்லாம் அழிவடைந்த நகரையும் கட்டடங்களையும் பார்வையிட்டுக் கொண்டடிருந்தோம்.


கிளிநொச்சி நகரில் பல கட்டடங்கள் அழிந்திருந்தாலும் சில கட்டடங்கள் அப்படியே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் நிறுத்தி கச்சான் வாங்குவோம் என்று பார்த்தால் பஸ்ஸின் சாரதி நிறுத்த மாட்டேன் நான் வவுனியாவில் தான் நிறுத்துவேன் என்று அடம்பிடித்தார்.


அவர் கூறியது போலவே யாழ்ப்பாணத்தில் ஏற்றிய எம்மை எந்த ஒரு இடத்திலுமே இறக்காமல் வவுனியா நகரில் சென்று அவிழ்த்து விட்டார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான நடைமுறை - 1

ஏ-9 பாதையினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நகரை வந்தடைவதென்பது மிக இலகுவானதும் செலவு குறைந்ததுமாகவே காணப்படுகின்றது. அதாவது காலை 6 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்திற்கு சென்றால் (முன்பதிவு செய்து டோக்கன் எடுக்க வேண்டியது என்பது அவசியமில்லை) 5, 6 பஸ்கள் நிற்கும்.

ஏற்கனவே பஸ் நிலையத்தில் பதிவு செய்து எடுத்த டோக்கனை காட்டி பெட்டி, சட்டிகளுடன் பஸ்ஸில் ஏறினால் சிறிய மட்டைத் துண்டு அதுதான் பாஸ் ஒன்று தருவார்கள். 2 நிமிட ஓட்டத்தின் பின் இறக்கி வளவொன்றில் விட்டுட்டு சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரிசையில் பரிசோதனைக்காக ஒவ்வொருத்தராக விடுவார்கள்.


ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட பாஸ்ஸை ஒப்படைத்துவிட்டு உடல் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் பெட்டி படுக்கைகளின் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் கிளியரன்ஸ்ஸை வாங்குவார்கள். அங்கு ஒரு சிறிய பதிவு எங்கு போகின்றீர்கள், செல்வதற்கான காரணம் என வினாவுவார்கள். அதை முடித்த பின் அடையாள அட்டையின் போட்டோ பிரதியை கேட்பார்கள். அதில் சிவில் அலுவலகத்தின் சீல் அடித்து தருவார்கள்.


அதன் பின்னர் மீண்டும் அதேபோல் சிறிய பதிவு. இவ்வளவும் முடிக்கும் போது நேரமோ காலை 8.45 ஆகிவிட்டது. 10 போக்குவரத்து சபையின் பஸ்களும் இரு தனியார் சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுட்டிருந்தது. (இந்த எண்ணிக்கையானது பயணிகளின் எண்ணிக்கையை வைத்து வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.)


பதிவுகளை முடித்த பின்னர் கொட்டகைக்குள் இருக்க வேண்டியது தான். ஒருபுறம் பஸ்கள் வரிசையில் நிற்கும். எல்லோரையும் பதிவு செய்து முடித்த பின்னர் பஸ்களில் ஏறச் சொல்லுவார்கள். அடிபட்டு பிடிபட்டு பஸ்களில் தொங்குவார்கள். போதியளவு பஸ்கள் இருக்கின்றது. இடம் கிடைக்கும் தானே, ஏன் அடிபட்டு ஏறவேண்டும் என்று நம்ம யாழ்ப்பாண தமிழன் யோசிப்பதில்லை! அது தான் கவலையளிக்கிறது. 9.15 மணி ஆகிவிட்டது. பஸ்களில் ஏறி அமர்ந்து கொண்டோம். கொன்டக்டர் ரிக்கட் போட்டுக் கொண்டு உடனயே வந்து விட்டார்.

08 September 2009

ஏ-9 வீதியால் செல்லும் மக்களின் தந்திரோபாயம்

ஏ-9 வீதியினூடாக பிரயாணம் செய்வதென்பது முன்னரைப் போல் போல் இலகுவானதாக அமையவில்லை என்றாலும் மிகவும் குறைந்த செலவுடன் இப்பொழுது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும்.

காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறபடுவோமானால் அன்றிரவே கொழும்பு நகரை சென்றடைந்து விடலாம் என்பது சந்தோஷமான விடயம் தான். ஆனால் கொழும்பிலிருந்து காலை புறப்பட்டால் அன்றிரவே யாழ்ப்பாணத்தை சென்றடைந்து விடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

அதில் ஒரு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் நண்பர்களுடன் எனது ஊரிற்கு சென்றிருந்தேன். அப்போது இருந்த நடைமுறைகள் பற்றியே இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.


கொழும்பிலிருக்கும் மக்கள் வவுனியாவினூடாக யாழ்ப்பாணம் செல்ல முடியும் என்று பத்திரிகைகளில் செய்திகளை கண்குளிர காணக்கூடியதாகவே இருந்தது. எனினும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் திரும்பி கொழும்பு வருவதென்றால் கிளியரன்ஸ் என்ற தலைவலியை எடுத்துக் கொண்டு தான் வரவேண்டும் என்பதே நடைமுறை.

இதை கருத்திற் கொண்டு கொழும்பிலிருந்து யாழ். செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் திருமலை சென்று கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கான பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏன் தெரியுமா? கப்பலில் செல்பவர்களுக்கு கிளியரன்ஸ் வழங்கப்படுவதால் ஒரு வழிப் பயணத்தை கப்பல் மூலமாகவும் (கப்பலில் வந்ததற்கான ஆதாரமான கப்பல் ரிக்கட்டும் அதன் பின்னால் குத்தப்பட்டிருக்கும் கிளியரன்ஸ்ஸையும் யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தில் ஒப்படைத்துவிட்டு) பஸ் மூலமும் யாழ்-கொழும்பு பிரயாணங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.


06 September 2009

தத்துவம் என்றால் இதெல்லோ தத்துவம்


பெண்களை விட ஆண்கள் புண்ணியம் செய்தவர்கள். தாமதமாக திருமணம் செய்து கொண்டு, சீக்கிரமே இறந்துவிடுகிறார்கள்.

13 July 2009

அ. அமிர்தலிங்கம் பற்றிய குறிப்புகள்

1989 ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் திகதி கொழும்பில் கொலை செய்யப்பட்ட அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தையொட்டியே இப்பதிவை இடுகின்றேன்.


1949: தமிழரசுக் கட்சி நிறுவுதல். மத்திய செயற்குழு உறுப்பினரானார்.
1952: முதல் தேர்தல்களம். வட்டுக்கோட்டையில் வீரசிங்கம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
1953: தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி உதயம் - அதன் முதல் தலைவர்.
1954: ஜுலை திருமணப்பதிவு. அன்றே மாலையில் கரவெட்டியில் நடைபெற்ற பொது மேடைக்கருத்தரங்கில் வி.பொன்னம்பலத்துடன் கருத்துப்போர்.
1954: இலங்கைத் தமிழர் சரித்திரத்தில் முதல் கறுப்புக் கொடி போராட்டம். சேர் ஜோன் கொத்தலாவலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் அடியுண்டார்.

1956: தேர்தல் வெற்றி. வட்டுக்கோட்டை தொகுதிப் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றார்.
1956: ஆனி 5ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம். சிங்களக் காடையர்களால் தாக்குண்டு தலையில் காயத்துடன் அன்று மாலை பாராளுமன்றத்தில் பேச்சு.
1956: ஆனி 15 ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தலைமகன் காண்டீபன் பிறந்தார்.

1956: ஜுலை 5 முதல் ஜுலை 16 வரை திருமலை யாத்திரை பொன்னாலையிலிருந்து திருமலை வரை நடந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர்.
1957: எம்.பி.டி.ரொய்சாவுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் கறுப்புக் கொடி. பொலிஸாரால் தாக்கப்பட்டார்.
1957: ஓகஸ்ட் இங்கிலாந்தில் "ஐவெநச Pயசடயைஅநவெ ஊழகெநசநnஉந" -இல் உரையாற்றினார்.
1958 ஏப்ரல் 10 - சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி 14 நாட்கள் சிறை தண்டனை - யாழ் கோட்டை சிறையில் அடைப்பு.
1958 மே - ஊரடங்குச் சட்டம் அமுலாகியிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு தோணியில் செல்லுதல். மட்டக்களப்பில் கைதாகி கொழும்பு கொண்டு செல்லப்பட்டு 4 மாதம் தடுப்புக் காவலில் வைக்கப் பெற்றார்.
1958 நவம்பர் - தீண்டாமை ஒழிப்பு மாதம் ஆலய, தேனீர்க் கண்ட பிரவேசம்.
1959 ஜுன் 2ஆம் நாள் இரண்டாவது மகன் பகீரதன் பிறப்பு.

1960 மார்ச் பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லுதல்.
1960 ஜுலை பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லுதல்.
1961 தனிச்சிங்களச் சட்ட அமுலை எதிர்த்து தமிழ்பிரதேசமெங்கும் அரச தலைமையலுவலகம் முன் (கச்சேரி) சத்தியாக்கிரகம். தமிழரசு தபால் சேவை நடத்தப்பட்டது.

1961 சத்தியாக்கிரகத்தை முறியடிக்க கணவன் மனைவி இருவரும் ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் கைது. 6 மாதம் தடுப்புக் காவல் - பனாகொடை இராணுவமுகாமில்.
1961 ஒக்டோபரில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை.
1963 ரி.பி.இலங்கரட்னாவுக்கு யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி - பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

1965 மார்ச் பொதுத் தேர்தல் - வட்டுக்கோட்டை பாராளுமன்றப் பிரதிநிதியாக 11,000க்கும் மேற்பட்ட வாக்குகளில் வெற்றி பெற்றார்.
1966 2ஆவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் பங்குபெறுதல்.
1967 கட்சியைப் பலப்படுத்துவதிலும் பண்டா - செல்வா ஒப்பந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்குபெறுதல்.
1968 மலையகமெங்கும் இலங்கை தொழிலாளர் கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சுற்றுப்பயணம்.

1969 தமிழரசுக் கட்சியின் செயலாளராக உருவில் 11வது மாநாட்டில் தெரிவானார்.
1970 பொதுத் தேர்தல் - வட்டுக்கோட்டையில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
1971 பிப்ரவரி 7ஆம் நாள் தமிழர் இயக்கங்கள் வல்வெட்டித்துறையில் ஒன்றுபட்ட போது முன்னின்று செயற்பட்டார்.
1972 மே 14ஆம் நாள் தமிழர் கூட்டனி திருமலையில் உதயமாக முன்நின்று உழைத்தார்.

1972 மே 22 புதிய அரசியலமைப்புச் சட்டத்தை யாழ். நாவலர் மண்டபத்தில் தீக்கிரையாக்கினார்.
1973 மல்லாகம் மாநாட்டில் 7.9.1973 அன்று தமிழரசுக்கட்சியின் 6ஆவது தலைவராக ஏகமனதாகத் தெரிவு.
1974 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அதன் வெற்றிக்கு தீவிரமாக உழைத்தவர்.

1975 வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடும் தனது நீண்டகாலக் கனவான தமிழீழ இலட்சியத்தை முன்னெடுத்து மாநாட்டுத் தீர்மானமாக நிறைவேற்ற பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதல் இணைச்செயலாளர் நாயகங்களாக திரு.சிவசிதம்பரமும், இவரும் தெரிவானார்கள். இதைத் தொடர்ந்து இறக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாகத் திகழ்ந்தார்.

1975 வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை துண்டுப் பிரசுரமாக விநியோகித்தமைக்காகக் கைதாகி - 'Trailat Bar' என்ற சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். தடுப்புக்காவலில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டார்.
1975 'Trailat Bar' நீதிமன்றம் அதிகாரமற்றது என்ற தீர்ப்பைத் தொடர்ந்து விடுதலையானார்.

1975 சட்டமறுப்பில் சிறைசென்ற திரு. ஆனந்தசங்கரியையும் ஏனைய தொண்டர்களையும் விடுதலையாகி வரவேற்கச் சென்ற போது யாழ்கோட்டை பொலிஸ் நிலையம் முன்னால் தாக்கப்பட்டார்.
1977 தந்தை செல்வாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாக தெரிவானார்.
1977 ஜுலை தேர்தல் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவானார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவானர்.

1977 ஓகஸ்டு யாழ் பஸ்நிலையத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டார்.
1978 இந்தியா விஜயம், தமிழீழப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் பிரச்சாரம். இந்திய அரசை
1978 இங்கிலாந்தில் Co-ordinating Coaaitee நிறுவுதல். (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு)
1981 பொலிசாரின் யாழ் நூல்நிலைய எரிப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலக எரிப்பு,

1982 Coaan Wealth Conference - Nogria பங்கேற்பு
1982 அமெரிக்க மசற்சுசெற் தமிழீழ தீர்மான பத்திரத்தைப் பெறல்.
1983 ஜனவரி 5வது உலகத்தமிழ்மாநாடு. மதுரை பிரதானப் பேச்சாளர்.
1983 ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து மாறுவேடத்தில் கொழும்பு வந்து இந்தியாவிற்கு செல்லல்.

1983 (தொடர்) தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்தபின் டெல்லி சென்று அன்னை இந்திராவைச் சந்தித்தார். (ஆகஸ்ட் 13) ஆகஸ்ட் 14 - சர்வதேச பத்திரிகையாளர்களின் சந்திப்பு - வெற்றிகரமாக நடந்தேறியது. ஆகஸ்ட் 15 - இந்திய குடியரசு தின விழாவில் அரச பிரதிநிதியாக பங்கேற்பு.
1983 அக்டோபர் இங்கிலாந்திற்கும் ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் பிரசாரம்.
1983 பிரிவினைக்கெதிரான உறுதிப்பிரமாணம் செய்ய மறுத்து பாராளுமன்றப் பதவியையும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் தூக்கி வீசுதல்.
1984 கொழும்பில் வட்ட மேசை மாநாடு, பு.பார்த்தசாரதியின் (Special envoy) அனுசரணையுடன்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தல்
1986 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம்.
1987 இந்தியாவில் இருந்து மீண்டும் கொழும்பு திரும்புதல்
1988 பாராளுமன்றத் தேர்தல் மட்டக்களப்பில் போட்டியிட்டு பின் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லல்.

1989 இந்திய இலங்கை ஒப்பந்த நடைமுறை பற்றிய பங்களிப்பு.
1989 ஜுலை 13ஆம் நாள் கொழும்பில் கொலை செய்யப்படல். (இறக்கும்போது வயது 62)

அ.அமிர்தலிங்கம் பற்றிய வாழ்க்கை குறிப்பு

பிறப்பு : 26.08.1927
இடம் : இலங்கை - வட மாகாணம்
வலிமேற்கில் உள்ள பண்ணாகம்.
தந்தை : சின்னட்டியார் அப்பாப்பிள்ளை (1879 - 1952) ஸ்டேசன் மாஸ்டர் மலேசியா.

1925 - 1940 வரை சங்கானை கிராமசபை உறுப்பினர் பண்ணாகம் மெய்கண்டான் பரிபாலன சபையில் சமூக சேவை.
தாய் : வள்ளியம்மை அப்பாப்பிள்ளை
ஆரம்பக்கல்வி : 1931 முதல் 1936 வரை பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்,
இடைநிலைக்கல்வி : 1936 முதல் 1946 வரை சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி,
1946இல் இக்கல்லூரியிலிருந்து முதன்முதலில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர் என்ற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம் : 1946 முதல் 1948 B.A. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
சட்டக்கல்லூரி : 1948 முதல் 1951 வரை முதல் வகுப்பில் சித்தியடைந்தார். சட்டக்கல்லூரி தமிழ்ச் சங்கத்தை 1950இல் ஸ்தாபித்தார். அதன் தலைவராக 1950 - 1951இல் கடமையாற்றினார். 1951இல் நியாயவாதியாகத் திறமைச் சித்தி எய்தினார்.


10 July 2009

பின்னழகில் மயங்கிய ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிரேசில் பெண் மணியின் பின்னழகை இரசிப்பதையும், பராக் ஒபாமாவை சுவாரஸ்யமாக ரசிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸியையும் காணலாம்.
இத்தாலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்ள வந்தபோதே ஒபாமாவின் இந்த விநோத வீக்நெஸ் பொய்ன்ட் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


04 July 2009

1000 ஆண்களுடன் உறவு கொண்ட பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த 32 வயதாகும் அமி மிக்கேல்ஸ், என்ற பெண் தான் இதுவரை 1000 ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் பெண்ணிடம் சிகரெட், போதைப் பொருள், மது என எந்தப் பழக்கமும் இல்லை. இவரிடம் உள்ள ஒரே ஒரு பழக்கம் தினசரி யாருடனாவது செக்ஸ் வேண்டும்.

இவரது பெயர் அமி மிக்கேல்ஸ். ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார். வயது 32. இந்த வேலையைப் பயன்படுத்தி தனது செக்ஸ் ஆசையைப் பூர்த்தி செய்து வந்துள்ளார் அமி.

இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் செக்ஸ் மட்டும் தினசரி கண்டிப்பாக வேண்டும்.
நான் இருந்த தொழில் அதற்கு வடிகாலாக அமைந்தது. தினசரி பலரும் என்னிடம் வீடு தேடி வருவார்கள். அவர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து எனது ஆசையை அவர்கள் மூலம் பூர்த்தி செய்து கொள்வேன்.


எனக்குப் பிடித்தமானவர்களுக்கு நல்ல வீடாக பார்த்துக் கொடுப்பேன். போனஸாக என்னையும் கொடுப்பேன். அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, எனக்கும் வேலை முடிந்த மாதிரி இருக்கும்.
இதுவரை 1000 பேருடன் உறவு வைத்துள்ளேன். ஆனால் நான் விப்ச்சாரப் பெண் அல்ல. மாறாக செக்ஸ் அடிமை.

எனக்கு கல்யாணமானதும் இதை நான் விட்டு விட்டேன். ஆனாலும், எனது கணவரை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து, கல்யாணம் முடிவதற்குள் முப்பது முறை அவருக்குத் தெரியாமல் பிறருடன் தொடர்பு வைத்திருந்தேன்.
எனது 17 வயதிலிருந்தே இந்த செக்ஸ் உறவைத் தொடங்கி விட்டேன். இதை என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கு முன்பு ஒரு போய் பிரண்ட் இருந்தான். ஆனால் அவன் மட்டும் எனக்குப் போதவில்லை. வேலை பார்த்த இடத்திலும் ஒருவன் கிடைத்தான்.

நானும், அவனும், அவனது நண்பனும், ஒருமுறை வாடகைக்கு விடப்படுவதாக இருந்த வீட்டில் தங்கி இன்பம் அனுபவித்தோம். அதை மறக்க முடியாது. இந்த இன்பத்தை ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும்.
மெக்டனால்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனது பொஸுடன் உறவு கொண்டேன். அதே நேரத்தில் இன்னொருவரையும் பிடித்து விட்டேன். எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு இன்பமாக இருப்போம்.

நான் அறையைத் தயார் செய்து காத்திருப்பேன். அவனோ, பாத்ரூமுக்கு வருமாறு கூறுவான். இவனை விட பொஸ் பரவாயில்லை என்று கூறிக் கொண்டே போகிறார் அமி மிக்கேல்ஸ்.

கறுமம் கறுமம்... என்ன கொடுமையோ தெரியல......

29 May 2009

இலங்கை வானொலி பற்றிய சிறுகுறிப்பு

இலங்கை வானொலியானது இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பி.பி.சி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.


1922இல், தபால் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும்.

ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.

கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பியானது போரில் கைப்பற்றப்பட்ட ஜேர்மனிய நீர்மமூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோவாற்று வலுக்கொண்ட பரப்பியைக் கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டுப் படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேச படைகளுக்கு செய்திகள் ஒலிப்பரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.


இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.ஆம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது.

1966ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.மே 22ஆம் திகதி இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது.
இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.

20 May 2009

நீலப்படம் பார்த்த சோகக் கதை

பாடசாலை காலத்தில் செய்த குறும்புகள், வதைகளை, வாத்திமாரின் அடிகள், ஆலோசனைகள் போன்ற பல சம்பவங்களை மீட்டுப்பார்க்கும்போது பள்ளி மாணவனாக மாறிவிடுவோமல்லவா? அதுஒரு கனாக்காலம்.பாடசாலையில் செய்த ஒரு குறும்பு தான் இது. அதாவது 8,9ஆம் ஆண்டுகளில் என்று நினைக்கிறன், படித்துக் கொண்டிருந்தபோது எனது நண்பர்கள் பாடசாலையை கட் அடித்துவிட்டு நீலப்படம் பார்க்க பாடசாலைக்கு வந்து ‘வந்தேன் வாத்தியாரே’ என்று பதிவுசெய்து விட்டு அதுதான் ரிஜிஸ்ட்டர் செய்துவிட்டு வாத்திமாருக்கு அல்வாவை வைச்சுவிட்டு ஏதோஒருவாறாக சென்றுவிட்டார்கள்.


வகுப்பில் இருந்ததோ 40 பேரில் 30 பேர்தான். பாடசாலை 2 மணிக்கு முடிவடைந்து விட்டது. இடையில் சென்றவர்கள் வரவில்லை. ஏதோ நீலப்படம் பார்க்க சென்றுவிட்டார்கள் என்று ஒழுங்குபடுத்தல் (டிசிபிளின்) வாத்தியாருக்கு தெரிந்துவிட்டது. மறுதினம் பாடசாலைக்கு அனைவரும் வந்தார்கள்.
நீலப்படம் பார்க்கசென்றவர்களை வெளியில் வரசொன்னார் டிசிபிளின் வாத்தியார்.என்ன சேர் நீலப்படம் என்று விழித்ததார்கள். இடையில் ஓடியவர்கள் வெளியில் செல்லசெல்ல அடி கும்மாங்குத்து என்று அடி விழவிழ நீலப்படமா பார்க்கின்றீர்கள் என்று கேட்டுகேட்டு அடிவிழுந்துகொண்டிருக்கும் போது ஒரு மாணவன் சொன்னான் சேர், நாங்கள் நீலப்படம் பார்க்க, அந்தப்படம் எல்லாக் கலரிலயும் தான் வந்தது. ஏன் அடிக்கிறீங்கள் என்று கேட்டான்.


எல்லாக்கலரிலயும் தானே வந்தது என்று சொல்லிசொல்லி வாத்தியிடம் வாங்கிகட்டினார்கள். அதுக்கு பின்னர் தான் தெரியும் அந்தப்படத்தை (செக்ஸ் படத்தை) நீலப்படம் என்றும் சொல்லுறவங்கள் என்று.

பாடசாலையில் படித்த எனது அருமை நண்பர்களுடன் கதைக்கும்போது இதைச் சொல்லிசொல்லி சிரிப்பார்கள். என்றும் அழியாமல் நிற்கும் எல்லாக்கலர் படம்.

01 May 2009

Privacy Policy

Privacy Policy for www.kt-sarangan.blogspot.com

If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at ktsarangan2006@gmail.com.

At www.kt-sarangan.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.kt-sarangan.blogspot.com and how it is used.

Log Files
Like many other Web sites, www.kt-sarangan.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable.


Cookies and Web Beacons
www.kt-sarangan.blogspot.com does use cookies to store information about visitors preferences, record user-specific information on which pages the user access or visit, customize Web page content based on visitors browser type or other information that the visitor sends via their browser.


DoubleClick DART Cookie

.:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.kt-sarangan.blogspot.com.

.:: Google's use of the DART cookie enables it to serve ads to your users based on their visit to www.kt-sarangan.blogspot.com and other sites on the Internet.

.:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html

Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include .......

These third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.kt-sarangan.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see.

www.kt-sarangan.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers.

You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.kt-sarangan.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites.

If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites.

09 April 2009

புரோட்பேன்ட் பாவனையில் சீனர்கள் முதலிடத்தில்

இன்றைய தகவல்தொழில்நுட்ப உலகத்தில் இணையம் எனும் இன்டர்நெற்றின் பயன்பாடு மிகமுக்கிமானதொன்றாகும். அந்த இன்டர்நெற் இணைப்பில் பல வகையான இணைப்புக்கள் இருந்தாலும் புரோட்பான்ட் வகை இணைப்பு மிகவும் முக்கியமானதொன்றாக கருதப்படுகிறது.


காரணம் இதன் தெளிவு, வேகத் தன்மை, இலகுவாக பயன்படுத்தக்கூடியது போன்ற பல காரணங்களினால் புரோட்பான்ட் இணையம் மூலைமுடுக்கெல்லாம் பரவிவருகின்றமை அனைவரும் அறிந்ததே.
அந்தவகையில் இன்றைய நிலையில் இணைய இணைப்பை பயன்படுத்துபவர்கள் என்ற வகையில் சீனா முதலிடத்தை பெற்றுள்ளது, அடுத்ததாக அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் திகழ்கின்றன.

எனினும் இணையஇணைப்பை குறைந்த விலையில் சந்தாதாரர்களுக்கு அதாவது சாதாரண மக்களுக்கு விநியோகிப்பதில் யப்பான் முதலிடத்தையும் பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் சுவீடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

அதேபோல் உலகத்திலே புரோட்பான்ட் இணைப்பு யப்பானில் தான் மிகவேகமாகவும் குறைந்த செலவிலும் மக்களுக்கு (23சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர்) வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சும்மா விளம்பரங்களைக் கிளிக் செய்யுங்கள்.

07 April 2009

போர்க் களமாகியுள்ள போராட்டம்


லண்டனில் இன்று(07-04-09) இடம்பெற்ற ஈழத்தமிழர்களின் போராட்ட போர்கள காட்சிகளே இவை.

31 March 2009

ஏ. ஆர். ரஹ்மான் சொட்கள்

ஏ.சே.திலீப்குமார் இயற்பெயர் கொண்ட ரஹ்மான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி பிறந்தார். அ. இர. இரகுமான்(அல்லா இரக்கா இரகுமான்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
1992 ஆம் ஆண்டு இசையுலகத்தில் காலடி எடுத்துவைத்த ரஹ்மான் இன்று ஒஸ்கார் வரை சென்றிருக்கிறார். இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவராக ஆகிய தொழில்வகையை நன்குகற்றறிந்தவர் தான் ரஹ்மான். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பல ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது, பப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹொலிவூட் திரைப்படமான ஸ்லம்டோக் மில்லியனர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. அதுமட்டுமல்ல ஒஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.81 ஆவது, 2009 ஆம் ஆண்டின் பிரமாண்டமான ஒஸ்கார் விருது விழர்வின்போது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.
2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.

22 March 2009

கருணாநிதியின் வாழ்க்கைக் குறிப்புகள் சில..

கலைஞர் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் திருக்குவளை எனும் இடத்தில் 1924ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் திகதி பிறந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் மிக நீண்டகாலத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமாவார். திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி தமிழுலகுக்கு அறிமுகமான கருணாநிதி, 1969இல் தமிழகத்தின் முதல்வரானார்.


தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு.முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதிக்கு பத்மாவதி, ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் ஆகிய மூன்று மனைவிமார்களுடன் 6 பிள்ளைகள் முத்து, அழகிரி, ஸ்டான்லின், தமிழரசு ஆகிய 4 மகன்களுடன் கனிமொழி, செல்வி ஆகிய 2 மகள்கள் கொண்ட சிறிய குடும்பம் தான் கலைஞர் குடும்பம்.


தனது மாணவர் பருவத்தில் கருணாநிதி கல்வியில் நாட்டம் காட்டவில்லை. இருப்பினும் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தனது விடலைப் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைக் கருணாநிதி உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்திற்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருப்பெற்றது.
அரசியல் ஈடுபாடு முழு நேர அரசியல் ஈடுபாட்டுடன் தன் பதினான்காவது வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டவர். ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற திராவிட இயக்கத்தின் முதலாவது மாணவர் பிரிவைத் தோற்றுவித்தவர். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்த உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தி.மு.க.வின் பொருளாளராக 1961ஆம் ஆண்டு பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி, 1957ஆம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் இவர் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
1969-1971 — அண்ணாதுரை மறைவிற்கு பின் முதல் முறை ஆட்சி
1971-1974 — இரண்டாவது முறையாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சி
1989-1991 — நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மூன்றாம் முறை ஆட்சி
1996-2001 — நான்காம் முறை ஆட்சி
2006-இன்றுவரை — ஐந்தாம் முறையாக ஆட்சி

தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அக்கட்சி வலுவடைந்தபின் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு இவரை உள்ளாக்கியது. திராவிடக் கழக கொள்கைக்கு முற்றிலும் முரணான இச்செயலை அரசியல் சானக்கியத்தனம் எனக் கருணாநிதியின் ஆதரவாளர்கள் சொல்லிச் சமாளித்தனர். தமிழே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி வந்த கருணாநிதி, 2009இல் ஆயிரமாயிரம் தமிழர்களை இலங்கை பேரின அரசு இனப்படுகொலை செய்யும்போது, மருத்துவமனையில் காலங்கழித்தது, அவரது நாடகத் தன்மையைப் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

கருணாநிதியை ஆதரித்து வந்த தமிழ் தேசியவாதிகளிடத்திலும் அவருக்கிருந்த ஆதரவு சரிந்தது. உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் காலத்தைக் கழிக்கும் வயோதிபர் தமிழகத்தின் முதல்வராக இருப்பது முறைதானா என்ற கேள்வியும் எழும்பத் தொடங்கியது. 1984-1986நாற்பதாண்டுகளுக்கும் மேலவை சட்டமன்றப் பேரவை, மேலவை உறுப்பினராக இருந்தார். 1957 -முதல் 2006 வரை போட்டியிட்ட அனைத்து சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களிலும் வென்றுள்ளார்.எதிர்க் கட்சித் துணைத் தலைவர்-1962-1967.சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக 1977 முதல் 1983 வரை பணியாற்றியுள்ளார்.
1967-69 இல் தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1969 முதல் 1971 வரை 1971 முதல் 1976 வரை 1989 முதல் 1991 வரை 1996 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர். பல அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், ரயில்வே நிலையப் பெயர் மாற்றப் போராட்டம், விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றுள்ளார்.

1983இல் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகப் போராடும் வகையில் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார். ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, சங்கத் தமிழ், குறளோவியம், பொன்னர் சங்கர், திருக்குறள் உரை மற்றும் உரைநடையிலும் கவிதையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்குமேடை, காகிதப் பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் மற்றும் பல மேடை நாடகங்களை எழுதியது மட்டுமல்ல, ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமகன். தேவகி, பராசக்தி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா, அம்மையப்பன், மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, ராஜா ராணி, புதையல், புதுமைப்பித்தன், எல்லோரும் இந்நாட்டு மன்னர். குறவஞ்சி, தாயில்லாப் பிள்ளை, காஞ்சித் தலைவன், பூம்புகார், பூமாலை, மணிமகுடம், மறக்கமுடியுமா?, அவன் பித்தனா?, பூக்காரி, நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், நியாயத் தராசு போன்ற எழுபதுக்கும் மேற்பட்ட திரைக்காவியங்களையும் எழுதியது மட்டுமல்ல கண்ணம்மா, மண்ணின் மைந்தன், பராசக்தி, புதிய பராசக்தி, மந்திரகுமாரி, பாலைவனப்பூக்கள், மனோகரா, உளியின் ஓசை என பல திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார் நம்ம கருணாநிதி.
மே 13, 2006இல் தனது 82ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் அதிக வயதுகொண்ட முதலமைச்சர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்ட கருணாநிதி, இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

1971இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் ‘முனைவர் ‘ பட்டம்; தி கவுன்சில் ஒப் டாக்டர் ஒப் பிலாஸபியால் வழங்கப்பட்ட ‘தமிழவேள்’ பட்டம் வழங்கப்பட்டது மட்டுடல்ல “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ‘இராஜராஜன் ‘ விருதும் வழங்கப்பட்டது. ‘குடியரசு’ பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ‘முத்தாரம்’ சஞ்சிகைக்கு உயிரூட்டினார்.
தனது சிறுவயதிலேயே ‘முரசொலி ‘ என்ற பத்திரிகையை முதலில் மாத இதழாக, பின்னர் வார இதழாக, பின் நாளிதழாகத் தொடக்கி நடத்தியவர். இப்பத்திரிகையே தற்போது இவருடைய எண்ணங்களை, எழுத்தை, சிந்தனையை, குரலை வெளிப்படுத்தும் இதழாக வந்து கொண்டிருக்கிறது.
மாநில அரசின் செய்தி வெளியீடாக வரும் படச்செய்தி சுருளை தோற்றுவித்தவரும் இவரே. அரசு இதழான ‘தமிழரசு ‘ இதழை தமிழிலும் ஆங்கிலத்திலும் தோற்றுவித்தவர் கருணாநிதி தான். எல்லோராலும் அன்பாக ‘கலைஞர்’ என்று அழைக்கப்படுபவர். தில்லையாடி வள்ளியம்மை நகர், கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகிய பயனுள்ள கட்டிடக் கலையையும் உருவாக்கி நற்பணிகளையும் செய்துள்ளார்.


மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர், நிர்வாகி, நாடகாசிரியர், பத்திரிகை ஆசிரியர், வெளியீட்டாளர், எழுத்தாளர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த கவிஞர் மற்றும் ஜனநாயகவாதி போன்ற பல துறைகளில் கலைஞரை அசைக்கமுடியாது என்பது குறிப்பிட்டாகவேண்டும்.


19 March 2009

இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கைகள் சில.....

உலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை பிரகாரம் கடந்த வருடத்தின் இறுதியில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது என ஊரோடி (oorodi.com) இணையத்தளத்தை மேய்ந்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடுவாரியாக இணையப்பயனாளர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)

1. சீனா - 179.7

2. ஐக்கிய அமெரிக்கா - 163.3

3. ஜப்பான் - 60.0

4. ஜேர்மனி - 37.0

5. ஐக்கிய இராச்சியம் - 36.7

6. பிரான்ஸ் - 34.0

7. இந்தியா - 32.1

8. ரஷ்யா - 29.0

9. பிரேசில் - 27.7

10.தென்கொரியா 27.3

11.கனடா - 21.8

12. இத்தாலி - 20.8

13. ஸ்பெயின் - 17.9

14. மெக்சிகோ - 12.5

15. நெதர்லாந்து - 11.8

15 March 2009

ஓமக்குச்சி வாழ்க்கை வரலாறு சிறு குறிப்பு

ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த 73 வயதான நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், சென்னையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்தார்.எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.
குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், சூரியன், ஜென்டில்மேன், இந்தியன் உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்து இருந்தார்.

இரண்டு வருடமாக தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் சிவராமன் தெருவில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றார். அவருடைய உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் தனது 73வது அகவையில் மரணம் அடைந்தார்.

ஓமக்குச்சி நரசிம்மனின் உடல் சென்னை திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அவருடைய உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழில் 'அவ்வையார்' (1953) படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானார். 'திருக்கல்யாணம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, "திருக்கல்யாணம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' போன்ற ஹிட் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.


"இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், "தலைநகரம்' படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இருக்கிறார். 'இந்தியன் சமர்' என்ற ஆங்கில படம் உட்பட மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் ஓமக்குச்சி நடித்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார், அர்ஜுன் போன்ற பலருடன் நடித்துள்ளார். கவுண்டமணியுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார். நாடக இயக்குனர் தில்லைராஜனின், "நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கரெக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.

ஓமக்குச்சி நரசிம்மன் மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் காமேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இரண்டாவது மகளான நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவரும் தந்தையின் இறுதிக்கிரியைக்காக சென்னை திரும்பினார்.

மரணம் அடைந்த ஓமக்குச்சி நரசிம்மன் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்.ஐ.சி.யில் பணியாற்றிய இவர் பழைய நடிகர் சுருளிராஜனுக்கு நெருக்கமானவர்.

150-க்கும் மேல் நாடகங்களில் நடித்துள்ளார். "நாரதரும் 4 திருடர்களும்" என்ற நாடகத்தில் ஓமக்குச்சி என்ற பெயரில் நடித்தார். அதுவே பின்னாளில் அவர் பெயரோடு இணைந்தது.

"சூரியன்" படத்தில் ஓமக்குச்சி நரசிம்மன் மேல் எரிச்சலாகும் கவுண்டமணி "நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா" என்று பேசும் வசனம் பிரபலம். அதேபோல், "இந்தியன்" படத்தில் கவுண்டமணியிடம் கைகள் நடுங்கி டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது... "முதல்வன்" படத்தில் வடிவேலுவின் இடுப்பில் குத்தி ""போடா பண்ணி"" என திட்டவைத்து மேலதிகாரியிடம் மாட்டி விடுவது... போன்றவையும் வயிறுநோக சிரிக்க வைக்கும் காமெடிகள். காதலன் படத்தில் வடிவேலுவுக்கு இவருக்குமான நகைச்சுவை காட்சிகள் பெரும் அளவில் பேசப்பட்டது.

'நாரதரும் 4 திருடர்களும்' நாடகத்தில், ஓமக்குச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலிருந்து ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைக்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல தனது ஒ‌‌‌‌ல்‌லியான தேக‌த்தா‌ல் ஓம‌க்கு‌ச்‌சி எ‌ன்ற அடைமொ‌ழியை பெ‌ற்றதுட‌ன் ர‌சிக‌ர்க‌ள் ம‌ன‌திலு‌ம் ‌நீ‌ங்காத இட‌ம் ‌பிடி‌த்தவ‌ர் இவ‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

14 March 2009

கி.மு காலத்தில் இருந்த இணையத்தளம் எப்படி இப்ப எப்படி இருக்கிறது என அறிய

உங்கள் இணையத்தளம் கி.மு காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்ற மாற்றங்களை தெரிந்து கொள்ள உதவும் தளம் தான் http://www.archive.org/


இத்தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் அந்த இணையத்தளமானது நீங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.


நீங்கள் படத்தில் பார்ப்பது 1996 ஆம் ஆண்டு yahoo முதல் முதலாக வெளியிட்ட இணையப் பக்கமாகும். நீங்கள் விரும்பிய முகவரியைக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்ற மாற்றத்தையும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் இடையில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றத்தையும் ஆல்பம் போல படம் பிடித்துக்காட்டுகிறது இந்த அற்புதமான இணையத்தளம்.


ஒருமுறை சென்று உங்கள் இணையத்தள முகவரியைக் கொடுத்துப் பாருங்கள் எப்படி இருந்த இணையத்தளம் இப்படியாகி விட்டது என்று சொல்லுவீங்கள்.

11 March 2009

மிஸ்கோலை மிஸ்ஸாக்குவது எப்படி?

மொபைலில் மிஸ்கோல் விடும் பெண்களை மிஸ்ஸாக்குவது எப்படி என்று கேட்கின்றீர்களா? வெரி சிம்பிள் உங்கள மொபைலை எடுத்து மிஸ்கோல் விடும் போனுக்கு கோல் எடுத்து மிஸ் நீங்க மிஸ்ஸாக விரும்புகின்றீர்களா என்று கேட்டால் போதும் ஓகே சொன்னால் பிறகென்ன புக் பண்ணவேண்டியது தானே.
என்டு சொல்லப்போறன் எண்டா நினைச்சீங்க பொடிப் பயலுகளா. அது தான் இல்லை.

நான் சொல்ல வந்த மிஸ் தவறப்பட்ட அழைப்பை தவறாக்குவது எப்படி என்பதே.

உங்களுக்கு வரும் அநாவசிய அழைப்புக்களை தவிர்க்க பயனற்ற டிப்ஸ் ஒன்று

மிஸ்கோல் அடிக்கும் நம்பரை பொலிஸிற்கு கொடுக்கப்போறன் என்டு மிரட்டுவதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலம் என்டால் மிஸ்கோலாக வரும் அழைப்புக்களை நிறுத்தி வைத்தல் (Block செய்தல்) அல்லது மிஸ்கோல் பார்ட்டி கோல் எடுத்தா ஓகே செய்து விட்டு வானொலி பெட்டிக்கு அருகில் வைத்தல் அல்லது பழைய பாட்டுப்போட்டு விடலாம். அல்லது ஓகே செய்து விட்டு பேசாமல் பொக்கட்டுக்குள் போட்டுவிடுங்கள். எடுத்த மிஸ்பார்ட்டி ஹலோ ஹலோ என்று லோலோ என்று பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் அதைக்கணக்கெடுக்காமல் விட்டால் சரி.

10 March 2009

வைரஸ் தொல்லையா? பரிசோதிக்கலாம் வாங்க!


நீங்கள் பயன்படுத்தும் அன்டிவைரஸ் சொப்ட்வெயார் பாதுகாப்பானதா என்று அறிய சின்ன ஒரு டெஸ்ட்டிங்.
நோட்பாட் கோப்பொன்றைத் திறந்து கீழே உள்ளதை கொப்பி செய்து அதில் ஒட்டுங்கள். அதாவது paste செய்யுங்கள். X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* பின்னர் அந்த கோப்பினை fakevirus.exe என்று பெயர் கொடுத்து உங்கள் கணினியில் டெஸ்ரொப்பிலே அல்லது வேறு எங்கயாவது சேமியுங்கள்.

நீங்கள் சேமித்த பைல் உடனேயே அழிக்கப்பட்டால் உங்கள் அன்டிவைரஸ் மென்பொருள் சிறந்தது என்பதையும் அப்டேட் செய்யப்பட்டதுதான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

உடனே அக்கோப்பு அழிக்கப்படாவிட்டால் மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். அல்லது சிறந்த வேறொரு மென்பொருளுக்கு மாறுங்கள்.

09 March 2009

காந்தியின் பொருட்கள் ஏலத்தில்சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களான க‌ண்ணாடி, பொ‌க்கெ‌ட் கடிகார‌ம், ஒரு சோடி கால‌ணிக‌ள்,
த‌ட்டு, குவளை ஆகியன நியூயோர்க்கிலுள்ள பழம்பொருள் காட்சியகத்தில் பொருட்களின் உரிமையாளரான ஜே‌ம்‌ஸ் ஓடிஸ் என்பவர் ஏலத்தில் விட்டார். 18 இலட்ச அமெரிக்க டொலர்கள் கொடுத்து, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் வாங்கியுள்ளார்.


இந்த ஏலத்தில், பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி டோனி பேடி, 1.8 மில்லியன் ( 18 இலட்சம்) அமெரிக்க டொலர்கள் கொடுத்து காந்தியின் பொருட்களை வாங்கியுள்ளார்.
இதையெல்லாம் ஏலத்தில் வாங்குகிறார்களே மகாத்மா காந்தி பயன்படுத்திய வேட்டியும் கோமணத்துண்டும் ஏன் ஏலத்தில் வரவில்லை என்று கேட்பது புரிகிறது, இதுகூடவா தெரியல 60 வருஷமாக கோவணத்துண்டு இருக்குமா என்ன?

05 March 2009

அடிவாங்கி பழகிய இலங்கை அணி

துடுப்பாட்டத்திலும் சரி அடிவாங்குறதிலும் சரி இலங்கை அணி நன்கு பழக்கப்பட்டு விட்டது.03 March 2009

இயமனின் இணையத்தளமுகவரி

இயமனின் இணையத்தளமுகவரிக்கு சென்று இறப்பை தீர்மானியுங்கள்! நீங்கள் எப்போது இறக்கப் போகின்றீர்கள் என்று இப்பவே இந்த நிமிடமே ஊகித்துக் கொள்ளலாம். எப்படி என்று கேட்கின்றீர்களா?
இதோ இயமனின் இணையத்தள முகவரி http://www.deathclock.com/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று உங்களின் பிறந்த திகதி மற்றும் உங்களின் தங்கமான மேனியின் நிறை மற்றும் மாஸ் பொடி அளவை கொடுத்ததுமே கணக்கிட்டு நீங்கள் இத்தனையாம் ஆண்டு இத்தனையாம் திகதி பாடை கட்டப்போறாங்கள். எண்டு கூட்டிக் கழிச்சு சொல்லும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எனது விபரங்களை இட்டுப் பார்த்ததில் 70 வயசில சாகப்போகின்றாய் என்று எச்சரிக்கிறது. இந்த இணையத்தளம்.

26 February 2009

ஒஸ்கார் விருது